Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
கடுமையான உடற்பயிற்சிகளை செய்த பின் சாப்பிட வேண்டிய உணவுகள்!
பலரும் உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் பார்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகளை சாப்பிடுவது மட்டுமே சிறந்தது என்று நம்புகின்றனர். ஆனால் இதை விட சிறந்த உணவுகளும் உள்ளன.
தசைகளை உருவாக்குவதற்கு கலோரிகளை குறைத்தால் மட்டும் போதாது. அத்துடன் ஆரோக்கியமான உணவுகளையும், எடை பயிற்சிகளையும் செய்ய வேண்டியது அவசியம். அதுவும் ஒருவர் விரும்பிய இலக்கை அடைவதற்கு வழக்கமான உடற்பயிற்சிகளுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு அதிக முயற்சி தேவைப்பட்டாலும், அதைத் தொடர்ந்து செய்வதற்கு நம்மை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

உணவுகள் என்று வரும் போது, உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடும் உணவுகள் தசையை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்த பின்னர் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், அது கடுமையான உடற்பயிற்சியால் தசையில் ஏற்பட்ட காயங்களை விரைவில் ஆற்றி, தசை வலியைக் குறைத்து மறுநாள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ப உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.
பலரும் உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் பார்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகளை சாப்பிடுவது மட்டுமே சிறந்தது என்று நம்புகின்றனர். ஆனால் இதை விட சிறந்த உணவுகளும் உள்ளன. அந்த உணவுகளை உட்கொண்டால், தசை காயங்கள் விரைவில் குணமாவதோடு, உடலுக்கு போதுமான ஊட்டச்ச்ததுக்கள் கிடைத்து உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

முட்டைகள்
முட்டைகளில் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே உடற்பயிற்சி செய்த பின் மூன்று முட்டைகளை சாப்பிடுவதன் மூலம், தசைகளில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் சரியாகும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, பி 12, பி 6 மற்றும் கே போன்ற வைட்டமின்களும் உள்ளன.

பன்னீர்
பன்னீரில் இரண்டு வகையான புரோட்டீன்கள் உள்ளன. அவை வே மற்றும் கேசீன். இதில் வே புரோட்டீன் உடற்பயிற்சிக்கு பின் தசைகளை விரைவில் குணப்படுத்தம் திறனுக்கான நன்கு அறியப்பட்டதாகும். கேசீர், என்பது மெதுவாக செயல்படும் புரோட்டீன். இது தூங்கும் போது உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை குணப்படுத்தும். எனவே நீங்கள் உடற்பயிற்சிக்கு பின் சுவையான உணவை உட்கொள்ள நினைத்தால், பன்னீரை சாப்பிடுங்கள்.

சால்மன்
சால்மன் மீன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது. அதுமட்டுமின்றி, இதில் புரோட்டீன், வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்றவையும் அதிகம் உள்ளன. ஒமேகா-3 உடலில் உள்ள காயங்களை குறைக்கும். கூடுதலாக இதில் உள்ள பொட்டாசியம், உடற்பயிற்சியின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மாற்ற உதவும். சால்மன் மீனில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், உடற்பயிற்சிக்கு பிறகு தசைகளை சரிசெய்ய மற்றும் மீண்டும் உருவாக்க உதவுகிறது.

நட்ஸ்
நட்ஸ்களில் அத்தியாவசிய ஊட்டச்சதுக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு கையளவு பாதாம், வால்நட்ஸ் அல்லது முந்திரியை உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடுவது உடலுக்கு தேவையான புரோட்டீன்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களை வழங்கும். வேண்டுமெனில் பூசணிக்காய் விதை, சூரியகாந்தி விதை, சியா விதை போன்றவற்றையும் உடற்பயிற்சிக்கு பின் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம்.

திணை
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரோட்டீன்கள் என உடற்பயிற்சிக்கு பின் தேவையான இரண்டு சத்துக்களையும் கொண்ட ஒரு முழு தானியம் தான் திணை. தாவர அடிப்படையிலான புரோட்டீனைக் கொண்ட திணை, அதிகளவு ஊட்டச்சத்துக்களைக் கொண்டதுடன், க்ளுட்டன் இல்லை. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைப் பராமரிக்க விரும்புவோருக்கு ஏற்ற உணவுப் பொருள். உங்கள் உணவில் புரோட்டீன் அதிகம் சேர்க்க நினைத்தால், மீன், சிக்கன், பழங்கள் அல்லது காய்கறிகளுடன், திணையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதோடு, இதில் நல்ல அளவில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது மற்றும் இதை உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட்டால் உடற்பயிற்சியின் போது இழந்த ஆற்றலைப் பெற உதவும்.

நினைவில் கொள்ள வேண்டியவை
உடற்பயிற்சிக்குப் பின் எக்காரணம் கொண்டும் உப்பு நிறைந்த உணவுகள், எனர்ஜி அல்லது புரோட்டீன் பார்கள் போன்ற செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது. இல்லாவிட்டால், இது உங்களின் ஃபிட்னஸ் பயணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சோடா அல்லது எனர்ஜி பானங்களுக்கு பதிலாக, இளநீர் அல்லது வெறும் நீரைக் குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications