Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பருவகால காய்கறி மற்றும் பழங்களை நீங்க சாப்பிடுவதால... உங்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?
Seasonal Foods In Tamil: பல்வேறு காரணங்களுக்காக பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது. அவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. நீங்கள் ஏன் பருவகால உணவுகளை உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பருவகால உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். இது இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் வளர்ந்த சீசின் இல்லா பழங்கள் மற்றும் காய்கறிகளை விட நல்லது. பருவகால உணவு பொருட்கள் இயற்கையான வளரும் பருவத்தில் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்படுபவை.

அதனால், மற்ற உணவுகளை விட அவை பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிறந்த சுவை கொண்டவை. பருவகால உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஏன் அவற்றை நாம் சாப்பிட வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ஆரோக்கியத்திற்கு நல்லது
பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் முதிர்ச்சியின் இறுதியில் அறுவடை செய்யப்படுகின்றன. அதாவது மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை விட பருவகாலத்தில் விளையும் காய்கறிகளும் பழங்களும் அதிக ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்க முடியும்.
சீசன் இல்லாமல் வளர்க்கப்படும் காய்கறிகளும் பழங்களும் பெரும்பாலும் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்பதால், செயற்கை சூழலில் அவை வளர்க்கப்படுகின்றன. இரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்படுவதால், ஊட்டச்சத்து இழக்கப்பட்ட உணவுகளாக அவை இருக்கும்.
பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம், உங்கள் உணவில் இருந்து அதிகபட்ச அளவு ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெறலாம். கோடையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பெர்ரி மற்றும் தர்பூசணியை நீங்கள் சாப்பிடலாம்.
குளிர்காலத்தில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ள பூசணிக்காயின் நன்மையை நீங்கள் பெறலாம். பல்வேறு பருவகால உணவுகளை உண்பதன் மூலம், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கத் தேவையான பலவிதமான ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெறுவதை உறுதிசெய்யலாம்.
சிறந்த சுவை
பருவகால உணவுகள் பெரும்பாலும் மற்ற உணவுகளை விட சுவையாக இருக்கும். சீசன் இல்லாமல் வளர்க்கப்படும் உணவுகள் பெரும்பாலும் செயற்கை சூழல்களில் வளர்க்கப்படுகின்றன. அவை வளர உதவுவதற்காக இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது அவற்றின் சுவையையும் தரத்தையும் குறைக்கிறது.
பருவகால உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உங்கள் உணவின் முழு சுவையையும் சத்தையும் நீங்கள் பெற முடியும். உதாரணமாக, கோடையில், நீங்கள் தர்பூசணி, வெள்ளரி மற்றும் இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
சுற்று சூழலுக்கு இணக்கமானது
பருவகால உணவு சுற்றுச்சூழலுக்கும் நல்லது. சீசன் இல்லா காய்கறிகள் மற்றும் பழங்கள் வளர்க்கப்பட்டு நீண்ட நாட்கள் வைத்திருக்கும்போது, அது கணிசமான அளவு கார்பன் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, இந்த உணவு பொருட்கள் பெரும்பாலும் செயற்கை சூழலில் வளர்க்கப்படுவதால், இயற்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பருவகால உணவுகளை உண்பதன் மூலம், உங்கள் கார்பன் தடத்தை குறைக்கலாம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவலாம்.
விலை மலிவு
பருவகால உணவு பொருட்களுக்கு போக்குவரத்து அல்லது சேமிப்பு தேவைப்படாததால், சீசன் இல்லாத உணவு பொருட்களைவிட விலை சற்று குறைவாகவே இருக்கும். இதனால், குறைந்த விலையில், ஆரோக்கியமான பருவகால உணவு பொருட்களை நீங்கள் வாங்கலாம்.
பருவகால உணவுகளை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை, சிறந்த சுவை கொண்டவை மற்றும் சீசன் இல்லாமல் வளர்க்கப்படும் உணவுகளை விட சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது.
உங்கள் உணவில் அதிக பருவகால உணவுகளை சேர்ப்பதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தையும் சுற்றுசூழலையும் மேம்படுத்தலாம். எனவே அடுத்த முறை நீங்கள் கடைக்கு செல்லும்போது, பருவகால காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களை வாங்க மறக்காதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

