Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
காபி அல்லது டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்க வேண்டியதன் அவசியம்
தண்ணீர்தான் உடல் இயங்க தேவையான பெட்ரோலாகும். இது இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. காபி, டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பது அவற்றால் ஏற்படும் தீமைகளை தடுத்து அவற்றின் நல்ல சத்துக்
உலகம் முழுவதும் உள்ள பலரால் குடிக்கப்படும் பானங்கள் காபியும், டீயும்தான். ஒரு நாளைக்கு ஒன்று என தொடங்கி ஏழு, எட்டு முறை என காபி/டீ குடிப்பவர்கள் பலர் உள்ளனர். காபி, டீ குடிப்பதில் நன்மை, தீமை என இரண்டுமே உள்ளது. இருப்பினும் தீமைகள் அதிகமாகாமல் இருக்க சில எளிய வழிகளை மேற்கொள்ளலாம். அதில் ஒன்றுதான் காபி குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது.

தண்ணீர்தான் உடல் இயங்க தேவையான பெட்ரோலாகும். இது இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. காபி, டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பது அவற்றால் ஏற்படும் தீமைகளை தடுத்து அவற்றின் நல்ல சத்துக்களை மட்டும் நம் உடலுக்கு அளிக்கும். இந்த பதிவில் காபி, டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

நீர்
காபி, டீ என்பது வெறும் பானங்கள் அல்ல அவை மக்களின் வாழ்வோடு கலந்த ஒரு உணர்வாகும் குறிப்பாக இந்திய மக்களுக்கு. ஆனால் அதன் பாதிப்புகளில் இருந்து நீர் நம்மை பாதுகாக்கும் நீர் இயற்கை நமக்கு அளித்த வரமாகும். இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. அதனால்தான் மருத்துவர்கள் காபி, டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கும்படி அறிவுறுத்துகிறார்கள். இதனால் பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நீர் போதுமா?
காபி மற்றும் டீ இரண்டும் அசிடிட்டி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் மேலும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். இதற்கு இதிலிருந்து தப்பிக்க சில நிமிடங்களுக்கு முன் நீர் குடியுங்கள். இது உங்களை பாதுகாக்க போதும்.

பற்கள் ஆரோக்கியம்
காபி மற்றும் டீ இரண்டிலும் டேனின் என்னும் ஒரு இரசாயனம் உள்ளது. இது பற்களின் நிறத்தை மாற்றக்கூடியது. நீங்கள் காபி/டீ குடிக்கும்போது அவற்றில் உள்ள ரசாயனம் உங்கள் பற்கள் மீது ஒரு படலத்தை உருவாக்குகிறது. இதுதான் பற்களின் நிறத்தை மாற்றுகிறது. எனவே காபி/டீ குடிக்க 15 நிமிடங்களுக்கு முன் ஒரு டம்ளர் நீர் குடிப்பது அதன் மீது ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் இது உங்கள் பற்களை கரையாவதில் இருந்து பாதுகாக்கும்.

ஹைட்ரேஷன்
காலை எழுந்ததுமே படுக்கையில் இருந்தபடியே காபி அல்லது டீ குடிப்பது உங்களை உற்சாகப்படுத்தும் என்று நீங்கள் எண்ணினால் உங்கள் எண்ணம் தவறானதாகும். வெறும் வயிற்றில் காபி/டீ குடிப்பது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை குறைக்கும். இதனால் பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படக்கூடும். எனவே காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் காபி குடியுங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கும்.

அசிடிட்டி
பலருக்கும் காபி, டீ குடித்த பிறகு மார்பு பகுதியில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம். இதற்கு காரணம் அவற்றில் உள்ள அமிலத்தன்மையாகும். காபியின் பிஹெச் அளவு 5, அதேபோல டீயின் பிஹெச் அளவு 6 ஆகும். ஆனால் நீரின் பிஹெச் அளவு 7 ஆகும். எனவே தண்ணீர் குடித்துவிட்டு காபி, டீ குடிப்பது அமிலத்தன்மையை குறைக்கும்.

அல்சர்
எவ்வளவு அதிகம் காபி குடிக்கிறோமோ அந்த அளவு வயிற்றுப்புண் ஏற்படுவதற்கான வாய்ப்பை நாமே அதிகரித்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். மருத்துவர்களை பொறுத்தவரை அதிகம் காபி மற்றும் டீத்தூளில் அதிக அமிலத்தன்மை இருக்கும். இதனால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது. தண்ணீர் குடிப்பது இந்த அமிலத்தன்மையை குறைக்கும் மேலும் வயிற்றுப்புண் ஏற்படாதவாறு குடலின் மீது பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும்.

சரும பாதிப்பு
காபி மற்றும் டீ உங்கள் சருமத்திற்கு சில நன்மைகளை வழங்கக்கூடியது. ஆனால் அவை அதிகமாக உபயோகிக்கப்படும் போது உங்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் உங்கள் முகத்தில் சுருக்கங்கள் தோன்றலாம். இதனை தடுக்க தண்ணீர் குடிப்பது பல உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு, பொலிவுறவும் செய்யும்.

சோர்வு
காபி மற்றும் டீ குடித்தவுடன் உற்சாகமாக உணரச்செய்யலாம் ஆனால் அரைமணி நேரம் கழித்து நீங்கள் மீண்டும் சோர்வடைந்து விடுவீர்கள். காரணம் அதிலுள்ள தெர்போமைன் ஆகும். காபி குடித்த 25 நிமிடங்களுக்கு பின் இது இரத்தத்தில் கரைந்து உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவே காபி/டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது தெர்போமைனை தடுக்கும்.

பக்கவிளைவுகள்
காபி மற்றும் டீ உற்சாகத்தை வழங்கக்கூடிய பானங்களாக இருந்தாலும் அவற்றால் சில தீமைகள் இருப்பது மறுக்கமுடியாத உண்மையாகும். காபி/டீ குடிப்பதற்கு முன் மட்டுமல்ல குடித்த பின்னும் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications