For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமாகிட்டே போகுதா? இந்த தேன் இஞ்சி பூண்டை சாப்பிடுங்க...

உயர் கொழுப்பு உடலில் அதிகமாகிக் கொண்டே போவதைக் கட்டுப்படுத்த தேன், இஞ்சி மற்றும் பூண்டை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

|

உயர் கொழுப்பு பாதிப்பு பொதுவாக இதய நோய்க்கு வழி வகுக்கும். ஆகவே உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுபாட்டில் வைத்திருப்பது நல்லது. உயர் கொழுப்பு பாதிப்பு உள்ளவர்கள் நிச்சயமாக அவர்களின் கொழுப்பு அளவை சீராக கட்டுபாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

cholesterol

அதற்கான தீர்வாக ஒரு பானம் உள்ளது. அது இஞ்சி, பூண்டு மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கும் ஒரு கலவை உயர் கொழுப்பிற்கு சிறந்த தீர்வைத் தருகிறது. அதனை இந்த பதிவில் நாம் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயர் கொழுப்பு

உயர் கொழுப்பு

இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களைத் தடுக்க சமச்சீர் உணவு அட்டவனையை பின்பற்ற வேண்டும், மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது இன்னும் சிறப்பாக, இயற்கை தீர்வுகள் மூலம் உயர் கொலஸ்ட்ரால் அளவிற்கான தீர்வைப் பெறலாம். எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், பணச்செலவும் இல்லாமல் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

MOST READ: மச்சத்தின் மேல் முடி முளைத்தால் என்ன அர்த்தம்னு தெரியுமா? அந்த மரண அபாயம் பத்தி தெரிஞ்சிக்கோங்க...

எப்படி கண்டுபிடிக்கலாம்?

எப்படி கண்டுபிடிக்கலாம்?

உங்களுக்கு உயர் கொழுப்பு பாதிப்பு உள்ளதை எப்படி கண்டு கொள்ளலாம்? கல்லீரல் உற்பத்தி செய்யும் ஒரு பொருள் கொலஸ்ட்ரால். இது கொழுப்பைப் போன்று இருக்கும். உடலின் எல்லா அணுக்களிலும் இது காணப்படும். மேலும் உங்கள் உடல் சீராக இயங்க கொலஸ்ட்ரால் அவசியம். இருப்பினும், அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பதால், உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும், ஏனென்றால் இது இதய நோய் பாதிப்பை அதிகரிக்கும்.

மருந்துகள்

மருந்துகள்

இதய நோய் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 17 மில்லியன் மக்கள் உயிர் இழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. போதிய சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் இந்த இறப்பு நிகழ்கிறது.

கொழுப்பு அளவைக் குறைக்க பல்வேறு மருந்துகள் மற்றும் இயற்கை உபாயங்கள் இருந்தாலும் மக்கள் அதனை முயற்சித்து பார்ப்பதில்லை. சிலர் தங்களுக்கு இருக்கும் உயர் கொழுப்பு பாதிப்பை பற்றி கவலை கொள்வது கூட இல்லை.

அறிகுறிகள்

அறிகுறிகள்

உங்கள் கொலஸ்ட்ரால் அளவு வழக்கமான நிலையில் இல்லாமல் அதிகமாக உள்ளதை எப்படி அறிந்து கொள்வது? கீழே குறிப்பிட்டுள்ள சில அறிகுறிகள் தென்படலாம். அவை,

மூட்டுகளில் அழற்சி

தலைவலி

வாய் துர்நாற்றம்

வயிறு வீக்கம் அல்லது அஜீரணம்

கண்பார்வை மங்குவது

நெஞ்சு வலி

மயக்கம்

மலச்சிக்கல்

பலவீனம் மற்றும் சோர்வு

மேலே கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அவர்கள் இரத்த பரிசோதனை செய்து உங்களுக்கு உயர் கொழுப்பு பாதிப்பு உள்ளதை கண்டறிந்து சொல்வார்கள். வயது மற்றும் பாலினம் சார்ந்து இதன் வழக்கமான அளவு நிர்ணயிக்கப்படும்.

MOST READ: இந்த பழத்தோட ஜூஸ் நீங்க அடிக்கடி குடிக்கிறீங்களா? அப்போ இது உங்களுக்குதான் படிங்க...

இஞ்சி, பூண்டு, தேன் சேர்த்த பானம்

இஞ்சி, பூண்டு, தேன் சேர்த்த பானம்

இஞ்சி, பூண்டு மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கும் மருந்து, உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. உங்கள் இரத்தக் கொழுப்பு அளவை விரைவாக கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த பானம், விலை மலிவானது. உங்கள் தமனிகளை சுத்தம் செய்து, இதய நோய் பாதிப்பைத் தடுக்கிறது.

இதன் மூலப்பொருட்கள் அழற்சி எதிர்ப்பு மற்றும் அன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைந்தவை . அதனால், அஜீரணம், உயர் இரத்த அழுத்தம் என்னும் ஹைப்பர் டென்ஷன், எலும்புப்புரை மற்றும் ஆஸ்துமா போன்ற நிலைகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

ரத்த ஓட்டம்

ரத்த ஓட்டம்

பூண்டு இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஒரு சிறந்த உறைவு எதிர்ப்பி, அழற்சி எதிர்ப்பி மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகும்.

இஞ்சி, முன்கூட்டிய ஆக்சிஜனேற்றத்தை தடுக்கிறது மற்றும் கல்லீரல் சில குறிப்பிட்ட உணவில் இருந்து கிடைக்கும் கெட்ட கொழுப்பை ரசாயன மாற்றம் செய்வதை தடுக்கிறது. பூண்டு போல் இஞ்சியும் ஒரு சிறந்த அன்டி ஆக்சிடென்ட் ஆகும்.

ட்ரை க்ளிசரைடு மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க தேன் உதவுகிறது . மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் அன்டி ஆக்சிடென்ட் தன்மை சில குறிப்பிட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது. சர்க்கரைக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாக தேன் இருக்கிறது.

எப்படி செய்வது?

எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

4 பற்கள் பூண்டு

3 செமி அளவு இஞ்சி

1/2 கப் எலுமிச்சை சாறு (125மிலி)

8 கப் தண்ணீர் (2 லிட்டர்)

1 கப் தேன் (336 கிராம்)

1 கேலன் தண்ணீர்

செய்முறை

பூண்டின் தோலை உரித்து இஞ்சியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மென்மையான விழுதாகும் வரை அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதுடன் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

கடைசியாக இந்த நீரில் தேன் சேர்க்கவும்.

இந்த நீரை தேவைப்பட்டால் வடிகட்டி ஒரு பாட்டில் அல்லது ஜாடியில் ஊற்றி மூடி வைக்கவும்.

5 நாட்கள் வரை அப்படியே குளிர்ச்சியான மற்றும் இருட்டான இடத்தில வைக்கவும். தேவைப்பட்டால் பிரிட்ஜில் கூட வைத்துக் கொள்ளலாம்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

உயர் கொழுப்பை கட்டுக்குள் வைக்க இந்த பானத்தை உணவுக்கு முன், வெறும் வயிற்றில் பருக வேண்டும். தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பானத்தை பருக வேண்டாம். இன்னும் சில ஆரோக்கிய நன்மைகளைப் பெற, இந்த கலவையுடன் சிறிது ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கலாம்.

MOST READ: ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது தான்... ஏன் தெரியுமா?

குறிப்பு:

குறிப்பு:

இந்த பானம் மிகவும் அடர்த்தியாக இருந்தால், இதில் இருந்து இரண்டு ஸ்பூன் நீரை எடுத்து ஒரு டம்பளர் நீரில் கலந்து பருகலாம். உணவிற்கு முன் இந்த நீரை பருகவும்.

இந்த நீரை நீங்கள் எந்த விதத்தில் எடுத்துக் கொண்டாலும், உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படும்.

ஒழுங்கான முறையில் தொடர்ந்து இதனை எடுத்துக் கொள்வதுடன், சமச்சீர் உணவு மற்றும் தேவையான உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதால் உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் நிறைவுற்ற கொழுப்பை இந்த நீர் கட்டுப்படுத்துகிறது. கல்லீரல் , கொழுப்பு உற்பத்தியை மேற்கொண்டாலும், உணவில் இருந்து வெளிப்படும் கொழுப்பு அளவே உடல் நலத்தை அதிகமாக பாதிக்கிறது. ஆகவே நீங்கள் உண்ணும் உணவை கவனமாக கவனிக்க வேண்டும். வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதால், மருத்துவர் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு, ட்ரை க்ளிசரைடு மற்றும் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க முடியும். இதய நோயின் உயர் அபாய அறிகுறி உங்களுக்கு இருந்தால் இந்த தீர்வை அடிக்கடி முயற்சிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Ginger, Garlic and Honey Remedy for High Cholesterol

here we are sharing a A Ginger, Garlic and Honey simple home remedy for high cholesterol.
Story first published: Wednesday, November 21, 2018, 11:09 [IST]
Desktop Bottom Promotion