For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்?

  |

  பூண்டு பல சுகாதாரப் பிரச்சினைகளை குணப்படுத்தும் தன்மையுடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் உங்கள் உடலின் சுகாதாரத்தைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. ஆரோக்கியமான இதயம் மற்றும் கல்லீரலின் நலனுக்கு பூண்டால் பயக்கும் நன்மைகள் சிலவற்றை விளக்கியுள்ளோம் இங்கே. பூண்டில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள் ஆஸ்துமா போன்ற பல சுவாச நோய்களை குணப்படுத்த பங்களிக்கின்றன.

  Benefits of Garlic for Asthma Treatment, Works or Not?

  புதிதாக பறித்த ப்ரெஷ் பூண்டில் தக்காளியை விட இரண்டு மடங்கு அதிகமான வைட்டமின் "சி" இருப்பதை ஒருவேளை நீங்கள் கேட்டிருக்கலாம். இந்த மூலிகைக்கு மட்டுமே பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போன்ற சத்துக்கள் இருப்பது உண்மையில் நாம் அறிந்ததே. இந்த வைட்டமின் "சி" யே, பூண்டு ஆஸ்துமாவைப் எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டிருக்கும் காரணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஆஸ்துமா

  ஆஸ்துமா

  ஆஸ்துமா என்பது உங்கள் சுவாசப்பாதை குறுகிய மற்றும் வீங்கியுள்ள நிலை மற்றும் அதிகப்படியான சளி உருவாகும் நிலையாகும். இது சுவாசக் கஷ்டங்களை ஏற்படுத்துகிறது மற்றும் இருமல், மூச்சடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா சிலருக்கு ஒரு சிறிய தொந்தரவாக இருந்தாலும், அது தினசரி நடவடிக்கைகளை பாதிக்கும் பெரிய பிரச்சனையாகும். சிலரைக் கொல்லுமளவுக்கு அது ஆபத்தானது.

  சிகிச்சை

  சிகிச்சை

  ஆஸ்துமாவுக்கு சிகிச்சை இல்லை. ஆனால், நாம் அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த இஞ்சியின் நற்குணங்களை பயன்படுத்தலாம். ஆஸ்துமா அடிக்கடி காலப்போக்கில் மாறுவதால், உங்கள் நோய்க்குறிகளையும் அறிகுறிகளையும் கண்காணிக்க உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அந்த வழியில், அவசியமான சிகிச்சையை அவரால் உங்களுக்கு அளிக்க முடியும்.

  MOST READ: ஐப்பசி முதல் சனி... எந்தெந்த ராசிக்கெல்லாம் அதிக பலன்கள் இருக்கும்? யாருக்கு பாதிப்பு?

  அறிகுறிகள்

  அறிகுறிகள்

  சுவாசக் குறைவு - ஆஸ்துமா கொண்டவர்கள் ஒரு சங்கடமான நிலையை அனுபவிக்கிறார்கள், இதனால் நுரையீரலுக்கு காற்று முழுமையாகச் செல்வது தடுக்கப்படுகிறது.

  மார்பு இறுக்கம் அல்லது வலி - இது ஒரு கூர்மையான குத்து அல்லது ஒரு மந்தமான வலியாக இருக்க முடியும்.

  சுவாசம், இருமல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படுவதால் ஏற்படும் தூக்கமிழப்பு - இதனால் நிம்மதியான தூக்கம் தடைபடும்.

  சுவாசிக்கும் போது விசில் அல்லது மூச்சுத்திணறல் ஒலி (குழந்தைகளில் ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறியாகும்) - நுரையீரலில் இருந்து காற்று வெளியேறும்போது ஏற்படும் சுவாசக் குழாயின் அசாதாரண நிலையால் விசில் அல்லது மூச்சுத் திணறல் ஒலி ஏற்படுகிறது.

  குளிர் அல்லது காய்ச்சல் போன்ற சுவாச வைரஸ் தொற்றுகள் மூலம் மோசமடைந்திருக்கும் இருமல் அல்லது மூச்சுத் தாக்குதல்கள் - சுவாசக் கோளாறு வைரஸ்கள் இயல்பற்ற முறையில் செயல்படுவதால் அறிகுறிகளை இன்னும் மோசமாக்குகிறது மற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

  ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைந்தபட்சம் கட்டுப்படுத்த முடியுமென்பதை நாம் அறிந்திருப்பது நல்லது. இதற்க்கு ஆஸ்துமாவைக் கையாள உதவும் மூலிகைகள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பதில் "பூண்டு". ஆஸ்துமாவுக்கு பூண்டு எப்படி நன்மைகளை அளிக்கிறது? ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் இந்தப் பூண்டின் நன்மைகளைப் பாருங்கள்,

  ஹிஸ்டமின் முறிவு

  ஹிஸ்டமின் முறிவு

  பூண்டில் வைட்டமின் "சி" அதிக அளவு உள்ளதால், இது ஹிஸ்டமைன் முறிவுகளை ஊக்குவிக்கலாம். ஹிஸ்டமைன் என்பது நமது நோயெதிர்ப்பு அமைப்பால் உருவாக்கப்படும் ஒரு இரசாயனம். இது நம் உடலை தொந்தரவு செய்யும் காரணிகளிடமிருந்து நம்மை காக்க உதவும் காவலாளி ( bouncers) போல செயல்படுகிறது. ஆஸ்துமா ஒரு ஒவ்வாமைத் தூண்டல் அல்லது பொதுவாக ஒவ்வாமை என அழைக்கப்படுகிறது. அந்த ஒவ்வாமைகளை எதிர்த்து ஹிஸ்டமின் செயல்முறையைத் தொடங்குகிறது.

  இது தும்மல், இருமல், அல்லது அரிப்பு போன்ற பிரச்சனைகளை நீங்க உதவுகிறது. இதனாலேயே இது வேலையைச் செய்து முடிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. சிம்பிளி, அது நமது உடலின் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாகும். அதன் வேலை உங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுவதேயாகும். இப்போது பூண்டு ஹிஸ்டமின் முறிவைத் தூண்டுவதை நாம் அறிந்திருக்கிறோம், இது ஆஸ்துமா அறிகுறிகளை மேலும் மோசமாக்கும் ஒவ்வாமை விளைவுகளைக் குறைக்க உதவுகிறது.

  அநேக ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவது மேலும் அவர்களை மோசமடையச் செய்கிறது. பூண்டு ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் ஹிஸ்டமின் வெளியீட்டை குறைக்க உதவி அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கிறது.

  MOST READ: வெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா?

  ப்ரீ ரேடிக்கல்ஸ்

  ப்ரீ ரேடிக்கல்ஸ்

  ஆஸ்துமாவிற்கு எதிரான பூண்டின் அடுத்த நன்மை என்னவென்றால், இது ப்ரீ ரேடிக்கல்ஸை செயலிக்கச் செய்கிறது. ப்ரீ ரேடிக்கல்ஸ் என்பவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசக் குழாய்களின் சுருக்கத்தை ஊக்குவிக்கும் உறுதியற்ற மூலக்கூறுகளாகும். வைட்டமின் "சி" தவிர, பூண்டில் காணப்படும் மற்றொரு இயற்கை கலவையான அலிசின் ஃப்ரீ ரேடிக்கல்சை நடுநிலைப்படுத்த உதவுகிறது.

  பிரெஷ் பூண்டைக் கடித்தோ அல்லது நசுக்கி சாப்பிடுவதால் அலிசின் மூலக்கூறுகள் உருவாகிறது. இதன் முன்னோடிக் கூறு alliin. அமினோ அமில சேர்மான Alliin, கந்தகத்தைக் கொண்டிருக்கும் போதும், மணமற்றது. பூண்டை நசுக்கியவுடன் alliin, என்சைம் அலினேசை எதிர்கொள்கிறது, இது அலிசினை உருவாக்குகிறது. அலிசின், பூண்டின் உடல்நல நன்மைகளுக்குப் பொறுப்பேற்கிறது மற்றும் அது ஒரு கடுமையான வாசனையைத் தருகிறது.

  ப்ரோஸ்டேசைக்லின்கள் உற்பத்தி

  ப்ரோஸ்டேசைக்லின்கள் உற்பத்தி

  ஆஸ்துமாவுக்கு எதிரான பூண்டின் மற்றொரு நன்மை உடலில் ப்ரோஸ்டேசைக்லின்களைத் தூண்டுவதாகும். ப்ரோஸ்டேசைக்லின்கள் லிப்பிட் மூலக்கூறுகள் ஆகும், அவை சுவாசக் குழாயை திறக்க உதவுவதால் ஆஸ்துமா நோயாளிகள் சுவாசிக்க எளிதாகிறது.

