30 வயதை தாண்டிய பெண்கள் அனைவரும் இந்த 5 பரிசோதனைகளை அவசியம் செய்யணுமாம்... இல்லனா ஆபத்துதான்...!

உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தால் வயது உங்களை எப்போதும் பாதிக்காது என்று பொதுவாக கூறப்படுகிறது. இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறைக்கு இது எப்போதும் ஒத்துவராது.

உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தால் வயது உங்களை எப்போதும் பாதிக்காது என்என்பது பொதுவான பழமொழி. இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறைக்கு இது எப்போதும் ஒத்துவராது. ஏனெனில் நீங்கள் எவ்வளவுதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் உங்களின் வயது மற்றும் அதுசார்ந்த உடல்நல பிரச்சினைகள் மீது கவனமாக இருக்க வேண்டும்.

வயது அதிகரிப்பது அதற்குரிய ஆரோக்கிய பிரச்சினைகளை உங்களுக்குக் கொண்டு வரும். பெண்கள் 30 வயதை எட்டும்போது, ​​அவர்கள் உடல் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களுக்கு ஆளாகிறது. இந்த வயதுகளில் இருக்கும் பெண்கள் பல நோய்களுக்கு எளிதில் ஆளாக வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமாக இருப்பதற்கும், பல்வேறு வகையான நோய்களைத் தவிர்ப்பதற்கும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த பரிசோதனை மூலம் இதய பரிசோதனை

இரத்த பரிசோதனை மூலம் இதய பரிசோதனை

உங்கள் இதயத்தில் சில பிரச்சினைகள் உங்களுக்கேக்த் தெரியாமல் இருக்கலாம். பல சமயங்களில் பெண்கள் குறைவான இதயத்துடிப்பு, நாள்பட்ட சோர்வு மற்றும் அதிக அளவு பதட்டத்தை அனுபவிக்கின்றனர், இந்த அனைத்து அறிகுறிகளையும் பெண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அதிக பணிச்சுமை இந்த சிக்கலை ஏற்படுத்துவதாக அவர்கள் கருதுகின்றனர். 30 வயதைக் கடந்தவுடன் இரத்த பரிசோதனை செய்வது அவசியம். இந்த சோதனைகளில் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் சோதனைகள், இரத்த குளுக்கோஸ் சோதனைகள் மற்றும் உடல் பருமனை சரிபார்க்க பிஎம்ஐ அளவீடுகளுடன் hs-CRP சோதனையும் இருக்க வேண்டும். ஹெச்எஸ்-சிஆர்பி சோதனைகள் சி-ரியாக்டிவ் புரதத்தை அளவிடுவதன் மூலம் மாரடைப்பு அபாயத்தைக் குறிப்பிடுகின்றன, இது இதயப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய வீக்கம் அல்லது தொற்றுநோயை அடையாளம் காண உதவுகிறது.

தொடர்ச்சியான சர்க்கரை நோய் பரிசோதனை

தொடர்ச்சியான சர்க்கரை நோய் பரிசோதனை

நீரிழிவு நோய்க்கு பாலின வேறுபாடு இல்லையென்றாலும், 30 வயதைக் கடந்த பெண்கள் வழக்கமாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை நோயானது, சிறுநீரகப் பிரச்சினைகள், இருதயக் கோளாறுகள் மற்றும் பிற நோய்கள் போன்ற பெரிய உடல்நலச் சிக்கல்களை பெண்களிடையே ஏற்படுத்தக்கூடும் என்பதால், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை முழுமையாக பரிசோதிப்பது அவசியம். FPG சோதனை, HA1C சோதனை, சீரற்ற பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை மற்றும் வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை போன்ற பல்வேறு சோதனைகள் மூலம் சர்க்கரை நோயைக் கண்டறியலாம். உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால்,உங்களுக்கும் சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சரியான இடைவெளியில் நீரிழிவு பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

தைராய்டு பரிசோதனை

தைராய்டு பரிசோதனை

30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வழக்கமான தைராய்டு பரிசோதனை மிக மிக அவசியம், ஏனெனில் வயதுக்கு ஏற்ப தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் பிரச்சினைகள் அதிகரிக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டு பரிசோதனையை மேற்கொள்வது, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, தைராய்டு செயல்பாட்டை சரியான முறையில் பராமரிக்கத் தேவையான சிகிச்சை பெறுவதை உறுதிசெய்யவும் உதவும். வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட பல உடல் செயல்பாடுகள் தைராய்டு சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களால் நிர்வகிக்கப்படுகின்றன. எனவே தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாத போது அது உடலில் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதைத் தடுக்க, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் தைராய்டு அளவை தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.

மார்பக பரிசோதனை

மார்பக பரிசோதனை

30 வயதைக் கடந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை பரிசோதிக்க தயங்கக் கூடாது. மேமோகிராஃபி சோதனைகள் மூலம் உங்கள் மார்பகங்களை ஆழமாக மதிப்பீடு செய்து உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும். இந்த சோதனை வரவிருக்கும் சிக்கல்களைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கும். மேமோகிராபி என்பது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அவசியமாக செய்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான சோதனைகளில் ஒன்றாகும். இந்த சோதனையானது, உங்கள் மார்பகங்களை எக்ஸ்ரே படம் மூலம் பரிசோதனை செய்வதன் மூலம் அறிகுறிகளை அல்லது கட்டிகள் போன்ற அசாதாரண மாற்றங்களை ஆராயும். ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறாரா இல்லையா என்பதை இந்த சோதனைக் கண்டறிய உதவும். இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையயின் படி, 30-40 வயதுடைய பெண்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையும், 41-55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, வருடத்திற்கு ஒருமுறையும். மேலும் 55 வயதைத் தாண்டிய பெண்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேமோகிராம் செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

பாப் ஸ்மியர் சோதனை

பாப் ஸ்மியர் சோதனை

இந்தியாவில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதைக்குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை மதிப்பிடுவதற்கு உதவும் முக்கியமான கருவிகளில் ஒன்று பாப் ஸ்மியர் சோதனை ஆகும், இது புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கருப்பை வாயில் உள்ள அசாதாரண செல்களைக் கண்டறிய உதவுகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion