தூக்கமின்மை பிரச்சனையா? எப்படி கற்றாழையை பயன்படுத்துவது என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

கற்றாழை மிக அற்புத மூலிகைகளில் ஒன்று. கற்றாழை அழகு ஆரோக்யம் என இரண்டிற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேஷம். கற்றாழை அருமையான சருமத்திற்கும் வளமான கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

மேலும் வயிற்றுப் புண், ரத்த சுத்த்கரிப்பு என பல வேலைகளை தருகிறது. பல்வேறு உடல் பாதிப்புகளை சரி செய்ய எப்படி கற்றாழையை பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தூக்கமின்மை :

தூக்கமின்மை :

சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால் தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.

கண்வலிக்கு :

கண்வலிக்கு :

கண்களில் அடிபட்டதாலோ, மற்ற காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

மூட்டு வலிக்கு :

மூட்டு வலிக்கு :

மூட்டுவலிக்கு பயன்படுத்தப்படும் அலோசன் மருந்து சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.

மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் கால்சியமும் இதன் மூலம் பெறபப்டுகிறது.

வயிற்று வலிக்கு :

வயிற்று வலிக்கு :

சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை 10 முறை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.(இப்படிதான் அதன் சதைப்பகுதியை பயன்படுத்த வேண்டும்)

கழுவிய காற்றழையுடன், 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து குறைவான தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளுங்கள்.

இந்த மருந்தை இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.

உடல் குளிர்ச்சி பெற :

உடல் குளிர்ச்சி பெற :

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும்.

இதில் தேவையான வாசனை எண்ணெய் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் தணியும். குளிர்ச்சி பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Uses and benefits of Aloevera for different types of health issues

Uses and benefits of Aloevera for different types of health issues
Story first published: Tuesday, February 21, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter