For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?முட்டையை நீண்ட நாள் கெட்டுபோகாமல் எப்படி பாதுகாப்பது?

உணவுப்பொருட்களை வாங்கும்போது காலாவதி தேதி பார்த்து வாங்கும் பழக்கம் இன்னும் நம்மில் பலருக்கும் வரவில்லை.

|

உணவுப்பொருட்களை வாங்கும்போது காலாவதி தேதி பார்த்து வாங்கும் பழக்கம் இன்னும் நம்மில் பலருக்கும் வரவில்லை. நாம் வாங்கிய உணவுப்பொருட்களின் காலாவதி தேதி நெருங்கும்போது நமக்குள் எழும் முதல் கேள்வி அந்த பொருளை முயற்சித்து பார்க்க வேண்டுமா அல்லது தூக்கியெறிய வேண்டுமா என்பதுதான்.

Is It Safe To Eat Expired Eggs?

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை பொறுத்தவரை நீங்கள் ஒருபோதும் அதனை பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது. சில சூழ்நிலைகளில், இயற்கை உணவுப் பொருட்கள் இன்னும் பயன்படுத்த ஏற்றவை. இருப்பினும், காலாவதி தேதிக்கு அப்பால் உணவுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டையை பயன்படுத்தலாமா?

முட்டையை பயன்படுத்தலாமா?

அனைவரின் இல்லத்திலும் இருக்கும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று முட்டையாகும். உங்கள் முட்டை அட்டைப்பெட்டி காலாவதி தேதி கடந்துவிட்டதைக் காட்டினால் அதிக கவலைப்பட தேவையில்லை. அந்த தேதி உண்மையில் என்ன அர்த்தம் என்பதை அறிய மேற்கொண்டு படிக்கவும், முட்டை பாதுகாப்பானதா இல்லையா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?

முட்டை அட்டைப்பெட்டியில் காலாவதி தேதி

முட்டை அட்டைப்பெட்டியில் காலாவதி தேதி

முதலில், குறிப்பிடப்பட்ட தேதி என்பது விற்பனையான தேதி என்று பொருள், அதாவது மளிகை கடையில் இருந்து அட்டைப்பெட்டியை விற்க வேண்டிய நாள். இந்த தேதிக்கு பின்னால் உள்ள யோசனை பாதுகாப்பை விட தரம் மற்றும் புத்துணர்வைக் கட்டுப்படுத்துவதாகும். அட்டைப்பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற தேதி முட்டைகளை அட்டைப்பெட்டியில் போட்ட தேதி பற்றி பேசுகிறது. மீண்டும், இந்த தேதி புத்துணர்ச்சியை சரிபார்க்கவும், பாதுகாப்போடு அதிகம் சம்பந்தப்படவில்லை.

முட்டை புதியதா இல்லையா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?

முட்டை புதியதா இல்லையா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?

இது ஃப்ளோட் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு கிளாஸை நிரப்பி அதில் ஒரு முட்டையை விடுங்கள். முட்டை மிதந்தால், அது கெட்டுப்போன முட்டையாகும், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முட்டை மூழ்கினால் அது நல்ல முட்டை என்று அர்த்தம்.

MOST READ: இந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா?

கெட்டுப்போன முட்டைகளை பயன்படுத்தலாமா?

கெட்டுப்போன முட்டைகளை பயன்படுத்தலாமா?

புளொட் சோதனை முட்டை பயன்பாட்டிற்கு ஏற்றதா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்றாலும், விற்பனை தேதிக்கு அப்பால் மூன்று முதல் ஐந்து வாரங்களுக்கு இடையில் முட்டைகள் புதியதாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, நீங்கள் குறிப்பிட்ட கால எல்லைக்கு இடையில் அவற்றைப் பயன்படுத்தலாம் மற்றும் எந்த அசெளகரியத்தையும் தவிர்க்கலாம்.

முட்டையை சேமிப்பது எப்படி?

முட்டையை சேமிப்பது எப்படி?

ஒழுங்காக குளிரூட்டப்பட்டால் முட்டை சுமார் 5-6 வாரங்கள் நீடிக்கும். கதவுகளுக்கு பதிலாக குளிர்சாதன பெட்டியின் உள்ளே முட்டைகளை அவற்றின் அசல் அட்டைப்பெட்டியில் குளிரூட்டுவது சிறந்தது, ஏனெனில் அங்கு வெப்பநிலை நிலையானது. முட்டைகளை கொண்டு சென்று முடிந்தவரை நிலையான வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். குளிர்காலத்தில் 19 ° C முதல் 21 ° C வரையிலும், கோடையில் 21 ° C முதல் 23 ° C வரையிலும் வெப்பநிலை இருக்க வேண்டும்.

முட்டைகளின் தரத்தில் குளிர்சாதனப்பெட்டி என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

முட்டைகளின் தரத்தில் குளிர்சாதனப்பெட்டி என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

சால்மோனெல்லா அபாயத்தைக் குறைக்க முட்டைகள் குளிரூட்டப்படுகின்றன. ஒரு வாரத்திற்குள் நுகரப்படுவதாக இருந்தால் முட்டைகளை குளிரூட்ட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், மளிகைக் கடை முட்டைகளை குளிரூட்டப்படாமல் விடக்கூடாது, ஏனென்றால் அவற்றின் புறத்தோல் அடிப்படையில் கழுவப்பட்டுவிட்டன. இது சால்மோனெல்லா அபாயத்தை அதிகரிக்கிறது.

MOST READ: உங்க ராசிப்படி உங்களுக்கு இழைக்கப்படுற துரோகத்தை நீங்க எப்படி சமாளிப்பீங்க தெரியுமா?

காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

காலாவதியான முட்டையை சாப்பிட்டால் நீங்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக நீங்கள் காலாவதியான முட்டையை தற்செயலாக உட்கொண்டால் சால்மோனெல்லா உணவு விஷத்திற்கு அதிக ஆபத்து உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Safe To Eat Expired Eggs?

Read to know does eating expired eggs is safe or not.
Desktop Bottom Promotion