Latest Updates
-
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம்
உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும்!–மருத்துவர்கள் எச்சரிக்கை

உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இதயத்திற்கு ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் இந்த ஆய்வினை மேற்கொண்டது.
ரத்த நாளங்கள் பாதிப்பு
டிக்கின்சன் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 16 ஆரோக்கியமான நபர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 8 நபர்களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப்படுத்தப்பட்ட தக்காளி சூப் 10 முறை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன்படுத்தப்பட்ட நொறுக்குத்தீனி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இதய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தது.
அதிக உப்பு ஆபத்து
இதே ஆய்வு மீதமுள்ள 8 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஓட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன்படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது. எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
மேலும், உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளிவரும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. நம் ஊரில் நிறைய பேர் ஊறுகாயும், அப்பளமும்தான் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications