Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இந்த கோளாறு இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்..
Functional Neurological Disorders: தற்போது மக்கள் பெரும்பாலானோர் நரம்பு மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்கு தற்போதைய பரபரப்பான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை ஒரு முக்கிய காரணமாக உள்ளன.
மேலும் சமீப காலங்களில் பெருமளவில் கவனத்தை ஈர்த்த பல தலைப்புகளில் ஒன்றாக விவாதிக்கப்பட்டு வருவது 'செயல்பாட்டு நரம்பியல் கோளாறுகள்'. இதை ஆங்கிலத்தில் 'Functional Neurological Disorders' [FND] என்று அழைக்கிறார்கள். இந்த செயல்பாட்டு நரம்பியல் கோளாறுகள் குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "FND என்பது மூளை அல்லது நரம்புகளுக்கு எந்தவிதமான சேதமும் இல்லாத நிலையில், நரம்பு மண்டல செயலிழப்பின் அறிகுறிகள் காணப்படும் ஒரு நிலையாகும். இந்த கோளாறைப் பொறுத்தவரையில் உண்மையான பிரச்சினை என்னவென்றால், மூளை நம்முடைய உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளிலிருந்து தகவல்களை எவ்வாறு பெறுகிறது, எவ்வாறு தகவல்களை அனுப்புகிறது என்பதில் தான் இருக்கிறது. மூளை தகவல்களை சரிவர பெறாத போதோ, தகவலை அனுப்பாத போதோ, நம்முடைய நரம்பு மண்டலம் சரியாக செயல்படுவதில்லை. இதனால் FND பாதிப்பு ஏற்படுகிறது." என்று கூறினார்.
FND அறிகுறிகள் என்ன?
"கால்-கைகளில் பலவீனம், பக்கவாதம், வலிப்பு, நடுக்கம், திடீரென உடல் பகுதி தூக்கிப் போடுதல் போன்றவை FND-ன் அறிகுறிகளாகும். மேலும், நரம்பு மண்டல சேதத்தைப் போன்று இருக்கும் இதர அறிகுறிகளும் FND-களின் முக்கிய அறிகுறிகளாகும்.
அதோடு, பேசுவதில் தடுமாற்றம், சோர்வு, கால்-கை பலவீனம், நினைவாற்றல் குறைபாடு மற்றும் கவனக் குறைபாடுகள் போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம்.. இவை மிகவும் பரவலாகக் காணப்படும் நிலைகளாகும். உண்மையில், தலைவலிக்கு அடுத்தபடியாக காணப்படும் இரண்டாவது பொதுவான நரம்பியல் கோளாறுகள் FND ஆகும்.
FND பாதிப்புடன் இருப்பதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டவர்கள் ஒருவித பதட்டம், மன அழுத்தம், தீடீரென பயத்தினால் பீதியடைவது, மனச்சோர்வு மற்றும் போஸ்ட் ட்ரொமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டர் (PTSD - Post Traumatic Stress Disorder) போன்றவற்றின் அறிகுறிகளுடனும் இருக்கலாம்" என்றும் டாக்டர் கூறினார்.
FND-க்கான காரணங்கள் மற்றும் யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது?
"எந்தவொரு நோயையும் போலவே, FND களுக்கான காரணங்களைக் கண்டறிவது, அது குறித்த ஒரு ஆழ்ந்த புரிதலுக்கு மிக மிக அவசியமாகும். FND-கள் முக்கியமாக நம்முடைய மனதில் உண்டாகும் தாக்கத்தின் காரணமாக, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் ஏற்படுகின்றன. அதனால் தான் இவை நியூரோசைக்கியாட்ரிக் கோளாறுகள் [neuropsychiatric disorders] என்றும் அழைக்கப்படுகின்றன.
ஏற்கனவே மனநலப் பிரச்சனைகள் அல்லது நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள், அதிக மனஅழுத்தம் கொண்ட வாழ்க்கை முறையில் வாழ்பவர்கள் அல்லது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட துஷ்பிரயோக அனுபவம் உள்ளவர்கள் அல்லது அதிர்ச்சியின் பாதிப்புகள் உள்ளவர்கள் FND-க்கு ஆளாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.
இது போன்ற நிலையானது, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் அரிதாகவும், 50 வயதுக்குக் குறைவான பெண்களில் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் 50 வயதுக்கு மேல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சம அளவில் பாதிக்கப்படுகின்றனர்." என்று டாக்டர் கூறினார்.
FND இருப்பதை எப்படி கண்டறிவது?
"ஒருவருக்கு செயல்பாட்டு நரம்பியல் கோளாறுகள் பாதிப்பு இருக்கிறதா என்பதை தேர்ச்சிப் பெற்ற நரம்பியல் நிபுணரால், அறிகுறிகளின் விளக்கம் [symptom description], நரம்பியல் பரிசோதனை [neurological examination], மற்றும் CT அல்லது MRI போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறிப்பட்டு வருகிறது.
அதேநேரம், பரிசோதனைகளின் தேவையை நம்பி இருக்காமல், அறிகுறிகள் குறித்த விரிவான, தெளிவான விளக்கங்கள், நரம்பு தொடர்பான பரிசோதனைகளின் மூலம் செயல்பாட்டு நரம்பியல் கோளாறுகளையும், பிற நரம்பியல் கோளாறுகளையும் நரம்பியல் நிபுணரால் வேறுபடுத்தி அறிய முடியும்.
செயல்பாட்டு நரம்பியல் அறிகுறிகள் உண்மையானவை. இவை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் துன்பத்தையும் கடும் சிரமத்தையும் ஏற்படுத்துகின்றன. அதேபோல் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும் கூடும்." என்றும் டாக்டர் கூறினார்.
FND-க்கான சிகிச்சைகள் என்ன?
"FND-கள் சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தக்கூடியவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கோளாறுகளின் அறிகுறிகள், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பக்கூடியவை. FND-யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற நரம்பியல் கோளாறுகளைப் போல் நரம்பு மண்டலத்தில் குறிப்பிடும்படியான சேதம் எதுவும் இல்லாத காரணங்களினால், அவர்கள் முழுமையாக குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
உளவியல் சிகிச்சை [psychotherapy], குறிப்பாக அறிவாற்றல் சார்ந்த பழக்கவழக்கங்களுக்கான சிகிச்சை [Cognitive Behavioural Therapy] மற்றும் சில சந்தர்ப்பங்களில், மருந்துகள் உட்கொள்வது என இவையனைத்தையும் ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கும் போது நேர்மறையான பலன்களை அளிக்கும்.
அறிகுறிகள் தொடர்ந்து இருக்கும் சந்தர்ப்பங்களில், நோயாளிகளிடம் காணப்படும் அறிகுறிகள் உருவாவதற்கு காரணமாக இருக்கும் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை நிதானமாக ஆய்வு செய்து, அவற்றை மாற்றியமைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உளவியல் சிகிச்சை [Psychotherap] அல்லது அறிவாற்றல் சார்ந்த பழக்கவழக்கங்களுக்கான சிகிச்சை [Cognitive Behavioural Therapy], FND பாதிப்புள்ள நோயாளிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.. மேலும், நோயாளிகளிடம் காணப்படும் அறிகுறிகளைப் பொறுத்து பேச்சு சிகிச்சை [speech therapy] மற்றும் பிசியோதெரபியும், இதற்கான சிகிச்சைகளின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படலாம்." என்றும் டாக்டர் கூறினார்.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
"FND பற்றி அதனால் பாதிப்படைந்திருக்கும் நோயாளிகள் அறிந்துகொள்வது, அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் படி என்பதை உணர்ந்து கொள்வது நல்ல பலன்களை அளிக்கும். நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவை வெவ்வேறு வழிகளில் எப்படி தங்களை பாதிக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நோயாளிகள் தங்களது செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு செயல்படுவது மிக மிக அவசியம். எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய செயல்களை, உணர்வுகளை உச்சமடையவோ அல்லது நீச்சமடையவோ அல்லது அவை மாறி மாறி சுழற்சி ['boom or bust' cycles] அடைவது போல் இல்லாமலோ பார்த்து கொள்ள வேண்டும்.
இதற்கு அவர்கள் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் மளமளவென முடிக்காமல், ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி, குறிப்பிட்ட இடைவெளிகளில் நிதானமாக செய்வது அவர்களது உடலுக்கும், மனதிற்கும் நல்லது. இவையிரண்டும் இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கும்.
முக்கியமாக தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கும் பழக்கத்தை பின்பற்றுவது மிக முக்கியம். அதிகம் மெனக்கெடாமல் செய்யக்கூடிய யோகா, மன அழுத்தம் வரவிடாமல் பார்த்து கொள்வது என இந்த இரண்டு அம்சங்களும் FNDs-ஐ நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருக்கின்றன. இவை இரண்டும் நோயாளிகள் FND பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்." என்று டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications














