இருமலை குணப்படுத்தும் அருமையான ஆயுர்வேதம் !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

இருமல், சுவாசக் குழாயின் உண்டான பாதிப்பை உணர்த்தும் அறிகுறி. சுவாசக் குழாயில் கிருமிகள் அல்லது தூசு வரும்போது அதனை நீக்க முற்படும்போது வருவதுதான் இருமல். அதனை வெளியேற்ற சுவாசப் பகுதிகளில் எதிர்ப்பு செல்களும் அலர்ஜி செல்களும் போராடும். அந்த சமயங்களில் இருமல் உண்டாகும்.

Best Home Remedies for Cough

இருமலில் இரு வகை உள்ளது. வறட்டு இருமல் மற்றும் தொற்றினால் உண்டாகும் இருமல். வறட்டு இருமல், தூசு போன்ற எரிச்சலூட்டக் கூடிய புகை ஆகியவற்றால் உண்டாகும் அலர்ஜி. கிருமிகளால் உண்டாகும் தொற்றினால் வரக் கூடிய இருமல்தான் சளியுடன் வரும் இருமல்.

அலர்ஜி மற்றும் ஜலதோஷம் ஆகிய இரு வகை இருமலுக்கும் ஏற்ற மூலிகை கலந்த நிவாரணங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளது. அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மஞ்சள் பூண்டு கலந்த பால் :

பாலில் இரு பூண்டு பற்களை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடிங்கள். இரவுகளில் குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Best Home Remedies for Cough

மஞ்சளில் கர்க்யூமின் என்ற கிருமிகளை எதிர்த்து போராடும் மூலக்கூறு உள்ளது. இது சுவாசத்தில் உள்ள அலர்ஜி மற்றும் கிருமிகளை விரட்டிவிடும்.

அமிழ்தவள்ளி ஜூஸ் :

உங்களுக்கு நாள்பட்ட இருமல் தொடர்ந்து இருந்தால் இந்த கசாயம் மிகவும் பலனளிக்கும். அமிழ்த வல்லி சாறு ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். தினமும் காலையில் 2 ஸ்பூன் இந்த சாறினை குடித்து வந்தால், இருமல் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Best Home Remedies for Cough

தேன் மற்றும் அதிமதுரம் :

தேன், அதிமதுரப் பொடி மற்றும் பட்டைப் பொடி ஆகியவற்றை சம அளவிலான கால் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை மாலை என இரு வேளைகளில் குடித்தால் விரைவில் குணமாவீர்கள். அருமையான மருந்து.

Best Home Remedies for Cough

இது தவிர மிளகை பொடி செய்து நெய்யுடன் கலந்து இரு வேளை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இஞ்சியை அல்லது சுக்குவை தட்டி நீரில் போட்டு காய்ச்சி குடித்தாலும் இருமல் கட்டுப்படும்.

English summary

Best Home Remedies for Cough

Use this Ayurvedhic Home remedies to get relief from cough
Story first published: Thursday, August 18, 2016, 15:30 [IST]
Subscribe Newsletter