Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
உடல் உஷ்ணம் தணிக்கும் கொட்டிக்கிழங்கு
குளிர்ச்சித் தன்மை கொண்ட கொட்டிக்கிழங்கு செடி இனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். இக்கிழங்கில் மூன்று வகைகள் உள்ளன. அவை, கொட்டி, கருங்கொட்டி, காறற் என்பதாகும். இதில் கருங்கொட்டியானது பேய்க்கொட்டி என்றும் அழைக்கப்படுகிறது இது மருத்துவத்திற்கு பயன்படாது பிற கொட்டிக் கிழங்குகள் மருத்துவத்திற்குப் பயன்படும்.
இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.
கரப்பான் நோய் போக்கும்
கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் இக்கிழங்கை சமைத்துச் சாப்பிட சுவையுடன் இருக்கும். இதனை பொரியலும் செய்யலாம். இக்கிழங்கை மாவாக்கிக் கஞ்சியாகக் கரைத்து கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோயும் சரியாகும். கொட்டிக்கிழங்கு தூளை தேங்காய்ப் பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்கு மேல்பூச்சாக போட சீக்கிரம் ஆறிவிடும்.
பல்நோய் நீக்கும் பிரப்பங்கிழங்கு
பிரப்பங்கிழங்கு என்று ஒருவகை கிழங்கு உள்ளது. இது செடியினத்தைச் சேர்ந்தது. இக்கிழங்கு மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இக்கிழங்கின் குணம் பற்களில் ஏற்படும் அனைத்து நோய்களையும் நீக்க வல்லது. இக்கிழங்கை காயவைத்து இடித்துத் தூளாக்கி நீரில் கலந்து காய்ச்சி அந்நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வரலாம். இதனால் பற்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். இத்தூளை பற்பொடியுடன் சேர்த்து பற்கள் துலக்கி வரலாம். மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கும் பற்பொடிகளில் இதுவும் இடம்பெற்றிருக்கும்.
இக்கிழங்கின் தூளை ஒரு நாளைக்கு இரண்டு வேளை வெந்நீரில் கலக்கி உட்கொள்ளலாம். இதனால் கீழ்வாதம், முடக்குவாதம், போன்ற வாதம் தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
