Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
கொரோனா இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா நிலைமை இன்னும் மோசமாயிடும்...
கொரோனா போன்ற கொடிய தொற்றுநோய் ஒருவரைத் தொற்றினால், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தான், விரைவில் அதிலிருந்து மீள முடியும்.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடமாகப் போகிறது. இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாம் கொரோனாவுடன் வாழ பழகிக் கொண்டோம். இருப்பினும், நாளுக்கு நாள் கொரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் கொரோனாவில் இருந்தும் பலர் மீண்டு வருகின்றனர். இப்படி கொரோனா வைரஸ் தாக்கியும் ஒருவரால் அதில் இருந்து மீள முடிகிறது என்றால், அதற்கு ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி தான் காரணம்.

பொதுவாக உடல்நிலை சரியில்லாத போது நாம் வாய்க்கு ருசியான உணவுகளை சாப்பிட விரும்புவோம். ஆனால் வாய்க்கு ருசியாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டால், அது நிலைமையை மோசமாக்கக்கூடும். குறிப்பாக கொரோனா போன்ற கொடிய தொற்றுநோய் ஒருவரைத் தொற்றினால், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தான், விரைவில் அதிலிருந்து மீள முடியும்.

சிடிசி-யின் கூற்று
நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் டி, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்த உணவுகளை உட்கொண்டால், விரைவில் மீள முடியும். அதிலும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், மேற்கூறிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
கீழே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விரைவில் மீள்வதற்கு சாப்பிடக்கூடாத உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உணவுகள் உடலினுள் வீக்கத்தை ஊக்குவிப்பதுடன், குணப்படுத்தும் செயல்பாட்டிலும் இடையூறை உண்டாக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளவர்கள், சோடியம், சர்க்கரை மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் நிறைந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் வீக்கத்தை உண்டாக்கி, விரைவில் நோயிலிருந்து மீள விடாமல் தடுக்கும். உடலினுள் வீக்கம் அதிகமானால், நோயெதிர்ப்பு மண்டலத்தில் அழுத்தம் அதிகரித்து, நோயில் இருந்து சீக்கிரம் குணமாக முடியாமல் செய்விடும்.
ஆகவே உருளைக்கிழங்கு சிப்ஸ், பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றில் சோடியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

மாட்டிறைச்சி
உங்களுக்கு கொரோனா இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாட்டிறைச்சியை அடிக்கடி சாப்பிடாதீர்கள். இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளதால், இது வீக்கத்தை ஊக்குவிக்கும். வேண்டுமானால், இதற்கு மாறாக மோனோசாச்சுரேட்டட் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடலாம். இத்தகைய மோனோசாச்சுரேட்டட் கொழுப்பானது அவகேடோ, ஆலிவ் ஆயில், மீன் போன்றவற்றில் அதிகம் உள்ளது. புரோடீன் சத்து வேண்டுமானால், மீனுக்கு பதிலாக பீன்ஸ் மற்றும் பருப்பு போன்ற தாவர வகை புரோட்டீன்களை உட்கொள்ளலாம்.

வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த/வறுத்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகளவில் இருக்கும். இந்த உணவுகள் உடலுக்கு நாம் நினைத்திராத அளவில் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் அதிக அழுத்தத்தைத் தரக்கூடியது. மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அடக்கவும் செய்கின்றன. அதோடு இந்த உணவுகள் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய மோசமான கொழுப்புக்களின் அளவையும் அதிகரிக்கின்றன.

சர்க்கரை பானங்கள்
பொதுவாக சர்க்கரை உடலில் வீக்கத்தை உண்டாக்கக்கூடிய ஒரு மோசமான பொருள். இத்தகைய சர்க்கரையை கொரோனா உள்ளவர்கள் அறவே தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சோடா பானங்கள், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றிற்கு 'குட்-பை' சொல்லிவிடுங்கள்.

காரமான உணவுகள்
சளி, இருமல் அல்லது காய்ச்சலின் போது, நல்ல காரமான உணவுகளை சாப்பிடத் தோன்றும். ஆனால் இந்த வகை உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் காரமான உணவுகள், தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, இருமலை மேலும் மோசமாக்கும். உங்களுக்கு மூக்கடைப்பு பிரச்சனை இருந்தால், ஒரு பௌல் சூடான சூப் மற்றும் பானங்களைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications