For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மாரடைப்பால் அகால மரணம் அடைந்த இந்திய பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா?

  |

  ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு) என்பது, உலகெங்கிலும் உள்ள கொடூரமான கொலையாளிகளில் ஒன்றாக உள்ளது. உலகெங்கிலும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறக்கக் காரணம் இதய நோயென்னும் நம்பர் 1 கொலையாளியேயாகும்.

  health

  தற்பொழுதைய நடைமுறையில் இருக்கும் வாழ்க்கைமுறையும் இந்த ஆபத்தான அச்சுறுத்தலுக்கு வழிவகுத்துள்ளது. இதய நோய்களின் தொடர்பு இந்தியப் பிரபலங்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஏனெனில் அவர்களது வாழ்க்கை முறையின் காரணமாக, பெரும்பாலான இந்தியப் பிரபலங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

  ஹார்ட் அட்டாக் தாக்குதல் காரணமாக இறந்த இந்தியப் பிரபலங்களின் பட்டியல் இங்கே:

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  1. தேவ் ஆனந்த்

  1. தேவ் ஆனந்த்

  தேவ் ஆனந்த், இந்திய சினிமாக் கடவுள்களின் வரிசையில் பல்துறை வல்லமை கொண்ட ஒரு எவர்க்ரீன் நடிகர். 114 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் . கைடு, காலா பாணி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 2011 ஆம் ஆண்டில் மருத்துவ பரிசோதனைக்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக அவர் மாரடைப்பால் காலமானார்.

  2. வினோத் மெஹ்ரா:

  2. வினோத் மெஹ்ரா:

  அவரது காலத்தில் மிக அழகான நடிகர்களில் ஒருவராக விளங்கினார் இவர்.வெளியில் தோன்றுவதை விட வினோத் மெஹ்ரா திரையில் மிக அழகாக ஜொலித்தார். அவரது நல்ல குணம் மற்றும் மிகவும் நல்ல நடிப்புத் திறனால், அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சிறந்த விமர்சனங்களைப் பெற்றார். இருப்பினும், கடவுள் அவரை 45 வயதிலேயே நம்மிடமிருந்து பிரித்து விட்டார். ஆம் !! 1990 அக்டோபரில் அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

  3. ரீமா லாகு:

  3. ரீமா லாகு:

  மெய்னே பியார் கியா, ஹம் ஆப்கே ஹெ கோன் , ஹம் சாத் சத் ஹைன், ரீமா லாகு போன்ற திரைப்படங்களில் அம்மா பாத்திரத்தில் நடித்துள்ள ரீமா லாகு, தினசரி வாழ்க்கையை வெள்ளித்திரையில் தத்ரூபமாகக் கொண்டுவந்தார். மே 18 2017 -ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின்போது மாரடைப்பு காரணமாக துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்தார். இறக்கும் நேரம்வரை நல்ல உடல்நிலையையே கொண்டிருந்ததால் , அவரது மரணம் முழு பாலிவுட்டிற்கும் அதிர்ச்சியாக இருந்தது.

  4. ஓம் பூரி:

  4. ஓம் பூரி:

  பாலிவுட்டில் மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் அவரது நுட்பான நடிப்புத்திறனால் திரைப்படத்துறையில் புகழ் பெற்று விளங்கியவர் ஓம் பூரி. இந்தியத் திரைப்படத் துறையில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தார். அவரது சினிமாக் காலம் முழுவதிலும் சவாலான கதாபாத்திரங்களையே எடுத்துக் கொள்பவராக அவர் அறியப்பட்டார், மேலும் தொழில்துறையில் ஒரு உறுதியானவர். அந்தேரியிலுள்ள அவரது இல்லத்தில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்தார். உலக சினிமாவுக்கு அவரது பங்களிப்புக்காக அகாடமி விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

  5. இந்தெர் குமார்:

  5. இந்தெர் குமார்:

  இந்தெர் குமார், ஜூலை 28, 2010 அன்று இதயம் செயலிழந்ததால் மிக இளம் வயதிலேயே காலமானார். அவர் பல படங்களில்,பல மொழிகளில் நிறைய துணைப் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அவர் குறிப்பாக வான்டட், கஹின் பியார் நா ஹோ ஜாயே, தும்கோ நா பூல் பாயெங்கே போன்ற படங்களில் ஏற்ற பாத்திரங்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.

