குப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க!! அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க!!

Written By:
Subscribe to Boldsky

மூலிகைகள் என்றால் ஏதோ மலை, காடு என கண்காடாத இடத்தில் வளர்வதுதான் என நாம் நினைக்கிறோம். ஆனால் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.

குப்பை மேனியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது என சித்த மருத்துவம் பாடல்களுடன் விளக்குகிறது. அதன் நன்மைகளை இங்கு கான்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றுப் புழுக்கள் நீங்க :

வயிற்றுப் புழுக்கள் நீங்க :

குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்..

சொறி, சிரங்கு நீங்க

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

புண் ஆற :

புண் ஆற :

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

நச்சு நீர் :

நச்சு நீர் :

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

மந்தம் :

மந்தம் :

குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் வலி , கால் வலி, மந்தத்தன்மை போன்றவை நீங்கும்.

தேவையற்ற முடி :

தேவையற்ற முடி :

முகத்தில் பெண்கள் சிலருக்கு பூனை மீசை தாடி போன்றவை வளர்ந்து முக அழகை கெடுக்கும்,. அவர்கல் குப்பை மேனியை கஸ்தூரி மஞ்சளுடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் நாளைடவில் முடி உதிர்ந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal properties of acalypha Indica and its uses for ailments

Medicinal properties of acalypha Indica and its uses for ailments
Story first published: Wednesday, May 17, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter