Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
காரமான உணவுகள் வழங்கும் அற்புத நன்மைகள்
உலகம் முழுவதும் கார உணவுகள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டு வருகிறது. காரமான உணவு சாப்பிடுபவர்கள் உடலளவிலும், மனதளவிலும் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. இங்கே காரமான உணவுகளால
சுவையான உணவுகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் காரசாரமான உணவென்றால் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுபவர்கள்தான் இங்கு ஏராளம். குறிப்பாக தென்னிந்தியாவை பொறுத்தவரையில் அறுசுவைகளில் முக்கியமான சுவை காரம்தான். தென்னிந்திய உணவுகளின் சிறப்பும் அதுதான். இது சில வயிறுக்கோளாறுகளை ஏற்படுத்தினாலும் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது.

உலகம் முழுவதும் கார உணவுகள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டு வருகிறது. இந்த வகை உணவுகளில் சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் அதிகம். பொதுவாகவே காரமான உணவு சாப்பிடுபவர்கள் உடலளவிலும், மனதளவிலும் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. இங்கே காரமான உணவுகளால் கிடைக்கும் பயன்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

வீக்கத்தை குறைத்தல்
பிரபல நாளிதழ் ஒன்று உள்ளுக்குள் ஏற்படும் வீக்கத்தை " இரகசிய கொலையாளி " என்று கூறியுள்ளது. ஏனெனில் இது சர்க்கரை நோய், அல்சைமர், இதயநோய், மூட்டுவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால் மசாலா பொருட்களாக பயன்படுத்தப்படும் மஞ்சள், பட்டை, கிராம்பு, லவங்கம், இஞ்சி போன்றவை சிறந்த ஆக்சிஜனேற்றியாக மட்டுமில்லாமல் வீக்கத்தை குறைக்கவும் பயன்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மஞ்சளில் உள்ள குர்குமின் வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

எடை குறைப்பு
மிளகில் இருக்கும் கேப்சைசின் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரிகளை விரைவில் எரிக்க பயன்படுகிறது. இதன் காரணம் கேப்சைசின் உங்கள் உடல் சூட்டை அதிகரிப்பதன் மூலம் இதய துடிப்பை அதிகரிக்கிறது. ஆய்வுகளின் படி காரமான உணவுகளை சாப்பிடுவர்களின் கலோரிகள் விரைவில் எரிக்கப்டுவதாக முடிவுகள் தெரிவிக்கிறது.

இரத்த அழுத்தம்
காரமான உணவுகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்ககூடும். காரமான உணவு உண்ணும்போது, உங்கள் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு இதயம் வேகமாக இயங்க வைக்கப்படுகிறது. மேலும் இவற்றில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

புற்றுநோய்
காரமான உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாகும். மிளகாய், மிளகு போன்ற பொருட்களில் உள்ள கேப்சைசின் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடக்கூடியது. குறிப்பாக கேப்சைசின் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்வது எலும்பு, குடல், மற்றும் மார்பக புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

பசி
பசியில்லாத போதும் பசி எடுப்பது உணர்வு உள்ளதா? லவங்கம் போன்ற மசாலாப்பொருட்கள் உங்களின் இரத்த அழுத்தத்தை சீராக்குவதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் அவசியமற்ற பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது. இதேபோல துளசி, கிராம்பு, புதினா போன்ற பொருட்களும் உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்த உதவும்.

வளர்சிதை மாற்றம்
40 வயதிற்கு பின் உங்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக பராமரிக்க பல்வேறு வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் தசைகளின் சிதைவால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது. கார உணவுகள் இதனை சீராக பராமரிக்க உங்களுக்கு உதவலாம். இது உங்கள் பசியுணர்வை தூண்டும். மிளகு இந்த வேலையை சிறப்பாக செய்யும். வளர்சிதை மாற்றத்தை சீராக்க உணவுகள் மட்டும் போதாது உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.

அதிக ஊட்டச்சத்துக்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகள்தான் ஊட்டச்சத்துக்களை வழங்கும் என நீங்கள் நினைத்தால் அதனுடன் இதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணம் கருப்பு மிளகுதான். இதிலுள்ள கர்கமின் உங்கள் குணமடையும் வேகத்தையும் அதிகரிக்கும்.

வலி நிவாரணி
உங்களுக்கு தெரியுமா நீங்கள் மிளகாய் சாப்பிடும்போது உங்கள் வாயில் கார உணர்வை ஏற்படுத்தும் கேப்சைசின் மிகச்சிறந்த வலிநிவாரணியாகும். உங்கள் உணவில் மிளகு மற்றும் மிளகாய் அதிகம் சேர்த்து கொள்வது தசை மற்றும் மூட்டு வலிகளை ஏற்படுத்தும். மேலும் முடக்கு வாதம், பைப்ரோமியால்ஜியா போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.

பாக்டீரியா தொற்று
சீரகம் மற்றும் மஞ்சள் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கும். ஆய்வுகளின் படி இந்த மசாலா பொருட்களில் அதிக ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியம்
அதிக காரமான உணவு சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இது நம்பக்கூடியதுதான் ஏனெனில் மருத்துவர்கள் இந்த ஆராய்ச்சியில் கேப்சினிஸோடை கண்டறிந்தனர். இவை பிளாஸ்மாவில் உள்ள கொழுப்புகளை குறைக்கும்.

மனஅழுத்தம்
காரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு உங்கள் மனஅழுத்தம் குறைவதை உணர்ந்திருக்கிறீர்களா? இது உங்கள் மூளையை என்டோர்பின் மற்றும் டொபமைனை உற்பத்தி செய்ய தூண்டுகிறது.இவைதான் உங்கள் மனஅழுத்தத்தை போக்கி மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றக்கூடிய ஹார்மோன்கள் ஆகும்.

சளி மற்றும் காய்ச்சல்
கேப்சைசின் வேர்வை அதிகமாக சுரக்க உதவுகிறது மேலும் சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கிறது. மேலும் இது மூக்கடைப்பை சரி செய்ய உதவுகிறது. சைனஸ் போன்ற மூக்கு தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது. சளிக்கு சிறந்த மருந்து மிளகுதான்.



Click it and Unblock the Notifications