Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மஞ்சளுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு புற்றுநோயே வராதாம் தெரியுமா?
பல ஆயுர்வேத சிகிச்சைகளில் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்க காரணம் அதன் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு குணங்கள்தான்.
இயற்கை நமக்கு அளித்துள்ள பல ஆரோக்கியமான உணவு பொருட்களில் மஞ்சள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மஞ்சள் மசாலா பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படும் ஒரு பொருளாகும். மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காக பழங்காலம் முதலே பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதும் பல ஆயுர்வேத சிகிச்சைகளில் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்க காரணம் அதன் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு குணங்கள்தான்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மற்றொரு மருத்துவ குணம் நிறைந்த பொருள் சேரும்போது அது உங்கள் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடும். அந்த மற்றோரு மருத்துவ பொருள்தான் மிளகு. இந்த இரண்டு பொருளும் இணையும்போது அது ஆரோக்கிய பிரச்சினைகளை குணப்படுத்தக்கூடும். இந்த பதிவில் மஞ்சள் மற்றும் மிளகை சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பார்க்கலாம்.

சரும ஆரோக்கியம்
மிளகு மற்றும் மஞ்சள் கலந்த கலவையில் அதிக அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது. இது உங்கள் சருமத்தில் ஏற்படும் பல பாதிப்புகளை குணப்படுத்த உதவும். குறிப்பாக இது சருமத்தில் ஏற்படும் கொப்புளங்களை குணப்படுத்துவதோடு உங்கள் சருமத்தையும் பொலிவுற செய்யும்.

வலியை குறைக்கும்
மஞ்சள் அதன் தீவிர குணப்படுத்தும் பண்பு காரணமாக அது காயங்கள் மற்றும் வலிகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாக இருக்கிறது. மஞ்சளுடன் மிளகு சேரும்போது அது எலும்புகளில் ஏற்படும் வலியை குறைக்கும், குறிப்பாக ஆர்திரிடிஸ் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.

புற்றுநோயை தடுக்கும்
மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றின் சரியான கலவை உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள் உங்கள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மஞ்சளின் புற்றுநோய்க்கான எதிர்ப்பு பண்பு மார்பக புற்றுநோய் செல்கள், பெருங்குடல் புற்றுநோய் செல்கள் மற்றும் லுக்கேமியா புற்றுநோய் செல்கள் போன்றவற்றை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.

உடல்பருமனை குறைக்கும்
மஞ்சளுடன் மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து சூடான நீரில் கலந்து தினமும் காலையில் குடிப்பது உங்கள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகளை குறைப்பதோடு உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் செய்யும். மஞ்சளுடன் மிளகு சேர்த்து சாப்பிடுவது கொழுப்புகளின் அளவை குறைக்கவும், பருமனை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
ஆய்வுகளின் படி மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் மிளகில் உள்ள பைபரின் என்ற பொருளும் உங்கள் இரத்த நாளங்களின் மீது உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடுவது உங்கள் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.

வீக்கத்தை குறைக்கும்
ஆயுர்வேதத்தில் பல நூறு ஆண்டுகளாக மஞ்சள் மற்றும் மிளகு இரண்டும் வீக்கத்தை குறைக்கவும், மூட்டுவலி போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பொருட்களிலுமே வீக்கத்தை குணபடுத்தும் பண்புகள் உள்ளது.

ஈரலை பாதுகாக்கும்
மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஈரல் செல்களை சேதப்படுத்தும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற பயன்படுகிறது. மிளகில் உள்ள குளுதாதயோனின் ஈரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஈரலில் உள்ள செல்களின் சமநிலையை பரமரிக்க உதவுகிறது.

செரிமானம்
மஞ்சள் மற்றும் மிளகு இரண்டிலுமே உள்ள மருத்துவ குணங்கள் உங்கள் குடலில் உள்ள நொதிகளின் செரிக்கும் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதன்மூலம் உணவு செரிமானம் அடையும் நேரம் மிகவும் குறைக்கப்படும். குறிப்பாக இதில் உள்ள எதிர் அழற்சி பண்புகள் உங்கள் குடலில் வீக்கங்களை குறைக்க உதவும்.

நினைவாற்றலை அதிகரிக்கும்
மஞ்சள் மற்றும் மிளகு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் உங்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். இது உங்கள் மூளையில் ஏற்படும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இது நினைவாற்றலை ஊக்குவிக்கவும் உதவும்.

மனஅழுத்தத்தை குறைக்கும்
இந்த இரண்டு மசாலா பொருட்களிலுமே மனஅழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் உள்ளது. மஞ்சள் மற்றும் மிளகு இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோனான டோபோமைனின் சுரப்பையும் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications
