Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு... ஆன்ஜியோபிளாஸ்டி செஞ்சிருக்காங்களாம்...
47 வயதான சுஷ்மிதா சென் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனக்கு சில நாட்களுக்கு முன்னதாக மாரடைப்பு வந்ததாகவும், ஆன்ஜியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Sushmita Sen Suffers Heart Attack: இந்தியாவில் முதன்முதலாக 1994-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர் தான் நடிகை சுஷ்மிதா சென். 47 வயதான சுஷ்மிதா சென் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனக்கு சில நாட்களுக்கு முன்னதாக மாரடைப்பு வந்ததாகவும், ஆன்ஜியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, தற்போது தான் நலமாக மற்றும் தனது இதயம் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சி ஆர்வலராக இருந்த போதிலும், சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு வந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இக்கட்டுரையில், ஆன்ஜியோபிளாஸ்டி என்றால் என்ன, 40 வயதிற்கு மேல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பின்பற்ற வேண்டியவைகள் குறித்து காண்போம்.

ஆன்ஜியோபிளாஸ்டி என்றால் என்ன?
ஆன்ஜியோபிளாஸ்டி என்பது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் (இரத்தக்குழாய்) ஏற்பட்டுள்ள அடைப்புக்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவ நுட்பமாகும். இந்த சிகிச்சையின் போது அடைப்புகளை நீக்க ஒரு பலூன் வடிகுழாய் தமனிக்குள் உட்செலுத்தப்பட்டு, அதை பெரிதாக்க ஊதப்படும். இவ்வாறு செய்யும் போது தமனிகளின் வழியே இரத்தம் ஓட்டம் மேம்படும் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் தடுக்கப்படும். இந்த சிகிச்சையானது ஸ்டென்ட் வைத்தும் அல்லது வைக்கப்படாமலும் செய்யப்படலாம். ஆன்ஜியோபிளாஸ்டியானது கரோனரி தமனி நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையானது லோக்கல் மயக்க மருந்துகளை நோயாளிக்கு செலுத்தி செய்யப்படுகிறது.
உடற்பயிற்சி ஆர்வலாக இருந்தும் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றால், உடற்பயிற்சி செய்யாமல் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையை வாழ்ந்து வருபவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். இப்போது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க 40 வயதில் ஒருவர் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்துக் காண்போம்.

தினசரி உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்து வந்தால், இதய நோயின் அபாயம் குறைவதோடு, பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் தாக்கமும் குறையும். எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட மறவாதீர்கள்.

ஆரோக்கியமான டயட்
கொழுப்புள்ள எண்ணெயில் பொரித்த உணவுகள், சோடியம் நிறைந்த உணவுகள், சர்க்கரை மிகுந்த உணவுகளை போன்றவற்றை குறைத்து, நல்ல ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். இதனால் இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவி புரியும்.

புகைப்பதைத் தவிர்க்கவும்
உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் புகைப்பிடிப்பது இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும். ஒருவேளை உங்களால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியாவிட்டால், மருத்துவரின் உதவியை நாடி, முயற்சி செய்யுங்கள்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்
தற்போது மன அழுத்தம் நிறைய பேரின் ஆரோக்கியத்தை பாழாக்குகிறது. சொல்லப்போனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. எனவே நீங்கள் மன அழுத்தத்துடன் இருப்பதை உணர்ந்தால், அதைக் குறைக்க யோகா, தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கவும்
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் தற்போது நிறைய பேருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. இந்த இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் அவ்வப்போது தங்களின் இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

கொலஸ்ட்ராலைக் கண்காணிக்கவும்
இன்று நாம் சாப்பிடும் பல உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உடலில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தாவிட்டால், அது இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே அடிக்கடி கொலஸ்ட்ராலை கண்காணித்து வாருங்கள்.

நீரேற்றத்துடன் இருக்கவும்
உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது, இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் குறைவதாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நிபுணர்கள் கூறுகின்றனர். ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்பில், தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பது உடலுறுப்புக்களின் செயல்பாட்டை ஆதரிப்பது மட்டுமின்றி, கடுமையான இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே இதயம் ஆரோக்கியமாக செயல்பட தினமும் போதுமான அளவு நீரைக் குடித்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications