Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
ரத்தக் கொதிப்பை குறைக்கும் ஒரு மூலிகை தேநீர்!! தயார்ச் செய்வது எப்படி?
செம்பருத்தி பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்டது. உடலில் பல நோய்களை குணப்படுத்டுவதோடு நோய்கள் வராமலும் காக்கும். அவ்வகையில் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் தே நீர் தயாரிப்பதை பார்க்கலாம்.
உடலில் சோடியம் அளவு அதிகமாகும்போதும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகும்போதும் ரத்தத்தில் அழுத்தம் அதிகம் உண்டாகி உயர் ரத்த அழுத்தம் உண்டாகும்.

இதனால் முதலில் பாதிக்கப்படுவது இதயமும் அதன் பின் மூளையும். பக்கவாதம் கூட உண்டாகும். அகவே உணவில் உப்பு குறைவாக சாப்பிட வேண்டியது முக்கியம். அதுமட்டுமல்லாது சாப்பிடும் உணவு முறையையும் மாற்றிக் கொள்ளுதல் நல்லது. அவ்வகையில் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் மூலிகை மலர் பற்றி தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

செம்பருத்தியின் மருத்துவ பயன்கள் :
சித்த மருத்துவம் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இதனைக் கொண்டு தயாரிக்கும் தே நீர் பற்றியும் அதன் மகத்துவத்தைப் பற்றியும் பார்க்கலாம்

செம்பருத்தி தேநீர் :
நீர்- 4 கப்
செம்பருத்தி இதழ் காய்ந்தது - 3 ஸ்பூன்
செம்பருத்தி இதழ் புதிதானது - 2 ஸ்பூன்
சர்க்கரை -1 ஸ்பூன்
ஆரஞ்சு - 1
பட்டை - 1

தயாரிக்கும் முறை :
முதலில் நீரை கொதிக்க வையுங்கள். பின்னர் அதில் பட்டை மற்றும் செம்பருத்தி இதழ்களை போட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும்.

தயாரிக்கும் முறை :
அதன் பின் வடிகட்டி அதில் சர்க்கரை மற்றும் ஒரு முழு ஆரஞ்சின் சாறை கலந்து சூடாகவோ அல்லது ஐஸ் போட்டோ குடிக்கவும்

பலன்கள் :
இந்த தேநீர் அதிக நீரை உடலிலிருந்து பிரித்தெடுக்கும். அதுபோலவே அதிலிருக்கும் ஆந்தோசயனின் ரத்தத்தில் இருக்கும் அடர்த்தியை குறைத்து அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. அதிக தாதுக்களை சிறு நீரகம் மூலமாக வெளியேற்றும்.



Click it and Unblock the Notifications
