Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
உங்கள் இதயத்தை பத்திரமாக வைத்திருக்க இந்த கிழங்கு ஒன்றே போதும்
ஆரோரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்டார்ச்சு காரணமாக இது பல ஆரோக்கிய குறைபாடுகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நமது பாரம்பரியத்தில் குழந்தைகளுக்கு சிறிய வயதில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகும்போதெல்லாம் அவர்களுக்கு ஒரு கிழங்கு மாவை மருந்தாக பயன்படுத்துவார்கள். இதனை ஆரோரூட் மாவு அல்லது கூகை கிழங்கு மாவு என்று அழைப்பார்கள். இது பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இது கிழங்கு வடிவத்தில் இருந்தாலும் அதனை நாம் மாவாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்டார்ச்சு காரணமாக இது பல ஆரோக்கிய குறைபாடுகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பதிவில் இந்த ஆரோரூட் பவுடரின் பல்வேறு மருத்துவ பயன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்
ஆரோரூட்டில் அதிகளவு கார்போஹைட்ரேட், வைட்டமின் பி9 உள்ளது. மேலும் முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சோடியம் உள்ளது. மேலும் அத்தியாவசிய சத்துக்களான ஜிங்க் மற்றும் இரும்புசத்து உள்ளது. மேலும் நிறைவுறாத மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளும் இதில் போதுமான அளவு உள்ளது. இதன் மருத்துவ பலன்கள் என்னென்ன என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

செரிமானம்
உணவுகளின் சீரான செரிமானத்திற்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமானவை, ஏனெனில் இவைதான் உணவுகளை நம் உணவுக்குழாயில் சீராக செல்ல உதவும். மேலும் உணவுகளில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களை தனியாக பிரிப்பதும் இவைதான். இது மலசிக்கல் மற்றும் வயிறுபோக்கு ஏற்படுவதை தடுக்கக்கூடியது.

இதய ஆரோக்கியம்
இதில் உள்ள போதுமான அளவு பொட்டாசியம் உங்கள் இதயத்திற்கு பாதுகாப்பை வழங்கக்கூடியது. இரத்தத்தில் உள்ள அழுத்தத்தை குறைக்க பொட்டாசியம் ஒரு தளர்ப்பான் ஆகும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது, இதனால் மாரடைப்பு, ஆர்தெரோஸ்கெலரோசிஸ் போன்ற இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படாது. மேலும் இது மூளை மற்றும் இதயத்திற்கு தேவையான சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.

குழந்தைகளுக்கு பாதுகாப்பானது
இதன் ஊட்டச்சத்துக்களும், சுவையும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. குறிப்பாக குழந்தைகளுக்கு பிஸ்கட் செய்யும்போது அதில் இந்த மாவை கலக்கலாம். இது குழந்தைகளுக்கு அலர்ஜிகள் மற்றும் ஈறுகளில் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கிறது.

சல்மோனெல்லா வைரஸை தடுக்கிறது
இது உணவு மூலம் ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக சல்மோனெல்லா வைரஸ்-க்கு எதிராக இது சிறப்பாக செயல்படக்கூடியது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகளுக்காகவே நீங்கள் இதனை டீயிலோ அல்லது சூப்பிலோ கலந்து குடிக்கலாம்.

பிறப்பு குறைபாடுகள்
வைட்டமின் பி குடும்பத்தை சேர்ந்த ஊட்டச்சத்துக்களில் மிகவும் முக்கியமான ஒரு சத்து போலேட் ஆகும். இது ஆரோரூட்டில் அதிகம் உள்ளது. ஆய்வுகளின் படி அம்மவாக போகிற பெண்களுக்கு போலேட் மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில் இது கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய்களின் குறைபாடுகளை குறைக்க உதவுகிறது. மேலும் இது செல்களின் சீரான பிரிவிற்கும், வளர்ச்சிக்கும் அவசியமானதாக இருக்கிறது.

எடை குறைப்பு
மற்ற கிழங்குகளுடன் ஒப்பிடும்போது கூகை கிழங்கில் மிகக்குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த மாவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது உங்கள் வயிறை நிறைவாக உணர செய்வதுடன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

வளர்ச்சிதை மாற்றம்
ஆரோரூட்டில் இருக்கும் அதிகளவு வைட்டமின் பி உங்கள் உடலின் சீரான வளர்ச்சிக்கு அவசியமானதாகும். உங்கள் உடலில் சீரான ஹார்மோன் உற்பத்தியிலிருந்து என்சைம்களின் உற்பத்தி, இதய ஆரோக்கியம் என அனைத்திற்கும் வைட்டமின் பி அவசியம். எனவே ஒருபோதும் அதன் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி
ஆரோரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சோர்வு, பலவீனம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக போராடக்கூடியது. மேலும் இது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது உங்கள் ஆற்றலின் அளவை அதிகரிக்கிறது.

சிறுநீர் பாதை தொற்று
ஆரோரூட்டில் உள்ள எதிர்அழற்சி பண்புகள் சிறுநீர்ப்பை தொற்று மற்றும் சிறுநீர் பை தொற்று போன்ற பிரச்சினைகளை சரிசெய்கிறது. அடிக்கடி தொற்றுநோய்களால் பாதிக்கப்படும் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications











