Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஒயின் பாட்டிலை இப்படி சாய்வாக வைத்து விற்பதற்கான காரணத்தை தெரிஞ்சிகிட்டா ஆச்சரியப்படுவீங்க!
திராட்சை ரசம் என்றழைக்கப்படும் இந்த ஒயினில் பல வித அற்புதங்கள் ஒளிந்துள்ளன. இதை பற்றி இது வரை நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒயினை குடிப்பதோடு சரி, இதில் இருக்கும் சில மர்மங்களை தெரிந்து கொண்டால் நமக்கே நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும். குறிப்பாக ஒயினை உற்பத்தி செய்து அடைக்கப்படும் பாட்டிலில் தான் பலவித அற்புதங்கள் உண்மையிலே ஒளிந்துள்ளது.

சாதாரண இந்த பாட்டிலில் அப்படி என்ன ஆச்சரியம் உள்ளது என நினைக்கிறீர்களா? இதை ஒரு பக்கமாக வைப்பதற்கும், இதை கார்க் போன்ற மர மூடிகளை வைத்து மூடுவது வரை ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த ஒயின் இரகசியத்தை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

வரலாறு
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக ஒயினை அறிமுகப்படுத்தினர். இந்த பழக்கம் தான் இன்று வரை நீடித்து வருகிறது. திராட்சை ரசம் என்று பல நூல்களில் இதை அந்த காலத்திலே குறிப்பிட்டுள்ளனர்.
இதன் சுவையும், இதன் தனித்துவமான மென்மையான போதையும் தான் உலகம் முழுக்க இந்த பானம் பிரபலமாக முக்கிய காரணம்.

ஒயின் வகைகள்
ஒயினில் பல வகைகள் உண்டு. நாம் நினைப்பது போல திராட்சையில் இருந்து செய்யப்படும் ஒயின் மட்டும் கிடையாது.
ரெட் ஒயின், வெள்ளை ஒயின், ரோஸ் ஒயின், பழங்கள் பல சேர்த்த பழ ஒயின், தேன் ஒயின்...இப்படி பலவிதங்கள் உண்டு. ஆரம்பத்தில் இது திராட்சையில் இருந்து மட்டும் தான் உற்பத்தி செய்யப்பட்டது.

சுவை
ஒயினில் சுவையை மாற்றுவதே அவற்றில் அளவுக்கு அதிகமாக சேரும் ஆக்சிஜென் தான். ஒயின் பாட்டிலை நேராக வைக்கும் போது அவற்றில் ஆக்சிஜென் அளவு அதிகமாக சேர கூடும். இதனால் அசிட்டிக் அமிலத்தின் அளவு அதிகரிக்க கூடும்.

வினிகர் சுவை!
ஆக்சிஜென் அளவு அதிகரிக்கும் போது அவை வினிகரில் சுவையை தந்து விடும். இதற்கு காரணம் அசிட்டிக் அமிலம் தான். மேலும், இதன் மணத்தையும் சுவையையும் முழுமையாக மாற்றி விடும். இதை தடுக்க ஒரு வழியும் உள்ளது.

வேதி மாற்றம்
பொதுவாக ஒயினை காற்றோட்டம் உள்ள பகுதியில் வைத்தாலோ அல்லது சூரிய ஒளி இருக்கும் இடத்தில் வைத்தாலோ இவற்றில் வேதி வினை நடக்க கூடும். இவை ஒயினில் முழு சுவையையும் முழுவதுமாக மாற்றி விடும்.

தீர்வு
ஒயினின் சுவை அப்படியே இருக்க வேண்டுமென்றால் அதை நேராக வைக்க கூடாது. ஆதலால், அதன் மூடியின் மீது ஒயின் படும்படி சாய்வாக வைக்க வேண்டும். எப்போதுமே இவற்றின் மூடியில் ஈரப்பதம் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

காரணம்?
இவ்வாறு சாய்வாக வைக்கும் போது மூடி ஈரப்பதமாகி உள்ளே வர கூடிய ஆக்சிஜனை வெளியேற்ற உதவும். இதற்கு மூடியில் உள்ள சிறு சிறு துளைகளும் உதவும்.
இந்த நிகழ்வு நடக்க வேண்டுமென்றால் ஒயின் பாட்டிலை சாய்வாக வைத்திருத்தல் அவசியம். இது தான் ஒயினின் முக்கிய இரகசியமாக பல ஆண்டுகளாக பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications