Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
டயேரியா நிக்காம தண்ணியா போய்க்கிட்டே இருக்கா? இந்த டீயில ஏதாவது ஒன்னு குடிங்க உடனே நின்னுடும்...
நிற்காமல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், குடிக்க வேண்டிய மூலிகை வகைகள் பற்றி இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் அனுபவிக்கக் கூடிய உடல் பாதிப்புகள் பல உள்ளன. அவற்றுள் மிகவும் கடினமான பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. வயிற்றுப்போக்கு பாதிப்பால் உடலின் திரவங்கள் இழந்து உடல் செயல்பாடுகள் கடினமாகிறது. இதனால் உடலின் சமச்சீர் குலைந்து மயக்கம், சோர்வு மற்றும் வயிற்று வலி போன்ற பாதிப்பகள் உண்டாகின்றன. வயிற்றுப்போக்கால் உயிர் போகும் அபாயம் இல்லை என்றாலும் நாம் மிகவும் அசௌகரியமாக மற்றும் சோர்வாக உணரும் நிலை இது.

ஆகவே வயிற்றுப்போக்கின் போது உடல் நீர்ச்சத்தோடு இருப்பது மிகவும் அவசியம். அதனால் சில மூலிகைகள் மூலம் வயிற்றுப்போக்கை தடுக்க மற்றும் போக்க உதவும் பதிவாக நாங்கள் இதனை உங்களுக்கு கொடுத்துள்ளோம். இந்த தீர்வுகளை முயற்சிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு கட்டுப்படுகிறது மற்றும் தடுக்கப்படுகிறது.

வயிற்றுப்போக்கு
மேரிலாண்ட் மருத்துவ மையம் ஆய்வுப்படி, ஒட்டுண்ணிகள் அல்லது கிருமி பாதிப்பால் குடலில் தொற்று ஏற்பட்டு வயிற்றுப்போக்கு உண்டாகிறது. இதனால் அடிக்கடி மலம் கழிப்பது, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, அதிக தாகம், காய்ச்சல் மற்றும் பல உபாதைகள் உண்டாகின்றன.
நீர்ச்சத்து குறைபாடோடு தொடர்புடைய மயக்கம் மற்றும் சோர்வை நிறுத்த , சில மூலிகை தேநீர் உதவுகின்றன. இவை இதற்கான அறிகுறிகளைக் குறைத்து உடலை நீர்சத்தொடு வைக்க உதவுகின்றன.

மூலிகை டீ வகைகள்
வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சில மூலிகை தேநீரின் பட்டியல் இதோ,
செவ்வந்தி பூ டீ
லவங்கப் பட்டை டீ
சோம்பு டீ
க்ரீன் டீ
நீர்பிராமி டீ
புதினா டீ
இஞ்சி டீ
ஜாதிபத்திரி டீ
ஆரஞ்சு தோல் டீ

செவ்வந்தி பூ டீ
வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தும் ஒரு சிறந்த தீர்வாக செவ்வந்தி பூ கருதப்படுகிறது. குடல் அழற்சியை குணப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது செவ்வந்தி பூ டீ. இதில் உள்ள வலி குறைப்பு தன்மையால் வயிற்றுப்போக்கால் உண்டாகும் வயிறு வலி குறைகிறது.
இதனை எப்படி செய்வது?
புதினா இலைகள் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் செவ்வந்தி பூ எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு கப் கொதிக்கும் நீரில் போடவும். இவை இரண்டும் அந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறட்டும். பின்பு இந்த கலவையை வடிகட்டி அந்த நீரைப் பருகவும். ஒருநாளில் பல முறை இதனை செய்யலாம்.

லவங்கப் பட்டை டீ
வயிற்றுப்போக்கைத் தீர்ப்பதில் மற்றொரு சிறந்த மூலிகை லவங்கப் பட்டை. குடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அதன் செயல்பாடுகள் பாதிக்காத வண்ணம் செயல்புரிவதிலும் இதன் மருத்துவ குணம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவை சிறந்த முறையில் வினை புரிகின்றன. இதனால் வயிறு அமைதியடைகிறது. லவங்கப்பட்டை என்பது குடலிறக்கம், குடல் வாயுவைத் தடுக்க உதவுகிறது, பாரம்பரியமாக வயிற்றுப்போக்கை எதிர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
இதனை எப்படி செய்வது?
ஒரு கப் கொதிக்கும் நீரில், ஒரு ஸ்பூன் லவங்கப் பட்டை தூள் அல்லது இரண்டு சிறிய லவங்கப் பட்டை சேர்க்கலாம். அந்த நீரில் அதனை 10 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும். அந்த நீரில் ஒரு ப்ளாக் டீ பேக்கை போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். பிறகு டீ பேக் மற்றும் பட்டையை அதில் இருந்து எடுத்து விட்டு அந்த டீயைப் பருகலாம். இதனை ஒரு நாளில் இரண்டு முறை பருகலாம்.
குறிப்பு
லவங்கப் பட்டையில் ஒவ்வாமை பாதிப்பு இருப்பவர்கள் இதனைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் வயிற்றுப்போக்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

சோம்பு டீ
சோம்பு டீ, அன்டி ஆக்சிடென்ட், செரிமானம் மற்றும் இரைப்பை குடல் வலி நீக்கி ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் வயிற்றில் உள்ள பூச்சிகளுடன் போராடுகிறது. மேலும் வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், ஆகிய பாதிப்புகளைப் போக்கி, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கிறது. சோம்பு விதைகளில் உள்ள கனிமங்களான பொட்டாசியம் போன்றவை உடலின் எலக்ட்ரோலைட் அளவை நிர்வகித்து நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
இதனை எப்படி செய்வது?
ஒரு கப் கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். 10 நிமிடம் கொதித்தவுடன் மிதமான சூடில் இதனை வடிகட்டிப் பருகவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனைப் பருகலாம்.

க்ரீன் டீ
க்ரீன் டீ யில் டானின் என்னும் கூறு உள்ளது. இது குடலில் உள்ள சளி சவ்வுகளை சுருக்கும் தன்மைக் கொண்டது. உடல் திரவத்தை உறிஞ்ச உதவி, குடல் அழற்சியைக் கட்டுப்படுத்த இந்த தேநீர் உதவுகிறது. உணவு சாப்பிட்ட பின்பு இந்த டீயைப் பருகலாம் குறிப்பாக ஒரு நாளின் பிற்பகுதியில் இதனை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் காபின் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் செரிமான தொந்தரவுகள் குறைகிறது.
இதனை எப்படி செய்வது?
க்ரீன் டி பேக் அல்லது ஒரு ஸ்பூன் க்ரீன் டீ இலைகளை எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். பிறகு அந்த நீரை எடுத்து பருகலாம். பொதுவாக ஆறிய பின் இந்த டீயைப் பருகலாம்.

நீர்பிராமி டீ
நீர்ப்ராமி டீ செரிமான மண்டலத்தை பாதிக்கும் கோளாறுகளுக்கான ஒரு சிறந்த மூலிகை சிகிச்சையாக அறியப்படுவது நீர்ப்ராமி மூலிகை டீ. நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்றும் உடலுக்கு இதமளிக்கும் பண்புகள் கொண்டதால், செரிமான செயல்பாடுகள் மற்றும் குடல் இயக்கங்கள் ஸ்திரமாக இருக்க உதவுகிறது.
இதனை எப்படி செய்வது?
ஒரு ஸ்பூன் நீப்ராமி இலைகளை ஒரு கப் கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க விடவும். பத்து நிமிடம் கொதித்தவுடன் வடிகட்டி ஆற விடவும். பின்பு அதனைப் பருகவும். ஒரு நாளில் ஒரு முறை இதனைப் பருகலாம்.

புதினா டீ
வயிறு தொடர்பான பல்வேறு கோளாறுகளுக்கு சிறந்த தீர்வை வழங்குவது புதினா. வயிற்றுக்கு இதமளித்து வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், ஆகியவற்றைப் போக்கி செரிமானத்திற்கு உதவுகிறது.
அமில சாறுகளின் உற்பத்தியைக் குறைத்து கிருமிகளை சமச்சீர் படுத்துவதும் புதினாவின் பணியாக உள்ளது.
இதனை எப்படி செய்வது?
ஒரு ஸ்பூன் புதினா இலைகளை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். பத்து நிமிடம் கொதித்தவுடன் அதனை வடிகட்டி ஆற விடவும் . பின்பு அதனைப் பருகவும். ஒரு நாளில் மூன்று முறை இதனைப் பருகலாம்.

இஞ்சி டீ
வலி நிவாரணி, கிருமி எதிர்ப்பு, பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகிய தன்மைகள் கொண்ட இஞ்சி வயிறு தொடர்பான கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றை சூடாக்கி, செரிமான மண்டலத்திற்கு ஒரு சிறந்த மருந்தாகிறது. இஞ்சி டீ பருகுவதால் உடல் நீர்சத்தைப் பெறுகிறது. மேலும் வயிற்றுப்போக்கால் உடல் இழந்த திரவத்தை மீட்டுத் தர உதவுகிறது.
இதனை எப்படி செய்வது?
ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீவிய இஞ்சியை போட்டு கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்தவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து இதனைப் பருகவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனை பருகலாம்.

ஜாதிபத்திரி டீ
ஜாதிபத்திரி கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் கொண்டது. இதனால் வயிற்றுப்போக்கை போக்க ஒரு சிறந்த தீர்வாக இது உள்ளது. குடலில் உள்ள அழற்சியைப் போக்கி சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கிறது.
இதனை எப்படி செய்வது?
ஜாதிபத்திரி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு மேலும் கொதிக்க விடவும். பத்து நிமிடங்கள் கொதித்தவுடன் அதனை வடிகட்டி ஆற விடவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைப் பருகலாம்.

ஆரஞ்சு தோல் டீ
வயிற்றுப்போக்கை குணப்படுத்த ஆரஞ்சு தோல் உதவும் என்பது யாருக்காவது தெரியுமா? ஆரஞ்சுதோலில் பெக்டின் அதிகம் உள்ளது. உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு அல்லது குடலில் ப்ரோபயோடிக்குகள் வளர்ச்சிக்கு இந்த கூறு ஆதாரமாக உள்ளது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இயங்குகிறது.
இதனை எப்படி செய்வது?
ஒரு கப் நீரில் சில ஆரஞ்சு தோலைப் போட்டு கொதிக்க விடவும். 10 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு அந்த நீரை வடிகட்டி பருகவும்.
ஒரு நாளைக்கு ஒரு முறை இதனை பருகலாம்.
என்ன வாசகர்களே, இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications











