இந்த பூவின் இலைக்கு இருக்கும் மருத்துவ குணம் பற்றி தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நமக்கு வீட்டின் அருகிலேயே கிடைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த பூக்களில் ஒன்று தான் இந்த வெட்சிப்பூ. இந்த பூ இட்லியை போல இருப்பதால், இதனை இட்லி பூ என்றும் கூறுவார்கள். இது பல நிறங்களில் இருக்கும். ஆனால் இதனை நாம் வீடுகளில் அழகுக்காக தான் வளர்க்கிறோம். இதன் இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. இதன் மருத்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்ச்சலுக்கு..

காய்ச்சலுக்கு..

வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.

வெட்சிப்பூ தேநீர் :

வெட்சிப்பூ தேநீர் :

வெட்சிப்பூவை கொண்டு தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள், வெட்சிப்பூ மற்றும் பனங்கற்கண்டு ஆகியவையாகும். முதலில் பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு வெட்சி பூவை அதில் போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல் குணமாகும்.

 மாதவிலக்கை சரிசெய்யும்

மாதவிலக்கை சரிசெய்யும்

வெட்சிப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடல் சூட்டை தணிக்கும். வியர்வையை தூண்ட கூடியது. காய்ச்சலை தணிக்கும். வலியோடு கூடிய மாதவிலக்கு, முறைதவறி வரும் மாதவிலக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது. கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.

மருந்து தாயாரிக்கும் முறை :

மருந்து தாயாரிக்கும் முறை :

மாதவிலக்கு பிரச்சனை, உடல் சூடு ஆகியவற்றை போக்கும் மருந்து தாயாரிக்க தேவையான பொருட்கள், வெட்சி பூ, மோர் ஆகியவையாகும். செய்முறை: வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.

தோல் பிரச்சனைகளுக்கு

தோல் பிரச்சனைகளுக்கு

அரிப்பு மற்றும் தடிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய தேவையான பொருட்கள், வெட்சி பூ, தேங்காய் எண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசிவர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.

மூட்டு வலிக்கு...

மூட்டு வலிக்கு...

வெட்சி பூ இலைகளை பசையாக்கி பூசுவதால் அடிபட்ட வீக்கம் வற்றிப்போகும். தசை சிதைவு, நரம்புகளில் சிதைவு, ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவு ஆகியவற்றை சரிசெய்யும் அற்புத மருந்தாக இந்த பசை விளங்குகிறது. மூட்டு வலியை போக்க, முருங்கை பட்டையை சிதைத்து சிறிது கடுகு சேர்த்து கலந்து பூசிவர மூட்டுவலி குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies for periods problem

Home remedies for periods problem