டீனேஜ் வயதில் அதிகரிக்கும் உடல் பருமன் உயிருக்கே உலை வைக்கும் - உஷார்!

Posted By:
Subscribe to Boldsky

பதின் வயதில் உடல் பருமனாக இருப்பது நடுவயதில் இதய நோய்கள் அதிகரிக்கவும், உயிரிழப்பு நேரிடவும் காரணியாக இருக்கிறது என சமீபத்திய ஆய்வு தகவலில் வெளியாகியுள்ளது. உலகளவில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.

ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா? இதப்படிங்க!!!!

ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம், ஷீபா மருத்துவ அமைப்பின் மருத்துவர் கிளாட் ட்விக், ப்ரான் பள்ளியின் மருத்துவர் ஹாகாய் லெவின் மற்றும் சில இஸ்ரேல் மருத்துவர்கள் சேர்ந்து நடத்திய ஆய்வில் இளம் வயதினர் மத்தியில் காணப்படும் உடல் பருமன் இதய நோய்களை அதிகரிக்க செய்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சியில் 1967 - 2010 ஆண்டுகளுக்கு மத்தியில் பிறந்தவர்களின் உடல் எடை மற்றும் உடல் நலன் குறித்து ஆய்வில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன் மூலமாக அவர்களது உடலில் உண்டாகும் தாக்கங்கள் என்னென்ன என மேலும் ஆய்வு நடத்தப்பட்டது.

தாக்கம்

தாக்கம்

இவர்களில் இளம் வயதில் உடல் பருமனோடு இருந்தவர்களின் உடல்நலத்தில் இதய கோளாறுகள் அதிகமாக ஏற்பட்டது கண்டறியப்பட்டது. முக்கியமாக மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய நோய்கள் 2011 ஆண்டு வாக்கில் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டிருந்தது.

நடுவயதில் மரணம்

நடுவயதில் மரணம்

மேலும், இந்த ஆய்வின் மூலமாக இளம் வயதில் உடல் பருமனோடு இருப்பவர்கள் இதய நோய்களின் காரணமாக நடுவயதில் மரணமடையும் எண்ணிக்கை அதிகரித்து வருவருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

திடீர் மரணம்

திடீர் மரணம்

அதிலும் பலர் எந்த விதமான இதய நோய்க்கான அறிகுறிகளும் இன்றி திடீர் மரணம் அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சிக்குள்ளான தகவலாக கண்டறியப்பட்டது.

கடந்த 10 வருடங்கள்

கடந்த 10 வருடங்கள்

கடந்து பத்து வருடங்களாக உடல் பருமன் மற்றும் உடல் பருமன் காரணத்தால் அதிகரிக்கும் இதய நோய் சார்ந்த மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு தகவல்கள் நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆப் மெடிசின்-ல் வெளிவந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Teenage Obesity Can Kill You In Midlife

Teenage Obesity Can Kill You In Midlife, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter