For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீட்ரூட் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

பீட்ரூட் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு காயாகும். ஆனால் அதனால் சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

|

நாம் அடிக்கடி உபயோகிக்கும் காய்கறிகளில் மிகவும் முக்கியமான இடத்தை வகிப்பது பீட்ரூட் ஆகும். பீட்ரூட் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு காயாகும். உங்களின் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் கண்டிப்பாக பீட்ரூட்டின் பெயர் இருக்கும். ஆனால் இதற்கு மற்றொரு புறம் உள்ளது.

Side effects of beetroot

எந்தவொரு காய்கறியும், பழமும் தீங்கானது அல்ல. நாம் அதனை எப்படி எடுத்துக்கொள்கிறோம், எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே அவற்றின் பலன்கள் நம்மை பாதிக்கிறது. அவ்வாறு பார்க்கும் போது பீட்ரூட் நமக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் பீட்ரூட்டை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்டூரியாவை ஏற்படுத்தக்கூடும்

பீட்டூரியாவை ஏற்படுத்தக்கூடும்

நீங்கள் நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உங்கள் சிறுநீரின் நிறத்தை பாதிக்கும். அதிகளவு பீட்ரூட் சாப்பிடுவது உங்கள் சிறுநீரின் நிறத்தை மாற்றக்கூடும். இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் ஏற்படும். பீட்டூரியா என்பது ஆபத்தான நோயாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இரும்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த அவசியத்தை இது உணர்த்துகிறது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

பீட்ரூட்டில் ஆக்ஸலைட்டுகள் அதிகம் உள்ளது, இதனால் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக கற்கள் இருந்தால் மருத்துவர்கள் உங்களை பீட்ரூட் சாப்பிடுவதை நிறுத்த அறிவுறுத்துவார்கள். உங்களுக்கு சிறுநீரக கற்கள் இல்லை என்றால் பிரச்சினையில்லை ஆனால் பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் அந்த பிரச்சினை ஏற்படலாம். பீட்ரூட்டில் அதிகம் உள்ள ஆக்சலேட் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்கள் ஏற்பட காரணமாகிறது.

தடிப்புகள்

தடிப்புகள்

சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பீட்ரூட் சாப்பிடுவதால் சிலருக்கு தடிப்புகள், அரிப்பு, காய்ச்சல் போன்ற எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் குரல் வளையங்களில் சுருக்கம் கூட ஏற்படலாம். சிறுநீரில் இரத்தம் இருக்கும் நிலை ஹெமாட்டூரியா ஆகும். பீட்ரூட் இந்த நிலையை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதன் அறிகுறிகள் பீட்டூரியாவைப் போலவே இருக்கின்றன.

MOST READ: சாஸ்திரத்தின் படி இந்த சூழ்நிலைகளில் சபலப்படும் ஆண்கள் நேரடியாக நரகத்திற்குத்தான் செல்வார்கள்...!

திடீர் இரத்த அழுத்த குறைவு

திடீர் இரத்த அழுத்த குறைவு

இது ஒருவகையில் உங்களுக்கு நல்லதாக கூட அமையலாம். ஆனால் அனைத்துத் தருணங்களிலும் அல்ல. உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கனவே சீரற்று இருந்தால் இது உங்கள் நிலையை மோசமாக்கலாம். ஏனெனில் பீட்ரூட் உங்கள் இரத்த அழுத்தத்தில் திடீர் சரிவை ஏற்படுத்தும். மேலும் இது உங்கள் இரத்த நாளங்களை நீர்த்துப் போக செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு காரணம் இதிலிருக்கும் நைட்ரேட்டுகள் ஆகும்.

வயிறு உபாதைகள்

வயிறு உபாதைகள்

நீங்கள் ஏற்கனவே இரைப்பை கோளாறுகளால் பாதிப்பட்டிருந்தால் பீட்ரூட் சாப்பிடுவது உங்களை நிலையை மோசமாக்கும். மேலும் இதனால் வீக்கம், வாயுக்கோளாறுகள், தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் இது குடல் இயக்கங்களை பாதித்து மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்துக்கள் வாயுப்பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்

இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்

இது பீட்ரூட்டின் முக்கியமான பக்க விளைவாகும். சர்க்கரை நோய் இருக்கும் அனைவரும் பீட்ரூட்டிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். பீட்ரூட்டில் கிளைசெமிக் குறியீடு மிதமான அளவில் உள்ளது, இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை பிரச்சினை இருப்பவர்கள் பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது. உடலில் சீரான குளுக்கோஸ் அளவை பராமரிக்க பீட்ரூட்டை சாப்பிடலாம், ஆனால் சர்க்கரை பிரச்சினையால் அதனை சாப்பிடுவதற்கு முன் மருத்துவர்களை அணுகுவது நல்லது.

கர்ப்பகால பிரச்சினைகள்

கர்ப்பகால பிரச்சினைகள்

பீட்ரூட்டில் இருக்கும் பீட்டைன் கர்ப்பகாலத்தில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் கர்ப்பிணி பெண்கள் நைட்ரைட்டால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இது பீட்ரூட்டில் அதிகமாக உள்ளது. அம்மாக்கள் மட்டுமின்றி கருவில் இருக்கும் குழந்தைகளும் நைட்ரைட்டால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக 30 வாரம் முழுமையடைந்த கருவிற்கு இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

MOST READ: தண்ணியடிச்சாலும் ஆரோக்கியமா வாழணுமா? இந்த மாதிரி குடிக்க கத்துக்கோங்க...!

கல்லீரலைப் பாதிக்கலாம்

கல்லீரலைப் பாதிக்கலாம்

பீட்ரூட்டில் அதிகளவு மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இவை நல்லதுதான் ஆனால் இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால் இவை அனைத்தும் உலோக சேர்மங்கள். இதனை அதிகம் சாப்பிடுவது உங்களின் கல்லீரல் மற்றும் கணையத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Serious Side Effects Of Beetroot

Check out some of the uncommon beetroot side effects in detail.
Story first published: Monday, August 5, 2019, 15:10 [IST]
Desktop Bottom Promotion