மாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு மூலிகை ஜூஸை குடிச்சா குடல் புற்று நோய் வராது!!

Posted By:
Subscribe to Boldsky

புற்று நோயை தடுப்பதில் குடல் சுத்தமும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த காலத்தில் மாதமொருமுறை விளக்கெண்ணெயை குடித்து நச்சுக்களை வெளியேற்றினார்கள். இதனால் குடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் , ஆற்றல் மிக்கதாகவும் இருந்தது.

5 Aloe vera remedies to clean your colon

ஆனால் இன்றைய நாட்களில் குடல்களில் நச்சுக்கள் தேங்கி அதிகப்படியான ஃப்ரீ ரேடிகள்ஸ் உற்பத்தியாகி அவை சாதாரண செல்களை தாக்கி புற்று நோயை வரவழைக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் நாம் உண்ணும் கண்ட ரசாயன மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள்தான்.

அவற்றை நீங்கள் களைந்துவிட்டால் புற்று நோய் , அப்பண்டிஸ் போன்ற நோய்களை தடுக்கலாம். அவற்றை நீக்குவது பற்றிதான் இந்த கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை :

கற்றாழை :

கற்றாழை மிகச் சிறந்த பண்புகளை கொண்ட அற்புத மூலிகை என சித்தர்கள் விவரிக்கிறார்கள். இதனை சாப்பிடும் முறை மிக முக்கியமானது . அதன் இலையை கிழித்து உள்ளிருக்கும் ஜெல்லை அப்படியே சாப்பிடக் கூடாது. அதன் பச்சை நிறம் போக, நன்றாக கழுவி அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும்.

கற்றாழையை பயன்படுத்தி எப்படி உங்கள் குடலை சுத்தப்படுத்தலாம் என பார்க்கலாம். இந்த ஜூஸை மாதம் ஒரு முறையென தொடர்ந்து 1வாரம் குடித்தால் உங்கள் குடல்கள் நன்றாக செயல்படும். இந்த காலத்தில் அதிகம் பயமுறுத்தும் புற்று நோய் உங்களை அண்டாது.

கற்றாழை மற்றும் தேன் :

கற்றாழை மற்றும் தேன் :

தேவையானவை :

கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

நீர் - 1/2 கப்

செய்முறை மற்றும் குடிக்கும் முறை :

செய்முறை மற்றும் குடிக்கும் முறை :

கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி அதனுடன் நீர் மற்றும் தேனை கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதனை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடிக்க வேண்டும்.

 கற்றாழை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் :

கற்றாழை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் :

இது நச்சுக்களை மிக சுத்தமக வெளியேற்றுகிறது. அதோடு அதிலுள்ள டயடிக் நார்ச்சத்துக்கள் வயிற்றிலுள்ள பாதிப்படைந்த செல்களுக்கி நிவாரணம் அளிக்கிறது.

தேவையானவை :

கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

செய்முறை மற்றும் குடிக்கும் முறை

செய்முறை மற்றும் குடிக்கும் முறை

இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு வடிக்கட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் 8- 10 நாட்கள் குடிக்க வேண்டும்.

கற்றாழை மற்றும் மாம்பழம் :

கற்றாழை மற்றும் மாம்பழம் :

இந்த கலவையிலுள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட் குடல்களில் தங்கியிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து புற்று நோய் வராமல் காக்கும்.

தேவையானவை :

கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்

மாம்பழம் - 1

நீர் - 1 அப்

இஞ்சி - 1 டீஸ் பூன்

செய்முறை மற்றும் குடிக்கும் முறை :

செய்முறை மற்றும் குடிக்கும் முறை :

மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் நீர் சேர்த்து விருப்பமிருந்தால் இஞ்சியை கலந்து மிக்ஸ்யில் சுழற்றவும். பின்னர் அதனை வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு குடிக்க வேண்டும். இப்படி செய்தால் பாதிக்கப்பட்ட குடல்களும் பலம் பெற்று புதிதாய் வேலை செய்யும்.

கற்றாழை, அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய் :

கற்றாழை, அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய் :

தேவையானவை

அன்னாசி - 3 துண்டுகள்

வெள்ளரிக்காய் - அரை

கற்றாழை - 3 டேபிள் ஸ்பூன்

நீர் - 1 கப்

 செய்முறை மற்றும் குடிக்கும் முறை :

செய்முறை மற்றும் குடிக்கும் முறை :

முதலில் அன்னாசி மற்றும் வெள்ளர்க்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கற்றாழை மற்றும் நீர் கலந்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த ஜூஸை 7 நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

குறிப்பு :

குறிப்பு :

எந்த பழக்கத்தையும் ஆரம்பித்து பின் சோம்பேறித்தனத்தால் விட்டுவிட்டால் உங்களுக்கு அதன் முழுப் பலனும் கிடைக்காது.

ஆகவே இங்கே குறிப்பிட்டுள்ள ஜூஸில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வெறும் 1, 2 நாட்களுடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து 1வாரம் உபயோகித்து பின் அதன் பலன் பாருங்கள். மாதம் ஒரு தடவை இவ்வாரு செய்தால் போதும். உங்கள் உடலின் ஆரோக்கியம் உங்கள் கையில்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Aloe vera remedies to clean your colon

5 Aloe vera remedies to clean your colon
Story first published: Saturday, November 4, 2017, 15:34 [IST]
Subscribe Newsletter