Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்!
ஒவ்வொரு வருஷம் நமக்கு பிறந்த நாள் வந்தாலே ஒரு வயசு கூடிடுச்சே அப்படிங்குற ஒரு பெரிய கவலை இருக்கத்தான் செய்யுது. வயசு கூடுவது ஒரு பக்கம் இருந்தாலும் பலவித நோய்கள் ஒவ்வொரு வயதிலையும் நமக்கு கூடி கொண்டே வருது. இதையெல்லாம் சரி செய்ய காலையில் 10 மாத்திரை, இரவு 10 மாத்திரை.. இப்படி மாத்திரைகளை அடுக்கி கொண்டே சாப்பிடுவோம்.

மாத்திரைகளை எண்ணற்ற அளவில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் சற்று காலத்திற்கு சரியானது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் தவிர உண்மையிலே சரி செய்யாது. இந்த வயதிலும் ஒரு சில விஷயங்கள் செய்வதால் எந்த வித பாதிப்பும் வராது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன செயல்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உணவு முறை
பலர் 30 வயதை நெருங்கும் போதே இதை செய்ய கூடாது. அதை செய்ய கூடாது. இதை சாப்பிட கூடாது, அதை சாப்பிட கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளை தனக்குள் வகைப்படுத்தி கொள்வர்.
இது போன்ற செயல்களும் ஒரு வகையில் பாதிப்பை உண்டாக்கும். கண்மூடி தனமாக கூற படுகின்ற செய்திகளை நம்பாமல் அதை ஆராய்ந்து செய்வது நல்லது.

மீன்
40 வயதை நெருங்கும் போதே அசைவ உணவுகளை மறந்து விட வேண்டும் என கூறுவார்கள். ஆனால் இது அப்படி கிடையாது. அசைவ உணவுகளில் மீன் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம். இது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையே தரும்.

வண்ணமயமான உணவுகள்
பொதுவாக கலர் கலர் உணவுகளை சாப்பிட கூடாது என்பார்கள். ஆனால், கலர் கலர் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை கொண்டு சமைத்து சாப்பிடலாம். இது உடலுக்கு முழு ஆரோக்கியத்தை தரும். அத்துடன் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்வை இது தர கூடும்.

காபி
40 வயதை நெருங்கினால் காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி கொள்ள வேண்டும் என பலர் கூறுவார்கள். இதற்கு மாறாக பச்சை நிற காபி கொட்டைகளை கொண்டு காபி தயாரித்து குடிக்கலாம். இது உங்களை நீண்ட காலம் இளமையாக வைத்து கொள்ளும்.

யோகர்ட்
பால் பொருட்களை 40 வயதை கடந்தும் சாப்பிடலாம். உடலுக்கு அதிக வலுவை பெற வேண்டும் என்றால் அதற்கு பால் பொருட்களும் முக்கியம். யோகர்ட், பால் போன்றவற்றை குடிக்கலாம். இது அதிக ஆரோக்கியத்தை உடலுக்கு தரும்.

தானிய வகைகள்
பலவித தானியங்கள் இருந்தாலும் அதில் ஒரு சில தானிய வகைகள் தான் அதிக ஊட்டச்சத்துக்களை தரும். தானிய வகைகள் உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும். அத்துடன் செரிமான பிரச்சினையையும் இது உண்டாக்காது.

பருப்பு வகைகள்
உடலில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை இந்த பருப்பு வகைகளுக்கும் உண்டு. பருப்பு வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும். மேலும், இதய பாதிப்புகள், சர்க்கரை நோய் போன்ற அபாயத்தையும் இது தடுக்கும்.



Click it and Unblock the Notifications