For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிட்னியில கல் வந்தா கொஞ்ச நாள்ல மாரடைப்பும் வருமாமே?... என்ன அறிகுறி வெச்சு கண்டுபிடிக்கலாம்?

நம்முடைய சிறுநீரகத்துக்கும் இதய நோய்களுக்கும் என்ன மாதிரியான தொடர்புகள் இருக்கின்றன. சிறுநீரகத்தில் பிரச்சினை வந்தால் இதயமும் சேர்ந்து வேகமாக பாதிப்புக்கு உள்ளாகும்.

|

நம் உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுள்ளன. நமது உடலின் சீரான இயக்கத்திற்கு இந்த தொடர்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றில் இதயத்திற்கும் சிறுநீரகத்திற்கு உள்ள தொடர்பானது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இதய நோய் பாதிப்பு உள்ள ஒருவருக்கு நாள்பட்ட மற்றும் குணப்படுத்த முடியாத சிறுநீரக சம்பத்தப்பட்ட வியாதிகள் வருவது கவலையளிக்கும் நிகழ்வாக இன்று இருக்கிறது. அதே போல் சிறுநீரக சம்பத்தப்பட்ட வியாதிகள் உள்ள ஒருவருக்கு இதய நோய் வருவதற்கும் வழி வகை இருக்கிறது. எனவே சிறுநீரகம் அல்லது இதய சம்பத்தப்பட்ட நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். நோய் சம்பத்தப்பட்ட அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுகி தக்க நடவடிக்கைகளை எடுப்பதன் மூலன், நோய் பாதிப்பை குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் என்ன தொடர்பு?

இதயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் என்ன தொடர்பு?

இதயம் உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜனை இரத்தத்தின் வழியாக செலுத்துகிறது. சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள், தேவை இல்லாத உப்பு சத்துக்கள் மற்றும் திரவங்களை நீக்கி சுத்திகரிப்பு செய்கிறது. எனவே இவற்றில் ஒன்றில் ஏற்படும் பாதிப்பு மற்றொன்றை பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மருத்துவ அறிஞர்கள் கருத்துப்படி, பின்வரும் ஐந்து வகைகளில் இதய நோயும் சிறுநீரக நோயும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டுள்ளன.

* கடுமையான இதய செயலிழப்பு உள்ள ஒருவரின் சிறுநீரகம் கடுமையாக பாதிப்பு அடைகிறது.

* நாள்பட்ட இதய செயலிழப்பு பெரும்பாலும் நீண்டகால சிறுநீரக நோய் ஏற்பட வழிவகை செய்கிறது.

* சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சீர்குலையும் பொது கடுமையான இதய செயலிழப்பு ஒருவருக்கு ஏற்படுகிறது.

* கடுமையான சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு கரோனரி தமனி நோய் (சிஏடி), இதய செயலிழப்பு, மற்றும் இதய அரித நோய் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

* நீரிழிவு அல்லது லூபஸ் போன்ற பல உறுப்புகளை பாதிக்கக்கூடிய பல மருத்துவ பிரச்சினைகள் பெரும்பாலும் இதய மற்றும் சிறுநீரக சம்பத்தவடவையாக உள்ளன.எனவே இந்த நோய் உள்ளவர்களின் இஇதயம் மற்றும் சிறுநீரகம் என்ற இரண்டுமே கடுமையான

பாதிப்புக்கு உள்ளாகிறது.

MOST READ: விந்து கொஞ்சமா வர்றதுக்கு காரணம் என்ன தெரியுமா? நீங்க பண்ற இந்த ஒரே தப்புதான்...

இரண்டும் பாதிக்கப்பட்டால்

இரண்டும் பாதிக்கப்பட்டால்

ஒருவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகம் என்ற இரண்டு உறுப்புக்களுமே பாதிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது ஒன்று என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. நாள்பட்ட இதய பாதிப்பு உள்ள ஒருவருக்கு வரும் சிறுநீரக தொற்றால் அவர் தன் வாழ்நாளை முடிக்கும் முன்பே சீக்கரம் இறந்து விடுகிறார் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேசமயம் நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருக்கும் ஒருவருக்கு வரும் இதய செயலிழப்பால் அவர் தன் பாதி வாழ்நாளின் பாதியிலேயே இறந்து விடுகிறார் என்பது மிகவும் கவலைதரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

என்னதான் பல்வேறு வழிகளில் இதய செயலிழப்பும் சிறுநீரக பாதிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருந்தாலும், இதை பற்றி சரியான புரிந்துணர்வு மக்களிடம் தற்பொழுது இல்லை. தற்பொழுது பெருகியுள்ள உயர்ந்த மருத்தவ தரத்தின் உதவியுடன் இந்த பாதிப்புகளை சிறந்த முறையில் கண்காணிப்பதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.

இதய செயலிழப்பும் சிறுநீரகமும்

இதய செயலிழப்பும் சிறுநீரகமும்

இதய செயலிழப்பு என்பது கிட்டத்தட்ட எந்தவிதமான இதய நோய்களாலும் ஏற்படக்கூடிய ஒரு மருத்துவ நிலை ஆகும். பல்வேறு வழிகளில் இதய செயலிழப்பானது ஒருவரின் சிறுநீரகத்தை பாதிக்கிறது. பின்வரும் முக்கியமான பாதிப்புகள் அவற்றுள் சில.

ஒருவரின் இதய துடிப்பு குறைந்து காணப்படும் - நாள்பட்ட இதய செயலிழப்பால் ஒருவர் இதயத்தின் இரத்தத்தை மற்ற பாகங்களுக்கு உந்தும் திறன் வலுவிழக்கிறது, எனவே இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இதயத்தால் உந்தப்படும் இரத்த அளவு குறையும். எனவே, இதனால் சிறுநீரகத்திற்கு குறைந்த அளவே இரதம் செல்வதால், சிறுநீரகத்தில் வடிகட்டப்படும் இரத்தத்தின் அளவு குறைகிறது. இதனால் சிறுநீரகத்திற்கு எந்த வேலையும் இல்லாமல் அதன் செயல்பாடு முடங்கி நலிந்து போகிறது.

ஹார்மோன் உப்பு மற்றும் நீரின் அளவை கட்டுப்படுத்தாமல் போவதால், உடம்பில் நீர் மற்றும் உப்பின் அளவு அதிகரிக்கிறது. எனவே இரத்தமானது உடம்பின் பிற முக்கிய பாகங்களுக்கு மிகவும் வேகமாக குறுகிய காலத்தில் இரத்தத்தை செலுத்துகிறது. சிறிது காலம் இது பெரிய பிரச்சனையாக இல்லமால் இருக்கலாம், ஆனால் சில காலத்திற்கு பிறகு, இந்த நரம்பியல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் மூலம் வீக்கம் மற்றும் இதய துடிப்பு மேலும் குறையவும் வாய்ப்பு உண்டாகிறது.

சிறுநீரக நரம்புகளில் அதிகரிக்கும் அழுத்தம்- இதய செயலிழப்பினால் உண்டாகும் குறைந்த இதய துடிப்பினால் சிறுநீரகத்தை செயல்படுத்தும் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் மூலம் சிறுநீரகத்திக்கு இரத்தத்தை சுத்திகரிப்பது கடினமான செயலாவதால் சிறுநீரகம் பாதிப்பு மேலும் மோசமடைகிறது.

சிறுநீரக பாதிப்பால் இதயம் எவ்வாறு பாதிப்படையும்?

சிறுநீரக பாதிப்பால் இதயம் எவ்வாறு பாதிப்படையும்?

சிறுநீரக பாதிப்பின் மூலமாகவும் பெரும்பாலும் இதய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வகையான பாதிப்பு பொதுவாக இரண்டு முக்கிய வழிகளில் ஏற்படுகிறது.

முதலில், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பால் பொதுவாக ஒருவரின் உடலில் உப்பு மற்றும் ஏனைய திரவங்கள் தேங்கி விடுகிறது, இது இதயத்தில் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தலாம். ஒருவருக்கு ஏற்கனவே ஏதாவதொரு இதய பாதிப்பு இருக்கும்பொழுது, அதாவது கரோனரி இதய நோய் அல்லது CAD, இதய வால்வு நோய், இதய தசை நோய் (cardiomyopathy) போன்ற நோய்கள் உள்ள ஒருவருக்கு உடல் திரவ அளவு அதிகரிப்பதால் இதயத்தின் செயல்பாடு சிறிது சிறிதாக நலிவடைந்து காலபோக்கில் நிரந்தர இதய செயலிழப்பு ஏற்பட்டுவிடுகிறது. இது சிறிது சிறிதாக ஒருவரை பாதித்து கடைசியில் அவரின் உயிரையும் பறிக்கிறது.

இரண்டாவதாக, நாட்பட்ட சிறுநீரக நோய், கரோனரி இதய நோய்-ஐ உருவாக்குவதற்கான முக்கிய ஆபத்து காரணி ஆகும் மற்றும் ஒருவருக்கு ஏற்கனவே கரோனரி இதய நோய் இருக்கும் பட்சத்தில் அந்த நோயின் அறிகுறிகள் மேலும் மோசமடைகிறது. சிறுநீரக நோய் இல்லாமல் கரோனரி இதய நோய் மட்டும் உள்ள மனிதர்களை விட, கரோனரி இதய நோய் மற்றும் நீண்டகால சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு மோசமான அறிகுறிகள் மற்றும் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இரண்டு நோயும் ஒருவருக்கு இருக்குமேயானால் அவரின் உடல்நலம் வெகுவிரைவாக பாதிப்படைகிறது.

MOST READ: மாரடைப்பு வர்றதுலயும் ஆண் - பெண் வித்தியாசம் இருக்காம்... எப்படி வரும் என்ன அறிகுறிகள்னு தெரிஞ்சிக்க

சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் கரோனரி தமனி நோய் (CAD)-

சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் கரோனரி தமனி நோய் (CAD)-

நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ள ஒருவருக்கு கரோனரி தமனி நோய் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு சிறுநீரக பாதிப்பு உள்ள ஒருவருக்கு கரோனரி தமனி நோய் ஏற்பட கீழ்கண்ட இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

பெரும்பாலான மக்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ள ஒருவருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ள ஒருவருக்கு கரோனரி தமனி நோய் வருவதை துரிதப்படுத்தும் காரணிகளாக சில பழக்கவழக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் புகைபிடித்தல், நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், அமைதியான வாழ்க்கை இல்லாமை மற்றும் வயோதிகம் ஆகியவை அடங்கும். எனவே சிறுநீரக பாதிப்பு உள்ள ஒருவர் மேற்கூறிய பழக்கவழக்கங்களில் இருந்து சற்று தள்ளியே இருப்பது நன்மை பயக்க வல்லது.

நீண்டகால சிறுநீரக நோய் பாதிப்பு ஒன்று மட்டுமே ஒருவருக்கு கரோனரி தமனி நோய் உண்டாக வல்லது. சிறுநீரக சம்பத்தப்பட்ட பாதிப்புகள் இந்த அபாயத்தை பல வழிமுறைகளால் அதிகரிக்கிறது. நாள்பட்ட சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடைய மற்ற இரத்த மற்றும் வளர்சிதை மாற்ற இயல்புகளும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இவற்றுள் அசாதாரண கால்சியம் வளர்சிதை மாற்றம், இரத்த சோகை, நாள்பட்ட அழற்சி நிலை (உயர்ந்த CRP நிலைகள்), ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உயர்த்தப்பட்ட இரத்த புரத அளவு ஆகியவை முக்கியமானவையாகும்.

இந்த காரணிகளினால், மேலும், பொதுவான உடலியக்க செயலிழப்பு, கரோனரி தமனி நோய் (CAD) மற்றும் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, மற்றும் இதய நோய்க்குறி எக்ஸ் (cardiac syndrome x) போன்ற பிற இதய நோய்களுடன் தொடர்புடைய நிலைமைகளை ஒருவரது உடலில் தோன்றுகின்றன.

எவ்வாறு பாதுகாப்பது?

எவ்வாறு பாதுகாப்பது?

சிறுநீரகமும் இதயமும் ஒன்றுக்கொன்று நெருங்கி தொடர்பு கொண்டிருப்பதால், ஒன்றில் ஏற்படும் பாதிப்பு மற்றொரு உறுப்பிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இவற்றில் ஒரு பாதிப்பு ஏற்படுபொழுது உடனடியாக மருத்துவரை அணுகி மற்றொரு உறுப்பிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும். தக்க மருத்துவ நடவடிக்கை ஒன்றே இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.

MOST READ: நம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க

இதய பாதிப்பு - என்ன செய்ய வேண்டும்?

இதய பாதிப்பு - என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு இதய பாதிப்பு இருக்குமேயானால், உங்களுக்கு மேலே கூறியுள்ளபடி சிறுநீரக பாதிப்பும் ஏற்படும். எனவே சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் சிறந்த முடியில் தடுக்க ஒரே வழி, இதய நோய்க்கு தக்க மருத்துவ நடவடிக்கைகளை எடுப்பதே ஆகும். குறிப்பிட்ட இதய நோய்களான கரோனரி தமனி நோய், இதய வால்வு நோய், கார்டியோமைரோபதி, அல்லது வேறு எந்த ஒரு வகையான இதய நோயை குணப்படுத்தும் மருத்துவத்தை மட்டும் பார்க்காமல், இதயத்தை வலுப்படுத்துவற்கான சிறந்த சிகிச்சைகளையும் சேர்ந்தே பார்க்க வேண்டும்.

நீரிழிவு, உயர்ந்த கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை தீவிரமாக குணப்படுத்துவது, நல்ல உடல்நிலையை பேணிக்காப்பது, புகை பிடிக்காமல் இருப்பது, ஏராளமான உடற்பயற்சிகளை தினசரி செய்யவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

சிறுநீரக பாதிப்பு - என்ன செய்ய வேண்டும்?

சிறுநீரக பாதிப்பு - என்ன செய்ய வேண்டும்?

நாம் மேலே ஏற்கவனவே பார்த்தபடி, சிறுநீரக பாதிப்பு உள்ள ஒருவற்கு கரோனரி தமனி நோய் பாதிப்பு மிகவும் எளிதாக ஏற்படுகிறது. அதாவது உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருக்குமேயானால், நீங்கள் மேலே சொல்லப்பட்ட அனைத்து இதய நோய் சம்பத்தப்பட்ட அறிகுறி காரணிகளை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

மருத்துவர்கள் கருத்துப்படி, யாருக்காவது நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு இருக்குமேயானால், அவருக்கு ஸ்டாடின் மருந்து கொடுப்பதன் மூலம் இதய பாதிப்பை கட்டுக்குள் வைக்கலாம். பாதிப்பு மிகவும் மோசமான நிலையில் ஆபத்தான கட்டத்தை நெருங்கும்போது தடுப்பு ஆஸ்பிரின் மருந்து கொடுக்கலாம்.

MOST READ: நம்ம ரௌடி பேபி அறந்தாங்கி நிஷா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ...

என்ன தொடர்பு?

என்ன தொடர்பு?

சிறுநீரக பாதிப்பு உள்ள ஒருவருக்கு இதய சம்பத்தப்பட்ட நோய்கள் வருவதற்கு ஏரளமான வாய்ப்புகள் உள்ளது. அதே போல் இதய பாதிப்பு உள்ளவருக்கு ஏரளமான சிறுநீரக சம்பத்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகவும் வழி வகைகள் உள்ளன. எனவே ஒருவருக்கு இவ்விரண்டு உடல் உறுப்புகளில் ஏதெனும் ஒன்றில் பாதிப்பு ஏற்படும்பொழுது அந்த பாதிப்பை மட்டும் குணப்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்தாமல், மற்ற முக்கிய உடல் உறுப்பையும் பாதுகாக்க என்னவெல்லாம் மருத்துவ ரீதியாக செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து நோயின் பாதிப்பை குறைத்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what is the Link Between Heart and Kidney Disease

Damaged kidneys put extra stress on the heart. The damage prevents the kidneys from cleaning waste and extra fluids from the blood and body. When waste and extra fluid stay in the body, people can have other health problems, including high blood pressure, heart disease, and stroke.
Desktop Bottom Promotion