வீட்ல குன்றி மணி கூட இல்லைன்னு இனிமே சொல்லாதீங்க!! அதன் அற்புதங்கள் தெரிஞ்சா இப்படி சொல்லமாட்டீங்க!

வீட்ல குன்றி மணி கூட இல்லைன்னு இனிமே சொல்லாதீங்க!! அதன் அற்புதங்கள் தெரிஞ்சா இப்படி சொல்லமாட்டீங்க!

By Gnaana

குன்றிமணி, இந்தப் பெயர், ஒரு தொன்மையான மரத்தையும் அதன் காய்களைக் குறித்தாலும், குன்றிமணி என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லாத வீடுகள் இருக்காது, அக்காலங்களில்.

மணிச்சிகை, பவளக் குன்றி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட குன்றிமணி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் பொது மறையான திருக்குறளில் இருந்து, உலகில் விலை மதிப்புமிக்க உலோகமான தங்கம், வெள்ளி இவற்றை எடை மதிப்பிட உதவியது வரை, வீடுகளில், பெண்களின் உரையாடல்களில், தவறாமல், வந்துவிடும் ஒரு சொல், குன்றிமணி.

How to use Coral Wood for different ailments

அக்காலங்களில் தங்க நகைகளை குன்றிமணியைக் கொண்டே, எடை போடுவர், இரண்டு குன்றிமணிகள் என்பது தற்காலத்தில் உள்ள ஒரு கிராம் அளவாகும்.
வீடுகளில் விளையாடும் பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளில், குன்றிமணிகளைப் பயன்படுத்தி விளையாடுவார்கள். மேலும், சிறுமிகளின் கழுத்து அணிகலன்களில் மற்றும் தங்கச் சங்கிலி, நெக்லஸ், முத்து மாலை போன்ற ஆபரணங்களில், அழகுக்காக, குன்றிமணிகளைக் கோர்த்திருப்பார்கள்.

குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் மற்றும் சிறு தெய்வ வடிவங்களில், அவற்றில் கண்களுக்கு, குன்றிமணி விதைகளையேப் பயன்படுத்துவர். விநாயகர் சதுர்த்தித் திருநாளில், வழிபடுவோர் எல்லோர் வீட்டுக்கும் எழுந்தருளும் களிமண் பிள்ளையாரின் கண்களாகக் காட்சியளிப்பது, இந்தக் குன்றிமணிகளே!

வீட்டில் ஒரு குன்றிமணி தங்கம் கூட இல்லை, இந்த மனுசனை நம்பி வந்ததுக்கு, அதுதான் பரிசு, என்று அங்கலாய்க்கும் இல்லத் தலைவிகள் ஒரு புறம், போட்ட மொதல் எல்லாம் போயிடுச்சு, ஒரு குன்றிமணி கூட மிஞ்சல, என்று தொழிலில் அடைந்த தோல்வியைப் பேசுபவர்கள் மறு பக்கம் என்று இருந்தாலும், இந்த ஒப்பிடும் நிலையை எல்லாம் தாண்டி, குன்றிமணி, அதிக உயர்வுடைய ஒரு நன்மை அளிக்கும் மூலிகையாகும்.

குன்றிமணி, இன்று மிகவும், அரிதான ஒரு மரமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் வயல்களின் ஓரம் மற்றும் புதர்க்காடுகளில் பரவலாகக் காணப்பட்ட குன்றிமணி மரங்கள், இன்று அவை எங்கே என்று தேடும் நிலையில் இருக்கிறது. இதற்குக் காரணம், மிக்ககடினமான இவற்றின் விதைகள் மூலம், தானே வளர அதிக காலம் பிடிப்பதும், சமயங்களில் அந்த விதைகள் கிடைக்காமல் போவதுமே, காரணமாக இருக்கிறது.

குன்றிமணி, ஆனைக் குன்றிமணி மற்றும் வெள்ளைக் குன்றிமணி என்று சில வகைகளில் காணப்பட்டாலும், ஆனைக் குன்றிமணி மரங்களின் இலைகள், பட்டைகள், விதைகள் பெருமளவில் மருத்துவத் தேவைகளுக்காகப் பயன் படுத்தப் படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவத்தில் குன்றின் மணி:

மருத்துவத்தில் குன்றின் மணி:

உறுதியான ஆனைக் குன்றிமணி மரங்கள், பரந்த கிளைகளுடன் அதிக உயரம் வளரும் தன்மைகள் மிக்கவை, அழகுக்காக, தோட்டங்களில், சாலையோரங்களில் வளர்க்கப்பட்ட இம்மரங்கள், சிறிய இலைகளுடன், மஞ்சள் வண்ணத்தில், பழங்களின் நறுமணத்தில், கொத்தாக மலரும் பூக்களை உடையவை. காய்கள் முற்றி, கீழே விழுந்து வெடித்து, மரத்தின் அடியில், விதைகள் நிறைந்து காணப்படும்.

ஆனைக் குன்றிமணிக் காய்களில், பீன்ஸ் விதைகளைப் போல இளஞ்சிவப்பு பவள வண்ணத்தில் காணப்படும் இதன் விதைகள், வழக்கமான குன்றிமணிகள் போன்று கருப்புப் புள்ளிகள் இல்லாமல் காணப்படும். இரண்டு குன்றிமணி மரங்களும் வெவ்வேறு தாவரப் பெயர்களால், ஆங்கிலத்தில் குறிக்கப்படுகின்றன.

சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும், வியாதிகளைப் போக்கும் பல மருந்துகளில், குன்றிமணி சேர்க்கப்படுகிறது. சித்தர்கள் உரைத்த அஷ்ட கர்ம மூலிகைகளில், குன்றிமணியும் உண்டு.

குன்றிமணி இலைகளின் பயன்கள்:

குன்றிமணி இலைகளின் பயன்கள்:

குன்றிமணி இலைகளை சுத்தப்படுத்தி, அவற்றைத் தண்ணீரில் இட்டு, சுண்டக் காய்ச்சி, ஆற வைத்து, பருகி வர, உடல் வலி தீரும், சளி, இருமல் தொல்லைகள் அகலும். மேலும், வயிற்றில் ஏற்படும் புண்ணால், உண்டாகும் வலியைப் போக்கும்.

 பெண்களின் மகப்பேறின்மை பாதிப்பிற்கு :

பெண்களின் மகப்பேறின்மை பாதிப்பிற்கு :

மிளகு, பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் இவற்றைச் சேர்த்து, துளசிச் சாற்றைக் கலந்து மையாக அரைத்து, இந்தக் கலவையை, மாதாந்திர விலக்கின் மூன்றாம் நாளில் தண்ணீரில் கலந்து பருக, பாதிப்புகள் விலகி, மகப்பேறடைய வாய்ப்புகள் உண்டாகும், என்கின்றனர்

சரும வியாதிகள் போக்கும் குன்றிமணி:

சரும வியாதிகள் போக்கும் குன்றிமணி:

உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல் மற்றும் வெண் குஷ்டம் போன்ற சரும வியாதிகளைப் போக்க, குன்றிமணி வேர்களை நீரில் இட்டு, சுண்டக் காய்ச்சி, பருகி வர, பாதிப்புகள் படிப்படியாக விலகும்.

குழந்தைகளின் வயிற்றுப் போக்கு பாதிப்பு விலக:

குழந்தைகளின் வயிற்றுப் போக்கு பாதிப்பு விலக:

குழந்தைகளுக்கு, உணவில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால், வயிறு பாதித்து, அதிக நீருடன் கூடிய வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, குழந்தைகள் உடனே, சோர்வடைந்து விடுவர். இந்த பாதிப்பை சரி செய்ய, அத்திப்பால், புளியங்கொட்டை தோல், வெள்ளைக் குன்றிமணி விதைகள் இவற்றை சேர்த்து, துளசிச் சாறு இட்டு, நன்கு அரைத்து, அந்த விழுதை, தினமும் இரு வேளை, முழு பாக்கு அளவில் எடுத்து, வெண்ணையில் வைத்து கொடுத்து வர, குழந்தைகளின் வயிற்றுப் போக்கு பாதிப்புகள், விலகி விடும்.