  6. ரஷாக் கான்:

  6. ரஷாக் கான்:

  அவரது பாவம் மற்றும் சிறந்த டைமிங் காமெடியால் வெள்ளித்திரையில் நன்கு அறியப்பட்ட நபரானார். கோவிந்தாவுடன் பல்வேறு படங்களில் நடித்தார். பாலிவுட்டின் 'கோல்டன் பாயி' என்று அழைக்கப்பட்ட இவர் ஜூன் 2016- ல் மாரடைப்பால் இறந்தார்.

  7. ஃபாரூக் ஷேக்:

  7. ஃபாரூக் ஷேக்:

  ஃபாரூக் ஷேக் ஒரு பிரபல நடிகர் மற்றும் ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு ஹிந்தித் திரைப்படங்களில் நடித்தார் , மேலும் அவரது டெலிவிஷன் தொடரான ​​ஜீனா இசி கா நாமிற்காகவும் பிரபலமடைந்தார். மாரடைப்பால் உயிரிழந்த புகழ் பெற்ற பிரபலமான இவர் , விடுமுறை நாட்களில் துபாயில் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் அவரது மரணம் பாலிவுட்டிற்கு அதிர்ச்சியாக அமைந்தது.

  8. விவேக் ஷாக்:

  8. விவேக் ஷாக்:

  விவேக் ஷாக் தனது நகைச்சுவை மற்றும் பாடல்களால் அறியப்பட்ட ஒரு சிறந்த நடிகர். ஜஸ்பால் பாட்டி மற்றும் இவரது காமெடி இணை பாலிவுட்டில் மிகப்பிரபலம் மற்றும் சிறந்த நகைச்சுவை ஜோடிகளில் ஒன்றாகும். 11 ஜனவரி 2011 அன்று மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. ஏட்ராஸ், 36 சீனா டவுன், காடார் ஏக் பிரேம் கதா போன்ற மற்றும் பல படங்களின் சிறப்பான கதாபாத்திரங்களின் மூலம் சிறந்த நடிகராக அறியப்பட்டர் இவர்.

  9. ஸ்ரீதேவி:

  9. ஸ்ரீதேவி:

  ஸ்ரீதேவியின் பிரிவு மிகப்புகழ்பெற்ற பிரபலமான மாரடைப்பு நிகழ்வுகளில் ஒன்றாகும். ஸ்ரீதேவி திடீரென்று இறந்த செய்தியை ஜீரணித்துக்கொள்ள பாலிவுட்டுக்கு நாட்கள் தேவைப்பட்டது. நம்பமுடியாத ஒரு பெரிய இழப்பு மற்றும் முழுத் திரைப்படத்துறைக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது அந்தச் செய்தி.துபாயில் மோஹித் மர்வாவின் திருமணத்தில் இருக்கும் பொழுது , ​​2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது அவருக்கு. அவரைச் சிறப்பிக்கும் விதமாக , அகாடமி விருதுகளில் மெமோரியம் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.

  10. தேவன் வர்மா:

  10. தேவன் வர்மா:

  பாலிவுட்டின் மிகச் சிறந்த காமெடி நடிகர்களின் வரிசையில் இடம் பெற்றவர் இவர், டிசம்பர் 2014 ல் புனேவில் மாரடைப்பால் இறந்தார். அங்கூர், சோரி மேரா காம், அந்தாஸ் அப்னா அப்னா, சோர் கே கர் சோர். போன்ற புகழ் பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு நகைச்சுவை நடிகராக பல ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  List of Indian Celebrities Died Due to Heart Attack

  The lifestyle that is currently in vogue has also led to this alarming threat. Indian celebrities with heart problems have been very prominent. Because of their way of living, Indian celebs have often succumbed to this disease.
  Story first published: Friday, June 22, 2018, 19:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more