Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
உங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..? தெரிஞ்சிகிட்டா அலரிடுவீங்க.!
மனிதர்கள் பலவிதம்; அதே போல அவர்களுக்கு வர கூடிய பிரச்சினைகளும் வெவ்வேறு விதம். வெளியில் இருந்து வர கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முதலில் உடலுக்குள் தெம்பு வேண்டும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலமாக இருந்தாலே பலவித நோய்களை அசால்ட்டாக ஒரு கை பார்த்து விடலாம். இருப்பினும் மனிதனால் சமாளிக்க முடியாத ஒரு பெரும் நோயாக புற்றுநோய் உருவெடுத்து உள்ளது.

நுரையீரல், கல்லீரல், மார்பு, மூளை போன்ற பல இடங்களில் இந்த புற்றுநோய் குடியேறும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஒரு உறுப்பை மட்டும் புற்றுநோய் தாக்காது. இது மிகவும் புதுமையாக இருந்தாலும், இது தான் முழுக்க முழுக்க உண்மை. நமது உடலில் புற்றுநோய் ஏற்படாத உறுப்பு ஒன்று உள்ளது. எதனால் இந்த உறுப்பை மட்டும் புற்றுநோய் செல்கள் அரிக்காமல் இருக்கிறது, இதற்கான முழு விவரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

புற்றுநோய் பலவிதம்..!
நாம் நினைப்பதை போல இந்த புற்றுநோய் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானது கிடையாது. உடலில் எங்கு வேண்டுமானாலும் இது தனது ராஜ்யத்தை தொடங்கலாம்.
பெரும்பாலும் நாம் கணைய புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய் போன்றவற்றை தான் அதிக அளவில் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இது வரை கேட்டிருக்காத ஒரு புற்றுநோயும் உண்டு.

அது என்ன?
நாம் இது வரை கேள்விப்பட்டிராத புற்றுநோய் "இதய புற்றுநோய்" தான். இதயத்தில் புற்றுநோய் வருமா..? என்கிற சந்தேகம் இதுவரையிலும் நம்மில் சிலருக்கு கூட தோன்றி இருக்காது. ஆனால், இது தான் உண்மை. மற்ற உறுப்புகளை காட்டிலும் இதயத்தில் புற்றுநோய் உருவாகாதாம்.

எதனால் புற்றுநோய்?
புற்றுநோய் என்பது நமது DNA சிதைவடைந்து அதன் செல்கள் புற்றுநோய் செல்களாக உருவாகும். ஒரு செல் இரண்டாகும். இரண்டு நான்காகும். நான்கு செல் எட்டாகும்...இப்படியே ஒவ்வொன்றும் பல வகையில் பிரிந்து லட்ச கணக்கான செல்களாக பிரிந்து விடும். இது இதயத்திற்கு மட்டும் மாறுபடும்.

மற்ற உறுப்புகள்
அதிகப்படியான சூரிய ஒளி தோல் புற்றுநோயை உண்டாகும். கார்சினோஜெனிக் கொண்ட பொருட்களை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும்.
மார்பகத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மார்பக புற்றுநோயை உண்டாக்கும். இப்படி மற்ற உறுப்புகளில் உருவாவது போன்ற அமைப்பு இதயத்திற்கு கிடையாது. காரணம் தெரியுமா..?

காரணம் என்ன..?
இதயத்தில் உள்ள தசை செல்கள் மைகோசிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற உறுப்புகளில் உள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக மாற்றம் பெறும் தன்மை கொண்டவை. ஆனால், இதயத்தில் உள்ள இந்த தசை செல்கள் ஒன்று இரண்டாக பிரிய வாய்ப்பில்லை.

பிரிக்க முடியாதா..?
இதயத்தின் தசை செல்களை இவ்வாறு பிரிக்க முடியாததற்கு அவற்றின் இயல்பு தன்மை தான் காரணம். இதயத்தில் மாரடைப்பு, இரத்த நாளங்களில் பாதிப்பு, இரத்தம் கட்டி கொள்ளுதல்..இது போன்ற பிரச்சினைகள் தான் உண்டாகும். ஆனால், இதயத்தில் புற்றுநோய் பெரும்பாலும் உண்டாகாது.

மற்ற உறுப்புகளுக்குமா..!
இதயத்தில் பெரும்பாலும் புற்றுநோய் செல்கள் உண்டாகாது. ஆனால், இதயம் மற்ற உறுப்புகளுக்கு இந்த புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கின்றன.
இதயத்தின் வழியாக நுரையீரல், மார்பு, இரத்தம், போன்ற பல உறுப்புகளுக்கு புற்றுநோய் ஆபத்தை தரும்.

இதுவரை..!
இதயத்தில் ஏற்பட கூடிய புற்றுநோய் செல்கள் மிக அரிதான வகையிலே உள்ளது. ஓர் ஆய்வின் படி 1 மில்லியன் மக்களில் 50-க்கும் குறைவான மக்களுக்கே இந்த வகை புற்றுநோய் பாதிப்பு உள்ளதாம். மற்ற வகை புற்றுநோயை போல இது உடலில் எளிதாக உருவாகாது என்பதே நிதர்சனம்.



Click it and Unblock the Notifications
