Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
முட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா? நீங்களே பாருங்க..
நம்முடைய உடலுக்குத் தேவையான கால்சியம் தேவையை நிறைவு செய்ய முட்டை ஓட்டை எப்படி சாப்பிடலாம் என்று இங்கே விவரமாக விளக்கப்பட்டுள்ளது.
நாம் எல்லாரும் உணவில் முட்டையை சேர்த்து கொள்வோம். ஏனெனில் இதில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளது.

ஆனால் அப்படிப்பட்ட முட்டையின் ஓட்டைக் கூட சாப்பிடலாமா? அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளதா? நீங்கள் முட்டையின் ஓட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கள் நல்ல உடல் நலனை பெற முடியும்.

ஊட்டச்சத்துகள்
முட்டைக் கூட்டை வீணாக கீழே போடாமல் நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முட்டையை உபயோகித்த பிறகு எஞ்சியுள்ள முட்டை ஓட்டை பொடியாக்கி சாப்பிடலாம்.
முட்டை ஓட்டின் பயன்கள்

கால்சியம்
முட்டை ஓட்டில் கால்சியம் அல்லது கால்சியம் கார்பனேட் உள்ளது. 95% கால்சியம் கார்பனேட் இதில் உள்ளது.
இந்த முட்டை ஓடு என்பது எலும்புகள் மற்றும் பற்களுக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள கால்சியம் சத்து எலும்புகள், பற்களின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது.

கால்சியம் பற்றாக்குறை
முட்டை ஓட்டின் பாதி கூடே போதும் நமது தினசரி கால்சியம் அளவை தருகிறது. இதை நீங்கள் பவுடர் வடிவத்தில் எடுக்கும் போது சீரணிக்க ஏதுவாக அமைகிறது.
இந்த NCBI ஆய்வு படி முட்டை கூடுகளில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் அடர்த்தியில் நேர்மறை விளைவை ஏற்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் சிகச்சைக்கு உதவுகிறது. எனவே உங்கள் கால்சியம் பற்றாக்குறையை போக்க முட்டை கூடு ஒரு சிறந்த உணவாகும்.

முட்டை கூட்டை சாப்பிடுவது எப்படி
முட்டை கூட்டை சாப்பிடுவதற்கு முன் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இது பாக்டீரியா இல்லாமல் இருக்க உதவும்.
பயன்படுத்தும் முறை
முட்டை கூட்டை தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இது முட்டை கூட்டில் உள்ள பாக்டீரியாவை அழித்து விடும்.
குறிப்பு : முட்டை கூட்டின் உள் புறத்தில் உள்ள தோலை நீக்காதீர்கள். ஏனெனில் இது அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

உலர வையுங்கள்
சுத்தம் செய்த பிறகு முட்டை ஓட்டை ஓவனில் வைத்து 10 நிமிடங்கள் அதாவது 180 டிகிரி வெப்பநிலையில் வைத்து சூடுபடுத்தவும். இது பாக்டீரியாவை போக்க உதவி செய்யும்.
குறிப்பு : நீங்கள் சரியாக சூடுபடுத்தி சுத்தம் செய்து இருந்தால் முட்டை ஓட்டை பொடியாக்குவது எளிதாகி விடும்.
இப்பொழுது முட்டை ஓட்டை காபி அரைக்கும் மிஷினில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதை ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளுங்கள். இதை நீங்கள் மிக்ஸியில் போட்டு கூட பவுடராக்கி கொள்ளுங்கள்.

பொடியாக்கப்பட்ட முட்டை ஓடு
இதற்கு பிறகு உங்கள் விருப்பமான ஸ்மூத்தி உணவுகளில் இந்த முட்டை ஓட்டின் பொடியை சேர்த்து கால்சியம் சத்தை தாராளமாக பெறலாம்.
ஒரு வாரத்திற்கு 1 டேபிள் ஸ்பூன் போதுமானது. இது மாதிரி பீட்சா போன்றவற்றில் கூட இந்த முட்டை ஓட்டின் பொடியை நீங்கள் தூவிக் கொள்ளலாம்.
1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் அல்லது ஆரஞ்சு ஜூஸில் சேர்த்து கூட உங்கள் கால்சியம் பற்றாக்குறையை போக்கி கொள்ளலாம்.
பாஸ்தா போன்றவற்றில் கூட ப்ளேவர்க்காக சேர்த்து கொள்ளுங்கள்.

கால்சியம் மாத்திரைகள்
உங்களுக்கு கால்சியம் பற்றாக்குறை இருந்தால் இதை கால்சியம் மாத்திரைகளாக கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால்சியம் மாத்திரைகளுக்கு பதிலாக முட்டை ஓட்டை உணவில் சேர்த்து பயன் பெறலாம்.
எனவே இனி முட்டை ஓட்டை தூக்கி எறியாமல் இந்த வழிகளில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications