Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
தினமும் சோம்பு நீரை 'இப்படி' தயாரிச்சு குடிங்க.. அப்புறம் உடம்புல நடக்குற அதிசயத்தைப் பாருங்க...
Health Tips In Tamil: இந்திய சமையலில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் சோம்பு. இதை பெருஞ்சீரகம் என்றும் அழைப்பார்கள். இந்த சோம்பை சமைக்கும் போது சமையலில் சேர்த்தால், அது அந்த உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கக்கூடியது.
இந்த சிறிய விதை நல்ல மணத்தை கொண்டிருப்பதோடு, ஏராளமான சத்துக்களையும் கொண்டுள்ளன. சோம்பு விதைகள் சமையலில் பயன்படுவதைத் தவிர, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கவும் பல காலமாக மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சோம்பு விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால், அது உடலில் பல மாயங்களை புரியும். ஏனெனில் சோம்பு விதைகளில் பொட்டாசியம், மாங்கனீசு, ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவை அதிகமாக உள்ளன.
எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென விரும்பினால், தினமும் இந்த விதைகளைக் கொண்டு தயாரிக்கும் டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். கீழே சோம்பு நீர் அல்லது சோம்பு டீயை எப்படி தயாரிப்பது மற்றும் அதைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. செரிமானத்திற்கு நல்லது
நீங்கள் செரிமான பிரச்சனையால் அடிக்கடி அவதிப்படுவீர்களா? அப்படியானால் சோம்பு டீ அல்லது சோம்பு நீரை தினமும் குடியுங்கள். இப்படி குடிப்பதன் மூலம், செரிமான நொதிகளின் உற்பத்தி மேம்படுத்தப்பட்டு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கலாம். மேலும் இந்த நீர் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். குறிப்பாக இந்த சோம்பு நீரைக் குடித்தால் மலச்சிக்கல், அஜீரண கோளாறு மற்றும் உப்புசத்தைத் தடுக்கும்.
2. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா? அப்படியானால் சோம்பு நீரை குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சோம்பில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு இது இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
3. கண்களுக்கு நல்லது
கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்கிறீர்களா? கண்களில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் சோம்பு நீரை தினமும் குடியுங்கள். இதனால் சோம்பில் உள்ள வைட்டமின் ஏ கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, கண் பார்வையை மேம்படுத்தும்.
4. இரத்தம் சுத்தமாகும்
இரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அடிப்படி நோய்வாய்ப்படக்கூடும். சோம்பு விதைகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிந்து, இரத்தத்தை சுத்தமாக்குகின்றன. எனவே உங்கள் இரத்தம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டுமானால், சோம்பு நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.
5. மாதவிடாய் கால் வலி தடுக்கப்படும்
மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியை சந்திக்கிறீர்களா? ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை உங்களுக்கு உள்ளதா? அப்படியானால் தினமும் சோம்பு நீரைக் குடித்து வந்தால், மாதவிடாய் சுழற்சி சீராவதோடு, வயிற்று வலி வருவதும் தடுக்கப்படும்.
6. புற்றுநோயைத் தடுக்கும்
சோம்பு விதைகள் வயிற்று புற்றுநோய், சரும புற்றுநோய் அல்லது மார்பக புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன. இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். இவை புற்றுநோய்க்கு முக்கிய காரணமான ப்ரீ ராடிக்கல்களை உடலில் இருந்து நீக்குகின்றன. இதன் விளைவாக புற்றுநோயின் அபாயம் குறையும்.
7. எடை இழப்புக்கு உதவும்
சோம்பு விதைகள் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலின் மெட்டபாலிசம் அதிகரித்தால், உடல் எடை தானாக குறையும். எனவே நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், எடை இழப்பு செயல்முறையை வேகப்படுத்த சோம்பு நீரை தினமும் குடித்து வந்தாலே போதும்.
8. முகப்பருவைத் தடுக்கும்
சோம்பு விதைகள் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் சோம்பு விதைகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டு பண்புகள் உள்ளன. இவை முகப்பருவைத் தடுக்க உதவி புரியும். எனவே உங்களுக்கு முகப்பரு பிரச்சனை இருந்தால், சோம்பு நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் முகப்பரு வருவது தடுக்கப்படுவதோடு, சருமமும் பொலிவோடும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சோம்பு நீரை தயாரிப்பது எப்படி?
* சோம்பு நீரைத் தயாரிக்க, இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் சோம்பு விதைகளை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த சோம்பு ஊற வைத்த நீரைக் குடிக்க வேண்டும்.
சோம்பு டீ தயாரிப்பது எப்படி?
* சோம்பு டீயைத் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் சோம்பு விதைகளை சேர்த்து, கொதிக்க ஆரம்பிக்கும் முன்னரே அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு அதை சிறிது நீரை மூடி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* நீரானது மஞ்சள் நிறத்தில் மாறியதும், அதை வடிகட்டி, குடிக்க வேண்டும்.
* இந்த சோம்பு டீயை ஒரு நாளைக்கு 2 கப் குடிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications