Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சொன்னா நம்பமாட்டீங்க.. இந்த உணவுகளை தப்பா சாப்பிட்டா உயிருக்கே ஆபத்தாயிடும்... ஜாக்கிரதை..!
நாம் ஆரோக்கியமானது என்று நினைக்கும் காளான், தேன் போன்ற உணவுப் பொருட்களை தவறான வழியில் சாப்பிட்டால், அது ஆரோக்கியத்தை படு மோசமாக பாதிக்கும்.
நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை தான். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியமான உணவுப் பொருட்களாக இருந்தாலும், அவற்றை தவறான முறையில் சாப்பிட்டால், அதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு தான் கேடு விளைவிக்கும்.

அந்த வகையில் நாம் ஆரோக்கியமானது என்று நினைக்கும் காளான், தேன் போன்ற உணவுப் பொருட்களை தவறான வழியில் சாப்பிட்டால், அது ஆரோக்கியத்தை படு மோசமாக பாதிக்கும். கீழே உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சில ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உணவுப் பொருட்களை கவனமாக தேர்ந்தெடுத்து உட்கொள்ளாவிட்டால், ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

இறைச்சிகள்
இறைச்சிகள், கோழி அல்லது கடல் உணவுகளை வாங்கி, அவற்றை உயர் வெப்பநிலையில் சமைக்கும் போது, அவற்றில் உள்ள புரோட்டீன்கள் மாற்றமடைந்து, ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாற்றுகிறது. இந்த அபாயத்தைத் தவிர்க்க, இறைச்சிகளை எப்போதும் குறைவான வெப்பநிலையில் சமைக்க வேண்டும். இப்படி குறைவான வெப்பநிலையில் சமைப்பதால், இறைச்சிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் பெருக்கமும் குறையும்.

தேன்
உங்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேனில் ஏராளமான நச்சுக்கள் உள்ளன. தேனானது சேகரிக்கப்பட்ட பிறகு, பேஸ்சுரைசேஷன் செயல்முறை மூலம் அதில் உள்ள நச்சுக்களை அகற்றப்படுகிறது. இருப்பினும், கலப்படமில்லாத தேனை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. கலப்படம் இல்லாத தேனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலும், அது தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தியை உண்டாக்கும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகளானது ஈரப்பதமான அல்லது வெளிச்சமான இடத்தில் அல்லது நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் இருந்தால், அது பச்சை நிறத்தில் மாறி, முளைக்க ஆரம்பித்துவிடும். இப்படி பச்சை நிறத்தில் மற்றும் முளைக்கட்டிய உருளைக்கிழங்கை சாப்பிடுவது, விஷத்தை சாப்பிடுவதற்கு சமம். இம்மாதிரியான உருளைக்கிழங்கு உங்கள் வீட்டில் இருந்தால், அதை தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லாவிட்டால், இந்த உருளைக்கிழங்கால் வாந்தி, அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

முந்திரி
பச்சை முந்திரி ஆரோக்கியத்திற்கு மிகவும் அபாயகரமானது. அதிலும் உங்களுக்கு பாய்சன் ஐவி-க்கு அலர்ஜி இருந்தால், பச்சை முந்திரியை சாப்பிடாதீர்கள். தற்போது கடைகளில் விற்கப்படும் முந்திரிகள் உண்மையில் பச்சையானது அல்ல. இவை விற்பனைக்கு வரும் முன் யூரோசியோல் என்னும் கெமிக்கல் கொண்டு வேக வைத்து, அதில் உள்ள பாய்சன் ஐவி நீக்கப்பட்டு தான் விற்கப்படுகிறது. இருப்பினும் சில கடைகளில் பச்சை முந்திரிகள் விற்கப்படுகின்றன. எனவே கவனமாக இருங்கள். ஒருவேளை உங்களுக்கு பாய்சன் ஐவிக்கு சென்சிடிவ் இல்லாவிட்டால், ஒரு கைக்கு அதிகமான அளவில் முந்திரியை சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

பாதாம்
பாதாமில் இரண்டு வகைகள் உள்ன. ஒன்று இனிப்பானது மற்றொன்று கசப்பானது. கசப்பான பாதாமில் ஹைட்ரஜன் சயனைடு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 5-10 கசப்பான பாதாமை சாப்பிட்டால், அது பெரியவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். இருப்பினும், தற்போது கசப்பான பாதாம்கள் சுத்திரிகரிக்கப்பட்டு விற்கப்படுவதால், கசப்பான பாதாம்கள் பாதுகாப்பானவையாக இருக்கும். ஆனால் நீங்கள் காடுகளுக்கு சென்று அங்கு பாதாம் மரத்தைக் கண்டால், அதன் கொட்டைகளை சாப்பிட்டுவிடாதீர்கள்.

பிரட்
பிரட் வழக்கமாக சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும், சில வகையான பிரட்டுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வெள்ளை பிரட்டில் பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை ஆரோக்கியமற்றதாகும். வெள்ளை பிரட்டை அடிக்கடி சாப்பிடுவது உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்தும்.
முழு தானிய பிரட்டிலும் கூட பல்வேறு பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரைகள் மற்றும் உப்பு உள்ளதால், இது ஆரோக்கியத்திற்கு மோசமானவை. எனவே எளிதில் செரிமானமாவதற்கு, முளைக்கட்டிய தானியங்களால் ஆன பிரட்டை சாப்பிடலாம். ஏனெனில் இதில் அதிக புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பிரேசில் நட்ஸ்
பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளது. செலினியம் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது நஞ்ஒசாகிவிடும். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 50-70 மைக்ரோகிராம் செலினியத்தை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஒரு பிரேசில் நட்ஸில் 60-95 மைக்ரோகிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய அளவை விட அதிகளவு செலினியத்தை உண்பது, செரிமான பிரச்சனைகள், களைப்பு மற்றும் தலைமுடி உதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

பால்
பால் என்பது தண்ணீர், புரோட்டீன், சர்க்கரை, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் நிறைந்து. பாலில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இருப்பினும் பாலிலும் சில அபாயங்கள் உள்ளன. தினமும் பாலை குடித்து வந்தால், பெருந்தமனி தடிப்பு நோயின் அபாயம் குறைவதோடு, இதன நோன் அபாயத்தைக் குறைக்கும். முக்கியமாக பெண்கள் பால் குடிப்பது, கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆண்கள் குடித்தால், புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும். எனவே பாலை சரியான அளவில் தினமும் குடித்து வாருங்கள்.

கடல் சிப்பி
கடல் சிப்பி ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்களான மக்னீசியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவை அதிகமாக உள்ளன. இவ்வளவு சத்துக்களை அடக்கிய கடல் சிப்பி, சரியான பதத்தில் சமைத்து சாப்பிட மிகவும் கடினமாக இருக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதை சரியாக சமைக்காமலோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தானதாகிவிடும். எனவே கடல் சிப்பியை சாப்பிடுவதாக இருந்தால், நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின் சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications











