Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கிரில் சிக்கன்னா அவ்ளோ பிடிக்குமா?... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க சாப்பிடலாமா வேண்டாமானு...
கிரில் வகை மாமிச உணவுகளை சாப்பிடுவதால் புற்று நோய் வருகிறது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த க்ரில் மாமிசத்தை சமைக்கும் போது ஏற்படும் புகையை நுகர்ந்தாலே புற்று நோய் அபாயம் நம்மை தொற்றுக் கொ
இப்பொழுது எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது இந்த க்ரில் சிக்கன் தான். நீங்கள் ரோட்டோர ஹோட்டல் கடைகளில் எங்கு பார்த்தாலும் இந்த க்ரில் மாமிச உணவுகள் தான் தொங்க விடப்பட்டு சுடச்சுட பரிமாற ரெடியாக இருக்கும். உண்மையைச் சொல்லப் போனால் இளைஞர்களுக்கு ரெம்பவும் பிடித்தமான ஒரு உணவு என்றே கூறலாம்.

அப்படிப்பட்ட க்ரில் வகை மாமிச உணவுகளை சாப்பிடுவதால் புற்று நோய் வருகிறது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த க்ரில் மாமிசத்தை சமைக்கும் போது ஏற்படும் புகையை நுகர்ந்தாலே புற்று நோய் அபாயம் நம்மை தொற்றுக் கொள்ளும் என்று நவீன ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆராய்ச்சி தகவல்கள்
இந்த க்ரில் மாமிச உணவுகளிலிருந்து வெளியாகும் கெமிக்கலான பாலிசைக்கிளக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் நமது சருமத்தின் வழியாக ஊடுருவி புற்று நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் அதைச் சுற்றி நின்றாலே போதும் புற்று நோய் உங்களையும் ஒட்டிக் கொள்ளும் என்று ஆச்சர்யமூட்டுகிறது ஆராய்ச்சி தகவல்கள்.

நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட்
தேசிய புற்று நோய் நிறுவனம் கருத்துப்படி பார்பிக்யூ போன்றவற்றில் மாமிசத்தை க்ரிலில் வைத்து சூடுபடுத்தும் போது அதிலுள்ள கொழுப்புகள் மற்றும் ஜூஸை எரிந்து பாலிசைக்கிளக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பனை(PAH) உண்டாக்குகிறது. இந்த நச்சுப் புகை நீங்கள் சாப்பிடும் பர்கர் மற்றும் ஸ்டீக் போன்ற மற்ற உணவுப் பொருட்களிலும் ஒட்டிக் கொள்கிறது. இந்த PHA பொதுவாக மரக்கட்டை, கரி, புகையிலை, எண்ணெய் மற்றும் வாயு போன்றவை எரியும் போது வெளியாகும் ஒரு நச்சு வாயு. எனவே நீங்கள் க்ரிஷ் மாமிச உணவுகளின் புகையை நுகர்வது புகையிலை காற்றை சுவாசிப்பதற்கு சமமாகும்.

சருமத்தினுள் ஊடுருவல்
இது குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்ட போது இந்த க்ரில் மாமிச உணவுகளை சாப்பிடும் போதும் மட்டுமல்ல ஏன் அதிலிருந்து வெளியாகும் புகையை கூட சுவாசித்தல், ஏன் இந்த PHA நச்சு உங்கள் சருமத்தின் வழியாகவும் ஊடுருவி தீங்கை விளைவிக்கிறது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

சோதனை முடிவு
சுற்றுச்சூழல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பத்திரிகையில் வெளியிடப்பட்ட தகவல் படி சில பங்கேற்பாளர்களை இரண்டு வகைகளாக பிரித்து அவர்களிடையே சோதனை நடத்தினர். வெளிப்புற பகுதிகளில் இந்த க்ரில் மாமிச உணவுகளை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இதிலிருந்து வெளிவந்த PHA நச்சு வாயுவை சுவாசித்தவர்களின் எண்ணிக்கையை விட சருமத்தின் வழியாக ஊடுருவிய எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

சமையல் எண்ணெய்
இது குறித்து அமெரிக்கன் கெமிக்கல் சொஸைட்டி விளக்கிக் கூறியதாவது பார்பிக்யூ போன்ற ரெஸ்டாரென்ட்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் சருமத்தின் வழியாக PHA நச்சு வாயுவை ஊடுருவச் செய்கின்றன என்கின்றனர்.

ஆடை
நீங்கள் அணிந்திருக்கும் ஆடை இந்த PHA நுகர்விற்கு ஒரு தடையாக அமையலாம். ஆனால் உங்கள் சருமம் வெளிப்படையாக இருக்குமேயானால் கண்டிப்பாக இந்த நச்சு புகை உங்களை பாதிக்க வாய்ப்புள்ளது.

எப்படி தடுப்பது?
சமைக்கும் போது அதற்கு அருகில் இருக்காதீர்கள். உங்களை முழுமையாக கவர் செய்யும் ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். சமைத்த பிறகு ஆடையை நன்றாக துவைத்து பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரு செஃப் ஆக இருந்தால் அதிகப்படியான புகை வெளியேறுவதை தடுக்கும் படி நடந்து கொள்ளுங்கள்.
ராபர்ட் எச். ஷெர்லிங், எம்.டி என்பவர் ஹார்வர்ட் ஹெல்த் வலைப்பதிவுகளில் எழுதிய கருத்துப்படி மாமிசத்தை சமைக்கும் போது அதன் மேல் மெல்லிய சாஸ் சாற்றை ஊற்றி சமையுங்கள். இது அதிக PHA வெளியேறாமல் தடுக்கும். க்ரிலில் சமைப்பதற்கு முன் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து லேசாக சமைத்து கொள்ளுங்கள். இது இறைச்சியின் உள்ள ஜூஸ் கள் எரிந்து நச்சுப் புகையை வெளியிடாமல் இருக்க உதவும். இதனால் உங்கள் வாடிக்கையாளர்களும் பாதிப்படையாமல் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications