மூட்டு வலியை குணப்படுத்தும் சிறந்த ஆயுர்வேத வழிகள்!!

Written By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நமது உடலில் ஏற்படும் வலிகளுக்கு வாதம் (காற்று) தான் காரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுர்வேதம் நமது உடலில் 5 விதமான உறுப்புகளை மட்டுமே நோக்குகிறது. இதற்கு பஞ்சமகபுத்தாஸ் என்று பெயர். நமது உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் தோஷமே காரணம் என்கின்றனர்.

வாதம், பித்தம் மற்றும் கபம் என 3 விதமான தோஷங்கள் உள்ளன. வாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நச்சுக்கள் சரியான சீரண சக்தி இல்லாமல் உடலிலும் மூட்டுகளிலும் தங்குவதால் ஏற்படுகிறது. இதனால் மூட்டுகளில் தீவிர வலியும் ஏற்படுகிறது.

Ayurveda Recommends These Treatment Methods For Arthritis

பித்தம் உடம்பில் எரிச்சலை உண்டு பண்ணும். கபம் என்பது கை, கால் முடக்கத்திற்கு காரணமாகும். உடம்பில் சீரணிக்காமல் இருக்கும் நச்சுக்களை ஆமா வாதம் என்கின்றனர்.

இந்த நச்சுக்கள் குடலில் தங்குவதாலும் மூட்டுகளில் இருப்பதாலும் வலியை ஏற்படுத்தும். எனவே இதை குணப்படுத்த இயற்கை ஆயுர்வேதம் மிகவும் சிறந்தது. இங்கே வாதத்தை போக்கும் சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 1.விரதம்(பத்தியம்):

1.விரதம்(பத்தியம்):

தினமும், 1-2 டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். சுடு தண்ணீர் உங்கள் மூட்டுகளில் தங்கியுள்ள வாயுவை கலைத்து விடும். மேலும் சீரண சக்தியை அதிகமாக்கி நச்சுக்களை வெளியேற்றி விடும்.

2.நல்ல உணவுப் பழக்கம் :

2.நல்ல உணவுப் பழக்கம் :

கெட்ட உணவுகளை உண்பதால் உடலில் அஜீரணம் உண்டாகிறது. இதனால் நச்சுக்கள் உடலிலே தங்கி ஆங்காங்கே மூட்டுகளில் வலியை உண்டாக்குகிறது. எனவே நல்ல உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் நச்சுக்கள் வெளியேறி மூட்டுகளில் வலியும் குறையும். மேலும் இது உங்கள் மெட்டா பாலிசத்தை அதிகரித்து சத்துக்கள் உடலின் பிளாஸ்மா வழியாக மற்ற செல்களுக்கு சென்று புதிய திசுக்களை உருவாக்குகிறது.

3.திரிபுலா :

3.திரிபுலா :

சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் திரிபுலா ஆகும். இந்த வாதப் பிரச்சினைக்கு 2-5 கிராம் திரிபுலா சூரணத்தை படுப்பதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 4.மூலிகைகள்:

4.மூலிகைகள்:

வாத நோய்க்கு ஆயுர்வேதத்தில் நிறைய மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூலிகைகளை உண்பதால் சீரண சக்தி மேம்பட்டு உடலில் உள்ள வாயு வெளியேற்றப்படுகிறது.

5.பஞ்சகர்மா:

5.பஞ்சகர்மா:

பஞ்சகர்மா என்பது நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும், நன்றாக பசிக்கும், செரிமானமாகும், வாயு சேராது. பஞ்சகர்மா சிகிச்சை ஒரு ஐந்து வகை சிகிச்சை ஆகும். அவையாவன :வமனம், விரேசனம், அனுவாசன பஸ்தி, ஆஸ்தாபன வஸ்தி, நஸ்யம் ஆகும்.

6.ப்பிளிசில்லி மசாஜ் :

6.ப்பிளிசில்லி மசாஜ் :

வாதத்திற்கு ப்பிளிசில்லி மசாஜ் மிகவும் சிறந்தது. இதில் வெதுவெதுப்பான நல்லெண்ணெய்யில் 2 மணி நேரம் குளிக்க வைப்பார்கள். இந்த எண்ணெய் உங்கள் சருமத்தில் ஊடுருவி வாதம் மற்றும் மூட்டுகளில் தங்கியுள்ள வலியை போக்குகிறது.

7. வமனம்(வாந்தி) :

7. வமனம்(வாந்தி) :

இந்த முறையில் சில மூலிகை பொருட்களின் மூலம் கஷாயம் கொடுத்து வாந்தி எடுக்க வைப்பர். இதனால் ஆமா(நச்சுக்கள்), வயிறு சுத்தம், மார்புப் பகுதி நச்சுக்கள் போன்றவை வெளியேறி விடும். இந்த முறை சைனஸ், ஆஸ்துமா , வாந்தி, குளிர் ஜூரம், வாதம் போன்றவற்றிற்கு நல்லது.

8.விரேசனம் :

8.விரேசனம் :

இந்த முறையில் பேதி மருந்து கொடுத்து நச்சுக்களை வெளியேற்றுவர். அனைத்து நச்சுக்களும் மலக்குடல் வழியாக வெளியேற்றப்படுகின்றன. விளக்கெண்ணெய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. 3-7 நாட்கள் மூலிகை நெய் பரிந்துரைக்கப்படுகிறது. அடுத்து 7 நாட்களுக்கு மசாஜ் மற்றும் வேர்த்தல் சிகிச்சை 2-3 நாட்கள் செய்யப்படுகிறது. இந்த முறை கபம் பித்த நோய், குடல் நோய், வாதம், மூட்டுவலி, சரும நோய் போன்றவற்றை குணமாக்குகிறது.

9.அனுவாசன பஸ்தி :

9.அனுவாசன பஸ்தி :

மருந்துகள் மற்றும் மூலிகைகள் மூலம் குடலை சுத்தம் செய்தல் ஆகும். இந்த மருந்துகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த முறை அல்சர், கீழ்வாதம், கெளட் , உடலுறவு நோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

10. நஸ்யம் :

10. நஸ்யம் :

இது மூக்கில் சொட்டு மருந்து விடும் முறை ஆகும். இதில் மருந்து எண்ணெய், மூலிகை சாறு, நெய் போன்றவை பயன்படுகின்றன. சில நேரம் மூலிகை பொடி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மூக்கில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது

11.பத்ர பிந்த ஸ்வேத :

11.பத்ர பிந்த ஸ்வேத :

இது முதுகு வலிக்கு சிறந்த சிகிச்சை ஆகும். இதற்கு மருந்தேற்றப்பட்ட நீராவி குளியல் என்று பெயர். இதில் உள்ள மூலிகை இலைகள் வலி மற்றும் எரிச்சலை போக்குகிறது.

இந்த முறை மூட்டுகளுக்கு வலிமையை கொடுக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மூலிகை இலைகளை நன்றாக சிறு துண்டுகளாக்கி அதை வஸ்தகரா ஆயிலில் லேசாக வறுத்து அதனுடன் எலுமிச்சையை சேர்த்து ஒரு துணியில் கட்டி அதை வெதுவெதுப்பான மூலிகை ஆயிலில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இதை செய்தால் நல்ல பலனை காணலாம். மாறாக குளியலும் மேற்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சையை பயன்படுத்தி வாதப் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurveda Recommends These Treatment Methods For Arthritis

Ayurveda Recommends These Treatment Methods For Arthritis
Story first published: Saturday, June 17, 2017, 12:33 [IST]
Subscribe Newsletter