For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுள் காக்கும் அட்ரீனல் சுரப்பி! கவனம் தேவை!!

By Mayura Akilan
|

Adrenal Fatigue
சோர்வாக இருப்பது போன்ற உணர்வு. வேலை செய்ய விருப்பமின்மை, எதிர்பாராத சமயங்களில் அடிக்கடி வாந்தி என அல்லல்படுகிறீர்களா? தோல் வறண்டு நிறம் மாற்றம் ஏற்படுகிறதா? ரத்த ஓட்டம் குறைந்து உடல் வலிமையற்ற நிலையை உணர்கிறீர்களா? நிச்சயம் நீங்கள் மருத்துவரை நாடவேண்டும். உங்களின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் அட்ரீனலின் சுரப்பியில் ஏற்பட்டுள்ள பாதிப்புதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

அடிஸன் நோய்

அட்ரினலின் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் சுரப்புத் தன்மை குறைவதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது என்று அடிஸன் என்பவர் தெரிவித்த காரணத்தல், இதற்கு அடிஸன் நோய்' என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

ஆயுள் காப்பான்கள்

சிறுநீரகத்தின் மேலே காணப்படும் இரண்டு சிறிய நாளமில்லா சுரப்பிகள்தான் அட்ரீனலின். உடலின் நீர்ச் சத்து, உயிர்ச் சத்துகளைப் பராமரிப்பது, ரத்த அழுத்தம்- ரத்தக் குழாய்களைப் பராமரிக்கும் பணியை இவை கருவறையிலிருந்து கல்லறை வரை செய்கின்றன. இந்த முக்கியப் பணிகளை அட்ரீனல் சுரப்பிகள் செய்வதால் இவற்றை ஆயுள் காப்பான்கள் என்றும் அழைக்கின்றனர். தேவைப்படும் நேரத்தில் மனிதனின் இதய வேகத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை அட்ரீனல் சுரப்பிகள். மேலும் அட்ரீனல் சுரப்பிகள் சுரக்கும் நீர்கள்தான் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய் பராமரிப்பு உள்பட உடலில் பல விஷயங்களின் கட்டுப்பாட்டு அறைகளாக விளங்குகின்றன.

ஆண்களை பாதிக்கும்

அட்ரீனல் சுரப்பியில் குறைபாடு ஏற்படுவதால் நோயாளிகளுக்குப் பலவீனம், தோல் வறண்டு போதல், சோர்வு முதலியவை உண்டாகும். பிறகு சிறிது சிறிதாக அது திகரித்துக்கொண்டே போகும். உற்சாகம் குறையும். வளர்ச்சி இல்லாமல் மெலிந்துவிடுவார். தசைகள் ஒடுங்கிவிடும். கையில் ஜில்'லென்று ஆகிவிடும். தோல் நோய்கள், அரிப்புகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இது ஆண்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும். அடிஸன் நோய் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

மன அழுத்தம்

அட்ரீனலின் சுரப்பு குறைபாடினால் நீண்டகால மன அழுத்தம் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு அட்ரீனலின் சுரப்பு குறைபாடு ஏற்பட்டால் அது பிறக்கும் குழந்தையை பாதிக்கும். இதனால் அலர்ஜி, ஆஸ்துமா, ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு ஏற்படும்

அட்ரீனல் சுரப்பி கோளாறு காரணமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இருதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த நாளங்களில் கல்சியம் உப்பு மற்றும் இரத்தக் கொழுப்பு படிப்படியாகப் படிந்து அதன் விட்டத்தைக் குறைக்கும். அட்ரீனல் சுரப்பி சுரக்கும் அட்ரீனாலினலானது இரத்தக் குழாய்களில் படிந்துள்ள படிவத்தை உடைத்து எடுத்து இரத்தத்துடன் கலக்கச் செய்யும். இவ்வாறு இடம்பெயர்ந்த படிவம், இருதயத்திலுள்ள மிகக் குறுகிய ரத்த நாளங்களுக்குள் புகும்போது அதை அடைத்து இரத்த ஓட்டத்தை தடுத்து மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும். இந்த சுரப்பு அதிகாலை மூன்று மணியளவில்தான் அதிகமாகக் சுரக்கப்படும். இதனால்தான் அதிகமான மாரடைப்பு அதிகாலையில் ஏற்படுகிறது.

மன உளைச்சல்

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் அறிகுறியாக சில நாட்களுக்கு முன்பிருந்தே ஏதாவது கடினமான வேலைகள் செய்யும்போது ஒரு மெல்லிய வலி நெஞ்சின் மத்தி யில் ஏற்படும். அளவிற்கு மீறி உணவு உண்டபோதும், இவ்வலி ஏற்படும். உணர்ச்சிவசப்படும் போதும் மன உளைச்சல் அதிகரிக்கும்போதும் பயம், கோபம், ஏமாற்றம் ஏற்படும் போதும் இவ்வலி ஏற்படும். மேற் படி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முன்குறிப்பிட்ட அட்ரீனல் சுரப்பி Catecholamine கேட்டகோலமைன் என்ற சுரப்பை அதி கமாக சுரப்பதால் இருதயம் விரை வாகத் துடிப்பதால் மார்பு வலி ஏற்ப டும். இவ்வாறாக ஏற்படும் மார்பு வலியை அலட்சியம் செய்யாது தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் மாரடைப்பு ஏற்படாது தடுக்கலாம்.

மருத்துவர் ஆலோசனை

ஆரம்ப நிலையாக இருந்தால், சாதாரணமாக உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டாலே போதும். விரைவில் குணம் ஏற்பட்டுவிடும். டாக்டர் நிர்ணயிக்கும் அளவில் கார்ட்டிசோன் மாத்திரைகளை உட்கொண்டாலே போதும். ஆனால் சோர்வடையும் அனைவருமே தங்களுக்கு அடிஸன் நோய் ஏற்பட்டிருப்பதாகக் கருதக் கூடாது. இது ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியது. எனவே மருத்துவரை நாடாமல் நோயை முடிவு செய்துவிடக் கூடாது என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

English summary

Adrenal disorders affect your heart | ஆயுள் காக்கும் அட்ரீனல் சுரப்பி! கவனம் தேவை!!

Adrenal disorders can occur after abuse of caffeine/stimulants, long-term stress (physical, emotional, or nutritional), and chronic viral or fungal infections.
Story first published: Thursday, March 1, 2012, 18:26 [IST]
Desktop Bottom Promotion