  மக்கள் ஆஸ்துமாவைக் கொண்டிருப்பது, சுவாசக்குழாயின் காற்றுப் பாதை சாதாரணமாக இருந்ததை விட குறுகியதாக இருப்பதால், சுவாசிக்கக் கூடிய சிரமங்களை அவர்கள் பெறுகிறார்கள். இது சாதாரணமாக மூச்சுத் திணறலை உண்டாக்குகிறது மற்றும் பீதியை ஏற்படுத்துகிறது. ப்ரோஸ்டேசைக்லின்கள் இயற்கையாக சுரத்தல் உடலின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு வடிவம் ஆகும். பூண்டு அதன் இயற்கை கலவைகள் மூலம் ப்ரோஸ்டேசைக்லின்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

  MOST READ: எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? எப்படி தேய்க்க வேண்டும்?... தெரிஞ்சிக்கோங்க...

  பாக்டீரியா எதிர்ப்புத்திறன்

  பாக்டீரியா எதிர்ப்புத்திறன்

  பாக்டீரியா எதிர்ப்புத்திறன் கொண்ட அலிசினைக் கொண்டிருக்கும் பூண்டு ஒரு பயனுள்ள பாக்டீரியா கொலையாளியாகச் செயல்பட முடியும். இது பாக்டீரியாவுடன் தொடர்புடைய ஆஸ்த்துமாவின் மோசமான அறிகுறிகளைத் தடுக்க ஏதுவாக உள்ளது. நம் வீட்டிலுள்ள தூசி கூட ஆஸ்துமாவைத் தூண்டுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பாக்டீரியாவின் துணை உற்பத்திப் பொருட்களே இதற்குப் பொறுப்பு. நாம் இந்த துணை உற்பத்திப் பொருட்களை எண்டோடாக்ஸின்கள் என்று அழைக்கின்றோம். உயர் எண்டோடாக்சின் அளவுள்ள வீடுகளில் வாழும் மக்களுக்கு ஆஸ்துமா இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

  ஆஸ்துமாவைத் தூண்டுவதற்கான மிகப்பெரிய காரணியாக படுக்கையறையில் உள்ள தூசி இருக்கும். படுக்கையறைத் தரை மற்றும் படுக்கையில் உள்ள தூசியிலிருந்த எண்டோடாக்சின்களே ஆஸ்துமாவை வயது வந்தோரில் அதிகமாக ஏற்படுத்தியதாக ஆய்வுகள் காட்டுகிறது. எனவே, பூண்டு ஆஸ்துமாவைத் தூண்டுகிற பாக்டீரியாவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

  இவைகளே ஆஸ்துமாவுக்கு எதிரான பூண்டின் நன்மைகள் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். ஆஸ்துமா நோயாளிகள் இயல்பாகவே நம்மைச் சுற்றியுள்ளார்கள். ஒருவேளை அது உங்கள் அம்மா, அப்பா, உடன்பிறப்புகள், நண்பர்கள் அல்லது உங்களுக்கே கூட இருக்கலாம். அது யாராயிருந்தாலும், அனைவருக்கும் ஆஸ்துமா சிகிச்சைகள் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பரப்ப வேண்டும்.

  எப்படி சாப்பிட வேண்டும்?

  எப்படி சாப்பிட வேண்டும்?

  • ஆஸ்துமாவுக்கு பூண்டைப் பயன்படுத்தும் போது, சமைக்கப்பட்ட பாகங்களுக்குப் பதிலாக ப்ரஷ் பூண்டைத் தேர்வு செய்யுங்கள், ஏனெனில் சமைக்கும் போது அலிசின் திறம்படச் செயல்படாது.

  • உங்கள் தினசரி உணவில் சில விழுதுகள் பூண்டைச் சேர்க்கவும்.

  • அதை நறுக்கி சூப், சாலட், பால் அல்லது உங்களுக்கு தேவையானவற்றில் சேர்க்கவும்.

  • பூண்டுச் சாறு மற்றும் பூண்டுத் தேயிலை வடிவங்களில் கூட நீங்கள் பூண்டைச் சாப்பிட முடியும். இரண்டுமே அறிமுகமில்லாததாகத் தெரிகிறது, இல்லையா? ஆனால், அதை முயற்சியுங்கள்.

  பூண்டுச் சாறை தயாரிக்க, நீங்கள் சில பூண்டு விழுதுகளை நசுக்கி சிறிது தண்ணீரைச் சேர்க்க வேண்டும். அதிலிருந்து சாறு எடுத்து தினமும் 3 முறை எடுத்துக் கொள்ளவும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Benefits of Garlic for Asthma Treatment, Works or Not?

  In addition to its effects on histamine release and breakdown, garlic can boost the ability of the body to create prostacyclins.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more