கீரையாக சமைத்து உண்ணப் பயன்படும் குன்றிமணி இலைகள்.

செரிமானம் :

செரிமானம் :

ஆனைக் குன்றிமணியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து, நன்கு அலசி, பூண்டு சேர்த்து, கீரைக்கடையலாக மசித்து, சாப்பாட்டில் சேர்த்து உண்ணலாம். அல்லது, கூட்டு போல செய்து, உணவில் தொட்டுக்கொள்ள பயன்படுத்த, செரிமான பாதிப்புகள் விலகி, உடலுக்கு, நல்ல சத்துக்கள் கிடைத்து, வயிறு நலம் பெறும்.

உடலுக்கு நலம் தரும் குன்றிமணி எண்ணைய் :

உடலுக்கு நலம் தரும் குன்றிமணி எண்ணைய் :

குன்றிமணி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணை, தாதுக்கள், புரதச் சத்துக்கள் நிறைந்த ஒரு நன்மை தரும் எண்ணையாகும். இந்த எண்ணையை உணவில் சேர்த்து வர, செரிமானத்தைத் தூண்டி, உடலில், இரத்தத்தில் கலந்து உள்ள நச்சுக் கொழுப்புகளை கரைத்து, வெளியேற்றும் ஆற்றல் மிக்கது.

குன்றிமணி வலி மருந்து:

குன்றிமணி வலி மருந்து:

அடிபட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள் சிலர், கால்களில் அடி பட்டிருந்தால், நடந்தால் ஏற்படும் வேதனையால், வீட்டிலேயே இருப்பார்கள். இவர்களின் வேதனையைப் போக்க, குன்றிமணி விதைகளின் பருப்பை எடுத்து, காலையில் தண்ணீரில் ஊற வைத்து, மாலையில், அந்த பருப்புகளைத் தனியே எடுத்து, அம்மியில் அரைத்து, அரைத்த விழுதை, ஆலக்கரண்டி எனும் குழியான இரும்புக் கரண்டியில் இட்டு நீர் வற்றும் வரை சூடாக்கி, ஆறிய பின், இரவில், உடலில் அடிபட்ட வீக்கங்கள் உள்ள இடங்களில், இந்த விழுதைத் தடவி வர, காலையில் வலிகள் நீங்கி, வீக்கங்கள் வடிந்து, நல்ல பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்:

தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்:

குன்றிமணி, வெந்தயம் இவற்றை தூளாக்கி, தேங்காயெண்ணையில் ஊற வைத்து, ஒரு வாரம் நிழலில் வைத்திருந்து, அதன் பின், தினமும் தலைக்குத் தேய்த்து வர, தலைமுடி உதிர்வது நின்று, தலைமுடி கருமையாக வளர ஆரம்பிக்கும்.

குன்றிமணி மரப்பட்டைத் தூள்:

குன்றிமணி மரப்பட்டைத் தூள்:

வயிற்றுப்போக்கு, வயிற்று வேதனை மற்றும் தலைவலிக்கு, குன்றிமணி மரப் பட்டைத்தூளை, நீரில் நன்கு சுண்டக் காய்ச்சி பருகி வர, அவையெல்லாம் விலகி விடும்.

குன்றிமணி, பூச்சிகள் அரிக்காத உறுதியான ஒரு மரமாகும், எனவே, இந்த மரத்தில் வீட்டு உபயோக அலமாரிகள், மேஜை நாற்காலி போன்றவை செய்யவும், இன்டீரியர் டெகரேசன் எனும் உள் அலங்கார வேலைப்பாடுகளில், சிலர், அறைகளின் அழகைக் கூட்ட, குன்றிமணி மரங்களைத் தரையில் பதிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion