Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
உங்கள் இதயம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள் இதோ!
மனித உடலின் மிக முக்கிய உறுப்பு இந்த இதயம் தான். இதயத்தின் இயக்கம் சீராக இல்லையென்றால் எளிதில் மரணம் தான் என்பதை நாமே கணக்கிட்டு கொள்ளலாம். மற்ற உறுப்புகளை காட்டிலும் இதயத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் என்றுமே உள்ளது. இதயம் அதன் செயல்திறனை சீராக செய்யவில்லை என்றால் மற்ற உறுப்புகளும் மெல்ல மெல்ல பாதிக்கப்படும்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட இதயம் சரியாக இயங்கவில்லை என உங்களுக்கு ஒரு சில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும். குறிப்பாக இதயம் உங்களிடம் முணுமுணுக்கும். இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
இதயம் முணுமுணுக்க ஆரம்பித்தால் அது ஆபத்தில் தான் முடியும். இதன் அறிகுறியை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை இனி பார்க்கலாம்.

முணுமுணுப்பா?
உண்மையிலே இதயம் முணுமுணுக்குமா? என்கிற உங்கள் சந்தேகத்திற்கு விடை "ஆம்" என்பதே. இதை தூக்க நேரத்தில் நாம் நன்றாக உணர இயலும். இதயத்தில் இருந்து "உஸ்..உஸ்" என்கிற சத்தம் ஏற்பட்டால் அது தான் இதயம் முணுமுணுப்பாகும். இதை நம்மால் முன்கூட்டியே அறிந்து கொள்ள இயலும்.

மூச்சு திணறல்
மூச்சு விடும்போது அதன் கால அளவு அதிகமாக எடுத்து கொண்டால் அது இந்த பிரச்சினைக்கான அறிகுறியாகும். இதற்கு காரணம் இரத்த ஓட்டம் குறைந்தது தான். இதயத்தில் குறைந்த அளவு இரத்த ஓட்டம் இருந்தால் இப்படிப்பட்ட பாதிப்பு உண்டாகும்.

இரத்த சோகை
இரத்த சோகை இருப்போருக்கு பல்வேறு பாதிப்புகள் இருக்கும். அதில் ஒன்று தான் இதய முணுமுணுப்பு பிரச்சினையும். சிவப்பு இரத்த அணுக்கள் போதுமான அளவு ஆக்சிஜனை மற்ற திசுக்களுக்கு கொண்டு செல்லவில்லை என்றால் இந்த பாதிப்பு ஏற்படும். இதற்கு காரணம் உடலில் இரத்தம் குறைவாக இருப்பது தான்.

வயிற்று உப்பசம்
காரணமே இல்லாமல் வயிறு உப்பி கொண்டு போனால் அதற்கும் உங்கள் இதயத்திற்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளது என அர்த்தம். இதயத்தின் வால்வு பகுதியில் சீரான இரத்த போக்கு இல்லையென்றால் இப்படி ஏற்படும்.

தைராய்டு
இதயத்தின் இந்த முணுமுணுப்பு சத்தத்தை தைராய்டு இருப்பதை வைத்தும் நம்மால் கண்டுபிடிக்க இயலும். தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். சிலருக்கு இது எப்போவாவது ஒரு முறை தான் அறிகுறியாக வெளிப்படும்.

நீல நிறம்
உடலில் சீற்ற இரத்த ஓட்டம் இருந்தால் அவை உங்கள் இதயம் ஆபத்தான நிலையில் உள்ளதை குறிக்கிறது. இதனை உடல் முழுக்க நீல நிறம் பரவுவதை வைத்து நம்மால் கண்டுபிடிக்க இயலும். குறிப்பாக உதடுகள், கை விரல்கள், போன்றவற்றின் மூலம் அறியலாம்.

பசியின்மை
வேளை வேளைக்கு சாப்பிடுவது தான் சரியான பண்பு. ஆனால், சிலருக்கு எவ்வளவு நேரம் ஆகினாலும் பசியே எடுப்பதில்லை. இதற்கும் இதயத்திற்கும் கூட பல்வேறு சம்பந்தங்கள் உண்டு.
மிக மோசமான அளவில் பசியின்மை இருந்தால், இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மயக்கம், தலைவலி
தலைவலி, மயக்க நிலை போன்றவை பல நாட்களாக இருந்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இது கூட உயிருக்கே ஆபத்தான நிலையை உண்டாக்கி விட வாய்ப்புகள் அதிகம். இவை உடலில் திசுக்கள் பாதிக்கப்பட்டதால் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.



Click it and Unblock the Notifications