For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவுல ஏன் இந்த மூலிகை அரிசியை சாப்பிடறாங்க தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

|

பலவித அரிசி வகைகள் இருந்தாலும், அவற்றில் எது இயற்கை வழியாக பிரசித்தி பெற்றுள்ளது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். சாப்பிடும் உணவானது ஆயுர்வேத தன்மையாக இருந்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த வகை உணவுகள் நமது ஆயுளை அதிகரிப்பதோடு, நோய்கள் இல்லாமல் பார்த்து கொள்கின்றன. குறிப்பாக கேரளாவின் மிகவும் பிரபலமான பழுப்பு நிற அரசியின் மகிமைகளை சொல்லி கொண்டே போகலாம்.

இதை "எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தாய்" என்றே ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவார்களாம். இதன் பெயரும், இதன் வரலாறும் மிகவும் வியக்கத்தக்க வகையிலே உள்ளது. சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை இந்த அரிசியை சாப்பிடலாம். கேரளாவில் மிக முக்கிய மூலிகை தன்மை கொண்ட அரிசியாக இது பார்க்கப்படுகிறது.

இதை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன, இந்த அரிசியை எந்த பொருளோடு சேர்த்து சாப்பிட வேண்டும், இதை எவ்வளவு அளவு சாப்பிடுலாம், போன்ற பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆதி அந்தம்..!

ஆதி அந்தம்..!

இந்த பழுப்பு நிற அரிசியின் பெயர் "நவார அரிசி". இது கேரளத்தை பூர்வீகமாக கொண்டது. மூலிகை தன்மையை எக்கச்சக்க அளவில் கொண்ட ஒரே அரிசி இது தான்.

இதை ஆயுர்வேதத்தில் மிக முக்கிய அரிசியாக பார்க்கப்படுகிறது. உடலில் ஏற்பட கூடிய பலவித நோய்களுக்கு இந்த அரிசி தான் மருந்தாக உள்ளதாம்.

உள் நோய்களுக்கு

உள் நோய்களுக்கு

உடலுக்கு வெளியில் இருக்கும் நோய்களை நம்மால் எளிதில் உணர இயலும். ஆனால், உள்ளுக்குள் இருக்க கூடிய நோய்களை அவ்வளவு எளிதில் நம்மால் உணர முடியாது.

அந்த வகையில், இந்த நவார அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலமாக உள்ளுக்குள் நோய்கள் உருவாவதை தடுக்கும். அத்துடன் உள் வலிகளையும் இது குணப்படுத்தும்.

ஆயுர்வேத அரிசி

ஆயுர்வேத அரிசி

இந்த அரிசியில் மூலிகை தன்மை நிறைந்து உள்ளதால் இதை சாப்பிடுவோருக்கு உடல் திடம் பெறும். நோய் நொடிகள் இல்லாமல் நீண்ட காலம் வாழ இந்த நவார அரிசியை சமையலில் பயன்படுத்தினாலே போதும். இரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இந்த அரிசி பயன்படுகிறது.

செரிமான மண்டலம்

செரிமான மண்டலம்

நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இந்த அரிசியில் இருப்பதால் மிக விரைவிலே செரிமானம் அடைந்து விடும். வயிற்று உப்பசம், செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

MOST READ: தினமும் முட்டை சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படுமா?! அதிர்ச்சி தகவல்!

எதிர்ப்பு சக்தி

எதிர்ப்பு சக்தி

இப்போதெல்லாம் நோய்களின் வருகை அதிகமாகி கொண்டே போகிறது. இது ஒரு புறம் இருக்க இதன் தாக்குதல் அதிக வீரியம் கொண்டதாக உள்ளது.

நோய்களை தடுக்க எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலே போதும். நவார அரிசி சாப்பிட்டு வந்தால் வெள்ளை அணுக்கள் உயர்ந்து எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்.

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்பிணிகளுக்கு

இந்த அரிசியை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள சிசு மிக ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகள் இந்த அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலமாக இளம் வயதிலே குழந்தைகள் புத்திசாலியாக இருப்பார்கள். அத்துடன் சுறுசுறுப்பும் கூடும்.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள்

அதிக சத்துக்களும், தாதுக்களும் நவார அரிசியில் நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ள உதவும்.

எனவே, சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியை தாராளமாக சாப்பிடலாம். மேலும், உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவும் இந்த அரிசி உதவுகிறது.

எவ்வாறு சாப்பிடலாம்?

எவ்வாறு சாப்பிடலாம்?

இந்த அரிசியை அப்படியே வேக வைத்து பால் சேர்த்து சாப்பிடலாம். அல்லது பொடியாக்கி கூழ் பதத்தில் பாலுடன் கலந்து சாப்பிடலாம்.

நாம் சாப்பிட கூடிய மற்ற அரிசி வகைகளை காட்டிலும் இதில் அற்புதமான மூலிகை வாசம் சாப்பிடும் போது ஏற்படும். இது உங்களுக்கு ஆரோக்கியமான சூழலை தரும்.

MOST READ: தினமும் அரை கைப்பிடி பிஸ்தா சாப்பிட்டால் உடல் எடையை சில வாரங்களிலே குறைக்கலாம்..!

மூட்டு பிரச்சினைகள்

மூட்டு பிரச்சினைகள்

இந்த அரிசியில் உள்ள மூலிகை தன்மை மூட்டுகளை இலகுவாக்கி இறுக்கமான தன்மையை போக்கி விடும். இதனால் மூட்டு சார்ந்த வலிகள், வீக்கங்கள், போன்றவை இனி இருக்காது. மொத்தத்தில், உடலின் செல்களை புத்துணர்வுடன் வைத்து நீண்ட ஆயுளை தர இந்த நவார அரசி உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Navara Rice

Here we listed out some of the health benefits of navara rice.