Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா? கூடாதா? சாப்பிட்டா என்னாகும்?
பித்தப்பை கல்லோ வலியோ இருப்பவர்கள் ஏன் ஆரஞ்சுப் பழம் சாப்பிடக்கூடாது என்பது பற்றிய காரணங்களைத் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
நெஞ்சின் நடுப்பகுதி எலும்பில் உருவாகி உயிர்போவதுபோல வேதனையைக் கொடுப்பது பித்தப்பை வலியாகும். பல நேரங்களில் நெஞ்சு எரிச்சலையும் பித்தப்பை வலி என்று தவறாக எண்ணிவிட வாய்ப்பு உள்ளது.

ஆரஞ்சு பழம் போன்ற அதிக அமிலச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதால் நெஞ்சு எரிச்சல் ஏற்படக்கூடும். வயிற்றிலுள்ள அமிலம் வெளியே வந்து உணவுக்குழலுக்கும் நுழையும்போது தொண்டை, நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படுகிறது.

பித்தப்பை
பித்தநீர் மஞ்சள் நிறமான திரவமாகும். செரிமானத்தின்போது கொழுப்புச்சத்தினை பிரித்து, அது இரத்தத்தில் கலப்பதற்கு பித்தநீர் உதவுகிறது. அதிகமான கொழுப்புச் சத்து மிக்க உணவுகளை சாப்பிடும்போது, அவற்றை செரிக்க அதிகம் பித்தநீர் தேவைப்படும். அதுபோன்ற சமயங்களில் பயன்படுத்தப்படும்படி பித்தநீர் சேமித்து வைக்கப்படும் இடமே பித்தப்பை ஆகும்.

பித்தப்பை வலி
பித்தப்பை கற்களின் சிறுதுணுக்குகள் (Gallbladder sludge)வழக்கமாக வலியை தருவதில்லை. ஆனால், சிறுகூழாங்கற்கற்கள் போன்று சேர்ந்திருக்கும் பித்தப்பை கற்கள், பித்தப்பையின் வாயை அடைத்துக்கொண்டால் அதிக வலி ஏற்படும்.
பித்தப்பை கற்களின் சிறு துணுக்குகள், பித்தப்பை கற்கள் மற்றும் பித்தப்பை அழற்சி ஆகியவற்றால் பித்தப்பை வலி ஏற்படும். மருத்துவர் அல்ட்ரா சவுண்ட் என்னும் சோதனை செய்து வலிக்கான காரணத்தை கண்டறிவார்.

வலியை தூண்டும் உணவு
உணவு ஒவ்வாமை காரணமாக ஆரஞ்சு பழங்கள் பித்தப்பை வலியை தூண்டக்கூடும். பித்தப்பையில் குறைபாடு இருக்குமானால் நட்ஸ் என்னும் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி போன்ற கொட்டைவகை உணவுபொருள்கள், பச்சைப் பயிறு, கொண்டைக்கடலை, மொச்சைப் பயிறு, காராமணி, கொள்ளு, பட்டாணி, தட்டைப் பயிறு, முட்டை, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, பால், காஃபி, வெங்காயம் மற்றும் சோளம் ஆகியவையும் பித்தப்பை வலியை தூண்டக்கூடும்.

எப்போது நிறுத்தலாம்?
பித்தப்பையின் பாதிப்பு இருக்கும்பட்சத்தில் பொறித்த கோழி, இறால் போன்ற உணவுபொருள்களும், கொழுப்புச் சத்து அதிகம் இருக்கக்கூடய ஐஸ்கிரீம், வெண்ணெய் போன்றவையும்கூட வலியை ஏற்படுத்தும்.
ஆரஞ்சு சாப்பிடுவது வலியை ஏற்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், ஆரஞ்சு பழங்கள் மற்றும் அது சார்ந்த ஜூஸ் போன்ற அனைத்து வகை பயன்பாட்டையும் நிறுத்திவிடுங்கள்.

சிகிச்சை
பித்தப்பையில் சிறிய அளவில் கோளாறு இருந்தால் உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் சரி செய்துவிடலாம். பித்தப்பையில் கற்கள் உருவாகி பிரச்னை தீவிரமாகியிருந்தால் அவற்றை கரைப்பதற்கு ஆண்டுக்கணக்கில் மருந்து சாப்பிட வேண்டும்.
பித்தப்பை அழற்சி ஏற்பட்டு, நோய்தொற்று ஏற்பட்டுவிட்டால் அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.



Click it and Unblock the Notifications