Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
கண்ணில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப மாரடைப்பு வரப்போகுதுன்னு அர்த்தம்.. உஷார்...
Heart Attack Symptoms In Tamil: மாரடைப்பு ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். முக்கியமாக பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் ஏற்படலாம். உலகில் மாரடைப்பால் தான் மில்லியன் கணக்கான மக்கள் ஆண்டுதோறும் இறந்து வருகிறார்கள்.
இப்படி மாரடைப்பு ஒருவருக்கு வருவதற்கு காரணம், நாம் உண்ணும் உணவுகளில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் இரத்தக்குழாய்களில் அப்படியே தேங்கி, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, மாரடைப்பைத் தூண்டுகின்றன.

பெரும்பாலானோர் மாரடைப்பு குழந்தைகளுக்கு வருவதற்கான வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முற்றிலும் அது தவறு. குழந்தைகளுக்கும் மாரடைப்பு வரக்கூடும். பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும் அந்த அறிகுறிகளைக் கொண்டு மாரடைப்பு வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.
மாரடைப்பின் அறிகுறி என்றதும் பலரும் நெஞ்சு பகுதி மற்றும் சுவாசிப்பதில் உள்ள பிரச்சனை மட்டும் தான் கவனிப்பார்கள். ஆனால் மாரடைப்பு வரப் போகிறது என்றால், அது கண்களிலும் அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது கண்களில் தெரியும் மாரடைப்பின் அறிகுறிகளைக் காண்போம்.
கண்களின் நிறங்களில் மாற்றம்
கண்களின் நிறங்களில் மாற்றங்களைக் காண்கிறீர்களா? அதுவும் சிவந்தோ, சற்று மஞ்சள் நிறத்திலோ இருக்கிறதா? அப்படியானால் கண்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் இப்படி ஏற்பட்டிருக்கலாம். எனவே திடீரென்று கண்களில் இம்மாதிரியான மாற்றத்தைக் கண்டால், அது இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கண்களில் வீக்கம்
திடீரென்று கண்களைச் சுற்றியுள்ளப் பகுதி வீங்கி காணப்படுகிறதா? அப்படியானால் இதயத்தில் உள்ள பிரச்சனையின் காரணமாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் நீர் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க அறிவுறுத்தப்படுகிறது.
சரியாக பார்க்க முடியாமை
எக்காரணமும் இல்லாமல் திடீரென்று எந்த ஒரு பொருளையும் சரியா பார்க்க முடியவில்லையா? பொருட்கள் அனைத்தும் மங்கலாக தெரிகிறதா? அப்படியானால் இதயத்தில் உள்ள பிரச்சனையின் காரணமாக கண்களில் இரத்த ஓட்டம் குறைந்து, அதன் விளைவாக பார்க்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் உடனே மருத்துவரிடம் இதை தெரிவிக்க வேண்டும்.
கண் இமை தொங்கி காணப்படுவது
உங்களின் கண் இமைகள் தொங்கி காணப்படுகிறது என்றால், அது மாரடைப்புக்கான ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம். கண் இமை தசைகளில் இரத்த ஓட்டம் குறையும் போது, அப்பகுதியில் உள்ள தசைகள் வலுவிழந்து, தொங்க ஆரம்பிக்கின்றன. இச்சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் இப்பிரச்சனையை தெரிவித்து சிகிச்சை பெற வேண்டும்.
அசாதாரண அசௌகரியம்
தற்போது பலர் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். இதனால் பலரும் கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்தியதால் தான் கண்களில் வலியையும், மிகுந்த அசௌகரியத்தையும் சந்திப்பதாக நினைத்து சாதாணமாக விட்டுவிடுகிறார்கள். ஆனால் கண்களில் அதிகப்படியான அழுத்தம் மற்றும் கண்களில் இரத்த ஓட்டம் குறைகிறது என்றால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
கண் கூச்சம்
பிரகாசமான வெளிச்சத்தைப் பார்த்தால், கண்கள் கூசுகிறதா? இப்படி பிரகாசமான வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவில் கண்கள் சென்சிடிவ்வாக உள்ளது என்றால், கண்களில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். கண்களுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை என்றால், இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
