Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த விதையை இரவு நீரில் ஊற வைத்து காலையில் குடிச்சா.. உடம்புல என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?
Health Tips In Tamil: பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக இருக்க காபி, டீயைக் குடிப்பதுண்டு. ஆனால் காபி, டீயை வெறும் வயிற்றில் குடிப்பது என்பது நல்லதல்ல. மாறாக, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் இயற்கை பானங்களை குடிப்பதே நல்லது. அதில் ஒன்று தான் ஆளிவிதை நீர்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் ஆளிவிதை நீரை குடித்தால் உடலினுள் பல அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா? ஆம், ஆளிவிதைகளில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, நார்ச்சத்து, புரோட்டீன், தயமின், காப்பர், மாங்கனீசு, மக்னீசியம், பாஸ்பரஸ் செலினியம், ஜிங்க், வைட்டமின் பி6, இரும்புச்சத்து, ஃபேலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பெரூலிக் அமிலம், மாலிப்தீனம் மற்றும் பல சத்துக்கள் உள்ளன.

ஆளிவிதையில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று கோல்டன் நிற ஆளிவிதைகள் மற்றும் ப்ரௌன் நிற ஆளிவிதைகள். இவற்றில் ப்ரௌன் நிற ஆளிவிதைகள் கோல்டன் நிற ஆளிவிதைகள் விட நல்ல ப்ளேவருடன் இருக்கும்.
இந்த ஆளிவிதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். ஆனால் அதை ஊற வைத்து, அதன் நீரைக் குடிக்கும் போது இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது இந்த ஆளிவிதை நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.
செரிமானம் மேம்படும்
செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஆளிவிதை ஊற வைத்த நீரைக் குடிப்பது நல்லது. இது குடலில் உள்ள பிரச்சனைகளை போக்கும். ஆளிவிதைகள் மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்கள், இந்த நீரை குடிக்கும் போது, உடனடி நிவாரணம் கிடைக்கும். கூடுதலாக இந்த நீர் வயிற்றுப்போக்கையும் சரிசெய்ய உதவுகிறது.
தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும்
ஆளிவிதை நீரில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான தலைமுடியின் உற்பத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பி வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது ப்ரீ ராடிக்கல்களின் உருவாக்கத்தைக் குறைத்து, புதிய தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியம் மேம்படும்
ஆளிவிதைகளில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இந்நீரைக் குடிக்கும் போது, அது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடு வெளிக்காட்டும். கூடுதலாக இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் முகப்பருவை உண்டாக்கும் ஆன்ட்ரோஜென் ஹார்மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது.
உயர் இரத்த சர்க்கரை கட்டுப்படும்
சர்க்கரை நோயாளிகள் ஆளிவிதை நீரைக் குடிப்பது நல்லது. ஏனெனில் ஆளிவிதைகளில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இது இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரித்து, சர்க்கரை நோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் குறையும்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு ஆளிவிதை நீர் உதவி புரியும். ஏனெனில் ஆளிவிதை நீரில் டயட்டரி நார்ச்சத்து, ஏராளமாக உள்ளது.
இது குடலியக்கத்தை சீராக்குகிறது, மலத்தை திறம்பட வெளியேற்றுகிறது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது மற்றும் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றுகிறது. ஆகவே உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஆளிவிதை நீரைக் குடித்தால், கொலஸ்ட்ரால் அளவு நன்கு குறையும்.
புற்றுநோய் தடுக்கப்படும்
ஆளிவிதைகள் ஈஸ்ட்ரோஜென்களின் வளர்ச்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. ஆகவே புற்றுநோய் வரக்கூடாதெனில், ஆளிவிதை நீரை தினமும் காலையில் குடித்து வாருங்கள்.
எடை இழப்புக்கு உதவும்
உடல் பருமனைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் உடல் எடையில் ஆளிவிதை நீர் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு ஆளிவிதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைக்கும் போது, அது நீரில் ஊறி வீக்கமடையும். இதை காலையில் உட்கொள்ளும் போது, அது மனநிறைவை அளித்து, வயிற்றை நிரப்பி, கண்ட உணவுகளை உண்ண வேண்மென்ற எண்ணத்தைத் தடுத்து, எடைஇழப்புக்கு உதவி புரியும்.
ஆளிவிதை நீரை தயாரிப்பது எப்படி?
* ஒரு டீஸ்பூன் பொடித்த ஆளிவிதையை எடுத்து, அதை ஒரு டம்ளர் நீரில் போட்டு கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.
* இல்லாவிட்டால் ஒரு டீஸ்பூன் ஆளிவிதையை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில், அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையை வேகமாக குறைக்கத் தூண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications