Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
குளிர்காலத்தில் ராகி சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
குளிர்காலங்களில் உடல் பலவீனமடையாமல் பார்த்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நம்முடைய வாழ்க்கை முறையும் பருவ காலங்களுக்கு ஏற்ற உணவு முறையும் மிக அவசியம்.

ஏனெனில் பருவ கால மாற்றங்கள் நம்முடைய உடலின் வெப்பநிலையையும் மற்ற செயல்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்கு ஈடுசெய்யும் வகையில் நாம் உணவுகளை எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்.

குளிர்காலம்
பருவ மாற்றங்களில் கோடை காலத்தைக் கூட எளிதாக சமாளித்துவிடலாம். இந்த குளிர்காலத்தைச் சமாளிப்பது பெரிய விஷயம். ஏனென்றால் குளிர்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாகிவிடும். குளிர்காலத்தில் எதை சாப்பிட்டாலும் சளி பிடித்துவிடும். எது சாப்பிடலாம்? எது சாப்பிடக் கூடாது என்பதே தெரியாமல் எதையாவது சாப்பிடுவோம். குளிர்காலத்தில் தயிர், ஐஸ், ஐஸ்கிரீம் ஆகியவற்றை குடித்தால் தான் பிரச்சினை என்று நினைக்கிறோம். ஆனால் நாம் சாப்பிடும் நிறைய காய்கறிகள் கூட குளிர்காலத்தில் நமக்கு ஒத்துக் கொள்ளாது. அதனால் எந்தெந்த பருவச் சூழலுக்கு என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

குளிர்கால உணவுகள்
குளிர்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நம்முடைய உடலை கதகதப்பாக வைத்திருக்கும் படி இருக்க வேண்டும்.
அதனால் உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மற்ற காலங்களை விடவும் குளிர்காலத்தில் உடல் சோம்பல் அதிகமாக இருக்கும். குளிர் நம்முடைய நரம்புகளை சுண்டச் செய்துவிடும். அதனால் எப்போதையும் விட, ஆற்றல் அதிகமாக இருக்கின்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி குளிர்குாலத்தை சமாளிக்க என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு
மிகக் குறைந்த கலோரியும் அதிக ஊட்டச்சத்தும் மிக்க உணவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒன்று. இது குளிர்காலத்துக்கு மிகவும் ஏற்ற உணவு. நாம் வழக்கமாகச் சாப்பிடும் உருளைக்கிழங்கை விட இதில் சர்க்கரை அதிகம் இருந்தாலும் ஊட்ச்சத்துக்கும் குறைவில்லை. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இது மலச்சிக்கலை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. அதோடு உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.

டர்னிப் பூவும் இலையும்
இந்த டர்னிப் பூவில் ஸ்டார்ச் சத்து நிறைந்திருக்கிறது. அதோடு இதில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இந்த டர்னிப் பூ புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த டர்னிப் பூவில் உயர்ந்த வைட்டமின் கே மற்றும் இதனுடைய இலைகளில் நிறைந்த வைட்டமின் ஏவும் இருக்கிறது. இந்த டர்னிப் பூ மற்றும் அதனுடைய இலைகளை உணவாக எடுத்துக் கொண்டால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளும். இதய நோய்களை குணப்படுத்தும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

பேரிச்சை
மிகக் குறைந்த அளவு கொழுப்புச் சத்து கொண்ட பேரிச்சை உடலின் எடையை கூடாமலும் குறையாமலும் பராமரிக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பவர் ஹவுஸ் போல் செயல்படும். குறிப்பாக, ஜிம்முக்கு செல்கின்றவர்களுக்கு மிகச் சிறந்த உணவாக பேரிச்சை இருக்கும். குளிர்காலத்தில் தினமும் கொஞ்சம் பேரிச்சைப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், உடல் லேசாக வெதுவெதுப்பாகவும் கதகதப்பாகவும் இருக்கும். அதனால் குளிர்கால ஸ்நாக்ஸ்களில் பேரிச்சை பெஸ்ட் சாய்ஸ்.

பாதாமும் வால்நட்டும்
குளிர்காலங்களில் பாதாமும் வால்நட்டும் நம்முடைய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இன்சுலின் சுரப்பை சீராக சரியன அளவில் இருக்கச் செய்கிறது. அதேபோல் உடலுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது. பாதாம், வால்நட் இரண்டுமே கொஞ்சம் கூடுதல் எண்ணெய்ப் பசையாக இருப்பது போல் உணர்ந்தால், அதனுடன் ஆப்ரிகாட் பழத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ராகி
வேகன் டயட் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த சாய்ஸ் இந்த ராகி தான். இதழல்அதிக அளவிலான கால்சியம் நிறைந்திருக்கிறது. பால் சாப்பிடாதவர்களுக்கு உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கப்பதற்கு ராகியைப் பயன்படுத்தலாம்.
ராகி ரத்தசோகை மற்றும் ரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து உடலை வலிமையாக வைத்திருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்கும்.

கம்பு
சிறுதானிய வகைகளில் மிக முக்கியமான ஒரு தானியமாக கம்பு இருக்கிறது. இதில் நிறைந்த கொழுப்புச் சத்தும் அதிக அளவிலான நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தும் அடங்கியிருக்கிறது. அதிக அளவில் இரும்புச் சத்து இருப்பதால் ரத்தசோகை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம். நம்முடைய உணவில் சிறுதானியங்களை உணவில் வழக்கமாக்கிக் கொண்டால், எலும்புகளும் வலுவடையும்.



Click it and Unblock the Notifications