Latest Updates
-
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
ஆண் பெண் இருவரும் வெள்ளைப்படுதலை தடுக்க வாழைத்தண்டை எப்படி பயன்படுத்தலாம்?
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினையை தீர்க்க வாழைத்தண்டு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். அது பற்றிய ஒரு பயனுள்ள தொகுப்பு தான் இது.
வாழைப்பழம் ஆரோக்கியம் மிகுந்தது என்பது நமக்குத் தெரியும். அதேபோல் வீட்டில் வாழைக்காய் பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடுவோம். வாழைக்காய் பஜ்ஜிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஆனால் ஒரு சிலர் வாயுத் தொல்லை ஏற்படும் என்று ஒதுக்கிவிடுவார்கள். இதையெல்லாம் தாண்டி, வாழைத்தண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தும் கூட அதை வாங்கி, நாறெடுத்து விட்டு சமைக்கவோ, சாறு பிழிந்து குடிக்கவோ சோம்பேறித்தனம்.

மரபு வைத்திய முறைகள்
தீராத பல நோய்களையும் தீர்த்து வைக்கும் அற்புதமாக இந்த வாழைத்தண்டு, நம்முடைய பாரம்பரிய மருத்துவமான பாட்டி வைத்திய முறையில் பயன்படுத்தப்படுகிறது. அப்படி என்னென்ன நோய்களைத் தீர்க்க வாழைத்தண்டை எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

நிறைந்த நார்ச்சத்து
வாழைத் தண்டில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், நம்முடைய குடலுக்குள் தேங்கியிருக்கும் மணல், கற்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.

சிறுநீர் கடுப்பு
சரியாக சிறுநீர் வராமல், அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து வந்தால் சிறுநீர் பிரிவது எளிதாகும். மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.

வேறு பயன்கள்
நரம்புத் தளர்ச்சியை சரிசெய்யும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு. தினந்தோறும் வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தீர்கள் என்றால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் குணமாகும்.
அடிக்கடி தாகம் எடுப்பவர்கள் வாழைத்தண்டை இடித்து சாறெடுத்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த சுத்திகரிப்பு போன்ற பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சூப் குடித்து வாருங்கள்.

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை இருப்பவர்கள் வாழைத்தண்டை நன்கு வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.

விஷக்கடி மருந்து
பாம்பு கடித்தாலோ அல்லது விஷப் பூச்சகள் ஏதாவது தீண்டிவிட்டாலோ உடனே அந்த இடத்தை விஷம் ஏறாமல் இருகு்க கீறி விடுவார்கள். அதன்பின், அந்த இடத்தில் வாழைத்தண்டு சாறை தடவி விட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு குடிக்கக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் எப்பேர்ப்பட்ட விஷமும் முறிந்துவிடும்.

தீக்காயங்கள்
தீக்காயங்கள் வெகு நாட்களாக ஆறாமல் இருந்தால், வாழைத்தண்டை எடுத்து நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து குழைத்துத் தடவுங்கள். எப்படிப்பட்ட தீக்காயமும் ஆறிவிடும்.

கடுக்காயும் வாழைச்சாறும்
வாழைச்சாறுடன் கொஞ்சம் கடுக்காயை சேர்த்து கலந்து சாப்பிட ஆசனவாய் எரிச்சல், மூலநோய் ஆகிய பிரச்னைகள் தீரும்.

வாழைப்பூ சாறு
கை, கால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.
வாழைச்சாறு கடும் துவர்ப்புச் சுவையுடையது தான். அப்படியே குடித்தால் முழு பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு கொடுப்பதானால் வெல்லமோ அல்லது பனை வெல்லமோ கலந்து கொடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications