For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடல் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் இந்த பொருளை உணவில் சேர்த்தாலே போதும்

தற்போது மஞ்சள் நிற கடுகும் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள்தான்.

|

பழங்காலம் முதலே நமது உணவுகளில் முக்கியப்பங்கு வகிக்கும் ஒரு மசாலா பொருள்என்று கடுகுதான். கடுகை உபயோகப்படுத்தாமல் செய்யும் உணவுகள் மிக மிக சொற்பமே. ஏனெனில் அது உணவின் சுவையை அதிகரிப்பதுடன் தனித்துவமான சுவையை கொண்டது. கடுகு இவ்வளவு முக்கிய பொருளாக நம் உணவு முறையில் இருக்க காரணம் அதன் சுவை மட்டுமல்ல அது வழங்கும் ஆரோக்கிய பலன்களும்தான்.

Health benefits of Yellow Mustard

நாம் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருவது கருப்பு கடுகைதான். ஆனால் தற்போது மஞ்சள் நிற கடுகும் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள்தான். மஞ்சள் கடுகில் புரோட்டின், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளது.இது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த பதிவில் மஞ்சள் கடுகின் அற்புத பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தசைப்பிடிப்புகள்

தசைப்பிடிப்புகள்

மஞ்சள் கடுகு அனைத்து விதமான தசைப்பிடிப்புகளை சரிசெய்ய கூடியது. தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் கடுகு பொடியை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமையாக்கும், தசைகளை வலுப்படுத்தும். அதற்கு காரணம் இதில் உள்ள பொட்டாசியமும், கால்சியமும்.

சுவாசக்கோளாறுகள்

சுவாசக்கோளாறுகள்

இது சுவாசக்குழாய்களில் உள்ள சிக்கல்களை சரிசெய்து எளிதில் சுவாசிக்க உதவ கூடியது. கடுகு விதைகளை சுடுநீரில் போட்டு அந்த நீராவியை சுவாசிப்பது அனைத்து சுவாச பிரச்சினைகளையும் குணாமக்கும், அதேபோல கடுகு டீயில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் நுரையீரல் பிரச்சினைகளை சரிசெய்யக்கூடும்.

உடல் வலி

உடல் வலி

மஞ்சள் கடுகிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அந்த விதமான உடல் வலிகளையும் விரைவில் குணமாக்கக்கூடியது, குறிப்பாக மூட்டுவலியை விரைவில் குணமாக்கும். வலி மிகுந்த இடங்களில் இந்த எண்ணெயை கொண்டு 10 முதல் 15 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். இது தினமும் இதனை இரண்டு முறை செய்து வந்தால் எந்த வலியாக இருந்தாலும் உடனடியாக குணமாகும்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

கொலஸ்ட்ரால் அளவுகளை சமநிலைப்படுத்துவதில் உதவுகின்ற மோனோனுசுட்டரேட் மற்றும் பல நிறைவுறாத கொழுப்புகள் மஞ்சள் கடுகில் அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கிற LDL என்னும் கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்ற உதவுவதோடு மேலும் HDL என்னும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. 9இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.

MOST READ: திடீரென ட்விட்டரில் தங்கள் உள்ளாடை படங்களை பதிவிட்டு வரும் பெண்கள். ஏன்?

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

உங்கள் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மஞ்சள் கடுகு ஒரு மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாகும். ஒரு ஸ்பூன் மஞ்சள் கடுகு எண்ணெயை உங்கள் வாயில் ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே இருக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் உங்கள் வாயை நன்கு கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் உடனடியாக மறையும்.

புற்றுநோய்

புற்றுநோய்

மஞ்சள் கடுகில் முக்கியமான பைடோக்கெமிக்கலான க்ளுகோசினோலைட்ஸ் என்னும் பொருள் உள்ளது. ஆய்வுகளின் படி இது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பா கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். தினமும் உங்கள் உணவில் மஞ்சள் கடுகு எண்ணெய் அல்லது மஞ்சள் கடுகு பொடியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வளர்ச்சிதை மாற்றம்

வளர்ச்சிதை மாற்றம்

மஞ்சள் கடுகில் மக்னீசியம் அதிகளவு உள்ளது. இது நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ் நம் உடலுக்கு தேவையான சரியான கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் கொழுப்புகளை வழங்குகிறது.

முடிவளர்ச்சி

முடிவளர்ச்சி

மஞ்சள் கடுகில் பீட்டா கரோட்டின், புரோட்டின், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது முடியை வேகமாக வளர வைப்பதுடன் அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. உங்கள் தலையை மஞ்சள் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்தால் அது உங்கள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும்.

MOST READ: இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of Yellow Mustard

Yellow mustard become popular because of the unique, strong and spicy flavor. It has numerous health benefits.
Story first published: Saturday, November 17, 2018, 17:31 [IST]
Desktop Bottom Promotion