Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
சாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?
உணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சில உணவுகள் நமது முழு உடல் அமைப்பையும் மாற்றம் பெற செய்யும். பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது தான் பழங்களும். நமக்கு பிடித்த பழங்களை எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்போம்.

பழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் தான் பழங்களிலும் உள்ளன. சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக பழங்களை சாப்பிடுவதற்கு முன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பூச்சி கொல்லிகள்
பழங்களின் மேல் தெளிக்கப்பட்டிருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும். அவ்வாறு செய்தால் இதனால் ஏற்பட கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

பாதிப்புகள்
கண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்ற பாதிப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணமே இந்த வகையான பூச்சி கொல்லிகள் தான். நீரில் அதிக நேரம் பழங்களை ஊற வைப்பதால் இந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

எவ்வளவு நேரம்?
பொதுவாகவே பழங்களை வெறும் நீரினால் அலசுவது சிறந்த முறையல்ல. அதற்கு மாறாக 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்து கொள்ளும்.

வெப்ப நிலை
இது போன்று நீரில் ஊற வைப்பதால் பழங்களின் தட்பவெப்பம் சீராக இருக்கும். குறிப்பாக இவை வெப்ப நிலையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் அதிக அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும்.
இவ்வாறு நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நமது உடலில் இவை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்து கொள்ளலாம்.

செரிமான பிரச்சினைகளுக்கு
இது போன்று பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகளை தடுக்க முடியும். மேலும், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதையும் இதனால் தடுக்க இயலும்.



Click it and Unblock the Notifications