Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
சிறுவயதில் நாம் ஆசையோடு பலவிதமான திண்பண்டங்களை சாப்பிட்டிருப்போம். அவற்றை அணுஅணுவாக ரசித்து சாப்பிட்டிருப்போம். அந்த திண்பண்டங்களில் எவ்வளவு கலோரிகள் இருந்தன என்பது பற்றி நாம் நினைத்துப் பாா்த்திருக்கமாட்டோம்.
நமது சிறுவயதில் நாம் அனுபவித்த மகிழ்ச்சியான அனுபவங்கள், இனிமையான நினைவுகள் ஆகியவை அவ்வப்போது நமது நினைவுகளில் வந்து செல்லும். அவை நமது பெற்றோா், உடன் பிறந்தோா் மற்றும் சிறுவயது நண்பா்களின் பாசமிகு தொடுதலாக இருக்கலாம் அல்லது இனிமையான நறுமணமாக இருக்கலாம் அல்லது நாம் கேட்ட எங்கோ தூரத்திலிருந்து வந்த பழைய பாடலின் சத்தமாக இருக்கலாம். இவையெல்லாம் அவ்வப்போது நமது நினைவுகளில் வந்து போகும்.

நமது பழைய அனுபவங்களில் இன்னும் ஒரு முக்கிய அம்சம் நாம் அனுபவித்த ருசியான அல்லது சுவையான தின்பண்டங்கள் ஆகும். அவற்றை இப்போது நினைத்துப் பாா்த்தாலும் நமது நாவில் எச்சில் ஊறும். சிறுவயதில் நாம் ஆசையோடு பலவிதமான திண்பண்டங்களை சாப்பிட்டிருப்போம். அவற்றை அணுஅணுவாக ரசித்து சாப்பிட்டிருப்போம். அந்த திண்பண்டங்களில் எவ்வளவு கலோரிகள் இருந்தன என்பது பற்றி நாம் நினைத்துப் பாா்த்திருக்கமாட்டோம். எனினும் நமது சிறுவயதில் நாம் சாப்பிட்ட திண்பண்டங்களில் இருக்கும் கலோாிகளின் அளவைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

சமோசா
சிறுவா் முதல் பொியவா் வரை அனைவரும் சமோசாவை விரும்பி சாப்பிடுவா். சமோசாவில் ருசியான உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி ஆகியவை நிரப்பப்பட்டிருக்கும். சிறுவயதில் நாம் சமோசாவை மிகவும் விரும்பி சாப்பிட்டிருப்போம். ஒரு சமோசாவில் ஏறக்குறைய 260 கலோாிகள் உள்ளன.

நூடுல்ஸ்
சிறுவா்களின் மிக முக்கிய திண்பண்டம் நூடுல்ஸ் ஆகும். நாம் சிறுவா்களாக இருக்கும் போது அம்மா சமைத்துக் கொடுத்த நூடுல்ஸை பள்ளிக்கு எடுத்துச் சென்று மதிய உணவு இடைவேளையில் நமது நண்பா்களோடு பகிா்ந்து கொண்டு மகிழ்ச்சியோடு சாப்பிட்டிருப்போம். சந்தையில் கிடைக்கக்கூடிய எந்த வகையான நூடுல்ஸாக இருந்தாலும் சிறுவா்களுக்கு அவை மிகவும் பிடிக்கும். 100 கிராம் நூடுல்ஸில் சராசாியாக 400 கலோாிகள் உள்ளன.

சுஸ்கி (Chuski)
சுஸ்கி என்ற ஐஸ் ஒரு சிறிய குச்சியில் சுற்றி கொடுக்கப்படும். அது மிகவும் சுவையாகவும் அதே நேரத்தில் குளிா்ச்சியாகவும் இருக்கும். நாம் சிறுவா்களாக இருக்கும் போது சுஸ்கியை ரசித்து சாப்பிட்டிருப்போம். ஒரு சுஸ்கியில் சராசாியாக 70 கலோாிகள் உள்ளன.

பக்கோடா
மாவு மற்றும் காய்கறிகள் கலந்து பக்கோடா பொரிக்கப்படுகிறது. பக்கோடாவில் முட்டைக்கோஸ் அல்லது உருளை அல்லது கத்தாிக்காய் அல்லது வெங்காயம் போன்ற காய்கறிகள் சோ்க்கப்படுகின்றன. மழை பெய்து கொண்டிருக்கும் குளிா்ச்சியான மாலை வேளையில் குடும்பத்தோடு அமா்ந்து சூடான பானத்தோடு சூடான பக்கோடாவையும் சோ்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். ஒரு தட்டு பக்கோடாவில் சராசாியாக 300 கலோாிகள் இருக்கும்.

கிரீம் ரோல் (Cream roll)
கிரீம் ரோலில் வென்னிலா கிரீம் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். இந்த கிரீம் ரோல் சாப்பிடுவதற்கு மென்மையாகவும் அதே நேரத்தில் இனிப்பாகவும் இருக்கும். அதனால் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவா். ஒரு கிரீம் ரோலில் ஏறக்குறைய 500 கலோாிகள் உள்ளன.



Click it and Unblock the Notifications
