வைட்டமின் டி3 இதய செயல்திறனை ஊக்குவிக்கிறது: ஆய்வில் தகவல்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் VINIDICATE என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் வைட்டமின் டி3 இதய செயல்திறனை மேம்படுத்த வெகுவாக உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வைட்டமின் டி3 நாள்பட்ட இதய கோளாறுகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதய நலனை பற்றி எவ்வாறு அறிவது என தெரியுமா?

மருத்துவர். கிளாஸ் விட்டி என்பவர் முன்னின்று நடத்திய, இதய நோயாளிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வின் மூலமாக வைட்டமின் டி3 இதய தசைகளின் வலிமையை ஊக்குவித்து வலிமையடைய செய்கிறது என தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய ஒளி

சூரிய ஒளி

வைட்டமின் டி3 என்பது சூரிய ஒளியில் இருந்து மிகையாக கிடைக்கும் சத்தாகும். மேலும், சூரியனில் இருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் டி3 சரும நலனையும் பாதுகாக்கிறது.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இதய செயல்திறன் குறைபாடு பிரச்சனை கொண்டிருந்த 160 நபர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இரு பிரிவாக பிரித்து ஓர் பிரிவினருக்கு வைட்டமின் டி 3 அளித்தும், மற்றொரு பிரிவினருக்கு எப்போதும் கடைப்பிடிக்கப்படும் மருந்துகள் அளித்தும் நடத்தப்பட்டது.

மாற்றம்

மாற்றம்

இந்த ஆய்வின் முடிவில், கார்டியாக் அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தி இதய செயல்திறனை ஆராய்ந்த போது, வைட்டமின் டி3 எடுத்துக் கொண்டவர்கள் மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதய துடிப்பு நன்கு மேலோங்கியிருந்தது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

வைட்டமின் டி3 உட்கொண்ட 80 பேர் மத்தியில் இதய செயல்திறன் சதவீதம் சராசரியாக 24ல் இருந்து 34% சதவீதத்திற்கு முன்னேற்றம் காணப்பட்டது. மேலும், மற்றொரு பிரிவினரிடம் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள்

இதன் மூலம் வரும் காலத்தில் இதய செயல்திறன் காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்பை குறைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணமாக ஏற்படும் இறப்புகள் தான் உலகளவில் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vitamin D3 improves heart function: Study

Vitamin D3 improves heart function: Study, read here in tamil.