Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
உங்களுக்கு பரம்பரை நோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...
நாம் சாப்பிடும் உணவுகள் உள்ளுறுப்புக்களை சரிசெய்வதன் மூலமும், டி.என்.ஏ-க்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் மூலமும் நாள்பட்ட மற்றும் பரம்பரை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
நாம் சாப்பிடும் உணவுகள் நமது சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்துவது மட்டுமின்றி, உடலுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் உள்ளுறுப்புகள் திறம்பட செயல்பட உதவுகிறது. மேலும் உணவுகளானது சேதமடைந்த டி.என்.ஏ-க்களை சரிசெய்கிறது, உள்ளுறுப்புக்களின் செயல்திறனை அதிகரிக்கிறத, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் சாப்பிடும் உணவுகள் உள்ளுறுப்புக்களை சரிசெய்வதன் மூலமும், டி.என்.ஏ-க்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் மூலமும் நாள்பட்ட மற்றும் பரம்பரை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

டி.என்.ஏ அல்லது டி-ஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலம் ஒரு மூலக்கூறு ஆகும். இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபணு தகவல்களைக் கொண்டு செல்கிறது. பொதுவாக நமது டி.என்.ஏ-க்கள் தன்னை தானே சரிசெய்து கொள்ளும். ஆனால் நாம் உண்ணும் உணவுகள் உடலினுள் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இப்போது ஒருவரது டி.என்.ஏ-க்களின் ஆரோக்கியத்திற்காகவும், உறுப்புக்களை சரிசெய்வதற்கும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

மஞ்சள்
இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஓர் மசாலா பொருள் தான் மஞ்சள். இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் கலவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமம், இதயம், மூடடுகள் மற்றும் பிற உறுப்புகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய மஞ்சளை உணவில் சேர்த்து வந்தால், அது புற்றுநோய், அல்சைமர், மனச்சோர்வு மற்றும் மூட்டுவலி போன்றவற்றை தடுக்கும். இது தவிர இரவு நேரத்தில் மஞ்சள் பால் குடிப்பது இன்னும் நல்லது.

மாதுளை
மாதுளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான பழமாகும். இதை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கும். இந்த சிவப்பு நிற பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகம் உள்ளன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய நோள், புற்றுநோய், ஆர்த்ரிடிஸ் மற்றும் பிற அழற்கு நிலைகள் உள்ளிட்ட கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். இது தவிர, இதில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முதுமையின்அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்.

க்ரீன் டீ
க்ரீன் டீ வெறும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் உடலுக்கு ஈரதப்பதமுட்டும் பானம் மட்டுமல்ல. இதில் உள்ள பாலிஃபீனால்கள் வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. க்ரீன் டீயைக் குடித்து வருவது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுவதோடு, கொழுப்புக்களைக் கரைக்கவும் உதவுகிறது. இந்த க்ரீன் டீயை அன்றாடம் குடித்து வந்தால், அது ப்ரீ ராடிக்கல்களின் உருவாக்கத்தைக் குறைக்கவும், செல்களை சேதமடையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்ஹபகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தின் நிலையை மேம்படுத்தவும், வாயின் அரோக்கியத்தை மேம்படுத்தவும், நாள்பட்ட நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும் மற்றும் இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவும்.

காளான்
காளான் மற்றொரு சிறப்பான காய்கறியாகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். இந்த காய்கறியில் கலோரிகள் குறைவு, நார் புரதம், வைட்டமின் டி, இரும்புச்சத்து, செலினியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. காளானை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது அல்சைமர், இதய நோய், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.



Click it and Unblock the Notifications