Latest Updates
-
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க.. -
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்களுக்கு 'கக்கா' கருப்பா வருதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. இல்ல உயிருக்கே ஆபத்தாயிடும்..
Gastrointestinal Bleeding: தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தின் காரணமாக பல்வேறு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் ஒன்று தான் இரைப்பை குடல் இரத்தப்போக்கு. இந்த இரைப்பை குடல் இரத்தப்போக்கு என்பது செரிமான மண்டலத்தின் ஒரு கோளாறின் அறிகுறியாகும்.
இந்நிலையில் மலம் அல்லது வாந்தியில் இரத்தம் கலந்திருக்கும். இந்த இரத்தப்போக்கு வாயில் இருந்து ஆசனவாய் வரை செல்லும் இரைப்பைக் குழாயின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்பட்டிருக்கலாம். ஒருவது மேல் இரைப்பை குடலில் இரத்தப்போக்கு இருந்தால், அது சிறுகுடலின் முதல் பகுதியான உணவுக்குழாய், வயிறு அல்லது டியோடினத்தில் உள்ள பிரச்சனையின் காரணமாக இருக்கலாம்.

அதுவே சிறுகுடலில் இரத்தப்போக்கு இருந்தால், அது சிறுகுடலின் நடுப்பகுதயான ஜெஜூனத்தில் அல்லது கடைசிப் பகுதியான இலியத்தில் உள்ள பிரச்சனையின் காரணமாக இருக்கலாம். அதுவே கீழ் இரைப்பை குடலில் இரத்தப்போக்கு இருந்தால், அது பெருங்குடல், மலக்குடல் அல்லது ஆசனவாயில் உள்ள பிரச்சனைகளால் ஏற்பட்டிருக்கலாம்.
பொதுவாக இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு நிலை லேசானது முதல் கடுமையானவது வரை இருக்கலாம். இதை கவனித்து உடனே சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது ஒருவரது உயிரையே பறிக்கவும் செய்யலாம்.
எனவே இரைப்பைக் குடல் இரத்தப்போக்கின் அறிகுறிகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் மற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டும். சரி, இரைப்பைக்குடல் இரத்தப்போக்கின் அறிகுறிகள் என்னவென்று நீங்கள் கேட்கலாம். கீழே அந்த அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
* இரத்தம் கலந்த வாந்தி
* கருப்பு நிற மலம்
* ஆசன வாயில் இரத்தக்கசிவு
* லேசான தலைவலி
* சுவாசிப்பதில் சிரமம்
* மயக்கம்
* நெஞ்சு வலி
* அடிவயிற்று வலி
* பலவீனம் அல்லது சோர்வு
* தலைச்சுற்றல்
* வெளிரிய சருமம்
* குமட்டல் அல்லது வாந்தி
* சிறுநீர் கழிக்காமை அல்லது குறைவாக சிறுநீரைக் கழிப்பது
* சுயநினைவு இல்லாமல் இருப்பது
* வேகமான இதயத்துடிப்பு
* வேகமாக சுவாசிப்பது
* இரத்த அழுத்தம் குறைவது
எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு இரைப்பை குடல் இரத்தப்போக்கு ஏற்படும்?
இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு செரிமான பாதையின் மேல் அல்லது கீழ் பகுதி என எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழலாம். இப்போது எந்த காரணங்களுக்கு எல்லாம் இரைப்பைக் குடல் இரத்தப்போக்கு ஏற்படும் என்பதைக் காண்போம்.
1. பெப்டிக் அல்சர்
இரைப்பை குடலில் இரத்தப்போக்கு ஏற்பட பெப்டிக் அல்சரும் ஒரு காரணம். இந்த வகையான புண்களானது வயிற்றின் உட்புற சுவற்றில் அல்லது சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படலாம். இது ஏற்பட காரணம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களில் இருந்து வெளிவரும் அமிலம் அல்லது அழற்சி எதிர்ப்பு மருந்துகள் போன்றவை தான். இவை, வயிற்றின் சுவற்றினை பாதித்து, புண்களை உண்டாக்கலாம்.
2. உணவுக்குழாயில் கிழிசல்
இதை மல்லோரி-வெயிஸ் டியர் என்று அழைப்பர். இது கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்தும். பொதுவாக இந்த பிரச்சனையானது அதிகமாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படும். இந்நிலையில் இரத்தம் கலந்த வாந்தியை எடுக்க நேரிடும்.
3. உணவுக்குழாயில் விரிவாக்கப்பட்ட நரம்புகள்
இதை ஓசோஃபோஜியல் வேரிசிஸ் என்று அழைப்பர். இதுவும் அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் கடுமையான கல்லீரல் நோயால் ஏற்படக்கூடிய ஒரு மோசமான நிலையாகும்.
4. ஓசோபாகிடிஸ்
இது ஒரு உணவுக்குழாய் அழற்சி ஆகும். இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் (GERD) ஏற்படக்கூடியது.
5. ஹையாடல் குடலிறக்கம்
பெரிய ஹையாடல் குடலிறக்கம் வயிற்றில் கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும். இறுதியில் இது இரத்தப்போக்கை உண்டாக்கும்.
6. அசாதாரண இரத்தக்குழாய்கள் மற்றும் வளர்ச்சிகள்
எப்போது ஒருவர் அசாதாரண இரத்தநாளங்களைக் கொண்டிருக்கிறாரோ, அதாவது சிறிய தமனிகள் மற்றும் நரம்புகளைக் கொண்டிருந்தால், அது இரத்தப்போக்கை உண்டாக்கும். அதே சமயம் மேல் இரைப்பை குடல் பாதையில் ஏதேனும் அசாதாரண கட்டிகளின் வளர்ச்சிகள் இருந்தால், அதுவும் இரத்தப்போக்கை உண்டாக்கலாம்.
7. அழற்சி குடல் நோய்
இது கீழ் இரைப்பை குடலில் இரத்தப்போக்கு ஏற்பட முக்கிய காரணமாகும். இந்த நிலையில் பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உள்ள திசுக்களில் அழற்சி மற்றும் புண்களை உண்டாக்கும்.
8. கட்டிகள்
உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல் அல்லது மலக்குடலில் எந்த வகையான கட்டிகள் இருந்தாலும், அது செரிமான மண்டலத்தின் புறணியை பலவீனப்படுத்தி இரத்தப்போக்கை உண்டாக்கும்.
9. மூலநோய், குதபிளவுகள்
மூலநோய் என்பது ஆசன வாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து, மலம் கழிக்கும் போது இரத்தப்போக்கை உண்டாக்கும். அதோடு இந்த நரம்புகளானது கடுமையான வலியையும் உண்டாக்கும். அதே சமயம் ஆசன வாயில் உள்ள மெல்லிய திசுக்களில் பிளவுகள் இருந்தாலும், அது மலம் கழிக்கும் போது இரத்தப்போக்கை உண்டாக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications