For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத பாத்திருக்கீங்களா? காயா இருக்கும்போது விஷமாவும் பழுத்தா மருந்தாகவும் மாறும் அதிசய பழம்

|

ஆக்கி என்ற இந்த பழம் பிளிக்கியா சபிடா என்று அழைக்கப்படுகிறது. இது ஜமைக்கா என்ற நாட்டில் காணப்படுகிறது.

Ackee: Benefits, Nutritional Value & Healthy Recipes

கானாவின் ட்வி/ ஆகான் மொழியில் இருந்து இதன் பெயர் பெறப்பட்டாலும், இதன் விஞ்ஞான பெயர் கேப்டன் வில்லியம் பிளிக்கிற்கு மரியாதை செலுத்துகிறது, இவர் தான் இந்த பழங்களை மேற்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆக்கிப் பழம்

ஆக்கிப் பழம்

இந்த ஆக்கி மரம் வெறும் பழத்தை மட்டும் தருவதோடு மருத்துவ துறை, பெர்மியூம், பர்னிச்சர் மற்றும் துறையிலும் பயன்படுகிறது. இந்த பழம் பழுக்காத போது பச்சை நிறத்திலும் பார்ப்பதற்கு பேரிக்காய் வடிவிலும் காணப்படும். இதை பழுக்காத நிலையில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதில் ஹைக்கோகிளைசின் என்ற நச்சு காணப்படும்.

இந்த பழம் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளிலிருந்து ஆரஞ்சு அப்புறம் சிவப்பாக மாறி விடும். முழுமையாக பழுத்த நிலையில், மூன்று கருத்த விதைகளுடன் மஞ்சள் நிற பஞ்சு போன்ற சதைப்பகுதியை கொண்டிருக்கும்.

ஆக்கி என்ற இந்த பழம் கரீபியன் சுவையுடன் ஏராளமான ஊட்டச்சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. ஜமைக்கா நாட்டிற்கு இதன் உற்பத்தி நல்ல வருமானத்தை ஈட்டித் தரக் கூடியது.

MOST READ: இன்னைக்கு இந்த ராசிக்காரர் எது செஞ்சாலும் தடங்கலாவே தான் முடியும்... பார்த்து கவனமா செய்ங்க...

ஆக்கி பழத்தின் நன்மைகள்

ஆக்கி பழத்தின் நன்மைகள்

ஆக்கி பழத்தில் நிறைய விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன.

சீரண சக்தியை அதிகரித்தல்

ஆக்கி பழத்தில் நிறைய நார்ச்சத்துகள் காணப்படுகின்றன. இது சீரண சக்தியை அதிகரிக்கிறது. எனவே இந்த நார்ச்சத்துகள் குடலை சீராக இயக்கி உணவை சரியாக சீரணிக்க உதவுகிறது. மலச்சிக்கலை தவிர்த்து மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. இதைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம்.

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை

இதன் கார்போஹைட்ரேட் பொருளால் டைப் 2 டயாபட்டீஸ் நோய்க்கு மருந்தாகிறது.இதில் உள்ள பாலிசாக்ரைடு அல்லது கார்போஹைட்ரேட் பொருள் உடைந்து போதுமான ஆற்றலையும் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதன் நார்ச்சத்துகள் அதாவது பாலி சாக்ரைடு பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இதன் முக்கியமான இரண்டு ஊட்டச்சத்துக்களான விட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் மற்றும் ஜிங்க் போன்றவை நோயெதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. ஆக்கி இந்த இரண்டு ஊட்டச்சத்துகளின் சேமிப்பு கிடங்கு என சொல்லலாம். விட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

MOST READ: வயிற்றில் கரு உண்டாகும்போது பிறப்புறுப்பில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும்?... வேறு அறிகுறிகள் என்ன?

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

ஆக்கி பழத்தில் உள்ள மற்றொரு ஊட்டச்சத்து பொட்டாசியம் ஆகும். இந்த பொட்டாசியம் இஇல்லாமல் நம் உடம்பு எந்த ஒரு வேலையையும் செய்ய இயலாது. இதன் முக்கிய வேலை வாசோடைலேசன் இரத்த குழாயை திறந்து இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

ஆக்கியில் இரும்புச் சத்து உள்ளது. இது ஆக்ஸிஜனை எடுத்து கொண்டு உடல் பாகங்களுக்கு செல்கிறது. இந்த பொட்டாசியம், இரும்புச் சத்து இரண்டும் இருப்பதால் இரத்த ஓட்டம் சீராகி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ஆத்ரோஸ் கிளிரோஸிஸால் ஏற்படும் இறப்பை குறைக்கிறது. மேலும் அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

தசைகளின் மீள்ச்சி

தசைகளின் மீள்ச்சி

புரோட்டீன் தான் நமது தசைகளின் கட்டுமானத்திற்கும் திசுவிற்கும் உதவுகிறது. தசைகளின் மீள்ச்சிக்கு, உடல் எடை குறைப்பிற்கு சிறந்தது. அதன் படி பார்த்தால் ஆக்கி பழம் புரோட்டீன் நிறைந்த ஒன்றாகும். இதில் புரோட்டீன் மட்டுமல்ல நிறைய ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன.

எலும்புகளின் வலிமைக்கு

எலும்புகளின் வலிமைக்கு

வயசாக வயசாக நமது எலும்பு பலவீனமடைய ஆரம்பித்து விடும். எனவே எலும்பை காக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டியிருக்கும். ஆக்கி பழத்தில் இரும்புச் சத்து, ஜிங்க், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பை காக்கும் சத்துகள் உள்ளன. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் டிமினரலைஷேசன் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே இந்த தாதுக்களை பெற தேவையான அளவு ஆக்கி பழத்தை நீங்கள் சாப்பிட்டு வரலாம்.

MOST READ: உங்கள் பிறந்த தேதிக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை படிங்க...

அனிமியாவை தடுக்கிறது

அனிமியாவை தடுக்கிறது

இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படும் போது தலைவலி, உடம்பு வலி போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் உங்கள் உணவில் நீங்கள் போதுமான அளவு இரும்புச் சத்து எடுத்துக் கொள்ளாதே காரணமாகும். ஆக்கி பழத்தில் போதுமான அளவு இரும்புச் சத்து, போலிக் அமிலம் போன்றவை இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள விட்டமின் சி நமது குடல் உணவில் உள்ள இரும்புச் சத்தை உறிஞ்சிக்க உதவுகிறது. எனவே இது அனிமியா போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.

எலக்ட்ரோலைட் சமநிலை

எலக்ட்ரோலைட் சமநிலை

உங்கள் உடம்பு அதிகப்படியான உடல் உழைப்பால் நீர்ச்சத்து இன்றி போகலாம். இது எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் நமது உடலில் உள்ள சோடியம், பொட்டாசியத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டு தசைகளில் வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. ஏனெனில் இந்த சோடியம் தான் தசைகளின் சுருக்கத்திற்கும், பொட்டாசியம் தசைகளின் விரிவாக்கத்திற்கும் உதவுகிறது. எனவே இந்த நீர்ச்சத்து இல்லாமையை ஆக்கி பழம் போக்க உதவுகிறது. இதனுடன் சேர்த்து தண்ணீர் நிறைய குடித்து வாருங்கள்.

சரும அழற்சி

சரும அழற்சி

ஆய்வின் படி, ஆக்கி மரத்தின் இலை மற்றும் வேர்ப்பகுதிகளின் சாறு சரும நோயான ஸ்டெஃபிலோகோக்கஸ் ஆரியஸை என்ற நோயிலிருந்து காக்கிறது. தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது.

ஆக்கி பழ ஊட்டச்சத்து அளவுகள்

ஆக்கி பழ ஊட்டச்சத்து அளவுகள்

புரோட்டீன் 2.9 கிராம் - 8.9 கிராம்

கொழுப்பு - 1 5.2 கிராம்

கார்போஹைட்ரேட் - 0.8 கிராம்

நார்ச்சத்து - 2.7 கிராம்

இரும்புச் சத்து - 5 மில்லி கிராம்

பொட்டாசியம் - 2 70 மில்லி கிராம்

பாஸ்பரஸ் - 9 8 மில்லி கிராம்

கால்சியம் - 35 மில்லி கிராம் - 83 மில்லி கிராம்

ஜிங்க் - 1 மில்லி கிராம்

சோடியம் - 2 40 மில்லி கிராம்

நியசின் - 1.1 கிராம் - 3.9 மில்லி கிராம்

தயமின் - 0.03 மில்லி கிராம்

ரிபோப்ளவின் - 0.03 மில்லி கிராம்

100 கிராம் ஆக்கி பழத்தில் 140 கலோரிகள் உள்ளன. ஆக்கி பழத்தில் விட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தில் கொலஸ்ட்ரால் கிடையாது. சேச்சுரேட்டேடு கொழுப்பும் இல்லாமல் இருப்பதால் இதை உங்கள் டயட்டில் தாராளமாக சேர்த்து கொள்ளுங்கள்.

MOST READ: மூக்கடைச்சு இப்படி நமநமன்னு இருக்கா? இதுக்கு எதுக்கு மாத்திரை... இதோ வீட்டு வைத்தியம் இருக்கே...

சுவை

சுவை

இதை சுவைக்கும் போது லைட்டான க்ரீமி சுவையுடன் பட்டர் சுவையுடனும் காணப்படும். சமைத்த இந்த பழம் சால்ட்ப்ஷ், முட்டை மற்றும் நட்ஸ் உடன் சேர்ந்து சாப்பிட நன்றாக இருக்கும். மேலும் இதன் சுவையால் மற்ற உணவுப் பதார்த்தங்களில் கூட சேர்த்து கொள்ளலாம்.

ஆக்கி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

ஆக்கி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

இதை நன்கு பழுத்த நிலையில் மட்டுமே சாப்பிட வேண்டும். காயாக இருக்கும் போது சாப்பிட கூடாது. ஏனெனில் இதில் நச்சுத்தன்மை வாய்ந்தது. காய்கறிகள் அல்லது மீன்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இதை எப்படி சமைப்பது?

இதை எப்படி சமைப்பது?

கரோபியர்கள் மற்றும் ஜமைக்கர்களின் விருப்பமான உணவாக ஆக்கி பழமும் சால்ட் ப்ஷ்ம் உள்ளது. மேலும் சூப், சாலட், பாஸ்ட்ரி, ப்ரைட்டர்ஸ் போன்ற டிஷ்களிலும் இது பயன்படுகிறது.

ஆக்கி பழ ரெசிபிகள்

ஆக்கி பழ ரெசிபிகள்

ஜமைக்கர்களின் இந்த சால்ட் ஃப்ஷ் மற்றும் ஆக்கி பழம் ரெசிபி ஜமைக்காவில் மட்டுமல்ல இதன் சுவை உலகமெங்கும் பரவி இருக்கிறது.

ஆக்கி மற்றும் சால்ட் ஃப்ஷ்

தேவையான பொருட்கள்

2 20 கிராம் சால்ட்ப்ஷ் அல்லது சால்ட்டேடு காட்பிஷ்

12 பழுத்த ஆக்கி பழங்கள்

1 சிறிய நறுக்கிய தக்காளி

1 பெரிய நறுக்கிய வெங்காயம்

2 நுனிக்கிய பூண்டு பற்கள்

3 சிறிய ஸ்காட்ச் பொன்னேட் மிளகுத்தூள்

2 ஸ்பிரிங் தைம்

1 சிறிய இனிப்பு மிளகாய்

1 டீ ஸ்பூன் கருப்பு மிளகுத்தூள்

தேங்காய் எண்ணெய் வதக்குவதற்கு

செய்முறை

சால்ட்ப்ஷ்யை குளிர்ந்த நீரில் கழுவி உப்பை நீக்கி கொள்ளுங்கள்

ஆக்கி பழத்தில் உள்ள கருப்பு விதைகளை நீக்கி சிவப்பு சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

நீக்கிய சதைப்பகுதியை இரண்டு நிமிடங்கள் ஓடும் நீரில் கழுவவும்

இப்பொழுது ஆக்கியை நீரில் போட்டு வேக வையுங்கள். இது வேகமாக வெந்து விடும். இதன் சதைப்பகுதி மஞ்சள் கலரில் மாறும்.

வேக வைத்த பழத்தை தனியாக எடுத்து வைக்கவும்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெங்காயம், இனிப்பு சிவப்பு மிளகு போன்றவற்றை போட்டு வதக்குங்கள். தக்காளியையும் போட்டு வதக்குங்கள்.

இப்பொழுது இதனுடன் ஆக்கி மற்றும் மீனை சேர்த்து சூடாக்கவும்.

அப்புறம் சமைத்ததை தட்டில் பரப்பி வெங்காயம், மிளகு சேர்த்து அலங்கரிக்கவும்.

MOST READ: அடிக்கடி உச்சா வருதா? அப்ப இதுதான் காரணம்... பூண்டை பச்சையா சாப்பிடுங்க சரியாகிடும்...

வேகன் ஆக்கி ரெசிபி

வேகன் ஆக்கி ரெசிபி

இது ஒரு வித்தியாசமான ரெசிபி ஆகும். இதன் சுவையும் தனியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

1 கேன் ஆக்கி பழத்தை எடுத்து கொள்ளுங்கள்

1 கப் நறுக்கிய தக்காளியை எடுத்து கொள்ளுங்கள்

1 கப் நறுக்கிய கீரை

1/2 கப் நறுக்கிய பச்சை வெங்காயம்

1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி

2 டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்

1 டேபிள் ஸ்பூன் பூண்டு

1 டேபிள் ஸ்பூன் சீரகம்

1/2 டீ ஸ்பூன் இந்திய கருப்பு உப்பு (தேவைக்கேற்ப)

உப்பு மற்றும் மிளகு தேவைக்கேற்ப

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது வேகன் பட்டர்

தயாரிக்கும் முறை

கடாயை அடுப்பில் வைத்து மீடியமான தீயில் ஆலிவ் ஆயில் மற்றும் வேகன் பட்டரை சேர்த்து பூண்டு, பச்சை வெங்காயம் போட்டு வதக்குங்கள்.

அதன் வாசனை வரும் வரை வதக்கவும், பிறகு ஆக்கி பழத்தையும், தக்காளியையும் சேருங்கள்.

அதனுடன் கீரை, எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.

சூடாக சமைத்து பரிமாறுங்கள்

எச்சரிக்கை விஷயங்கள்

எச்சரிக்கை விஷயங்கள்

இந்த ஆக்கி பழத்தில் நிறைய நன்மைகள் கிடைத்தாலும் பழுக்காத நிலையில் இது ஹைப்போ கிளைசின் என்ற நச்சை கொண்டுள்ளது. எனவே இந்த பழத்தை வாங்குவதற்கு முன் அது நன்றாக பழுத்து உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அதே மாதிரி இதை பயன்படுத்துவதற்கு முன் சிவப்பு நிற நார்கள் ரீமுவ் ஆகும் படி கழுவி சாப்பிட வேண்டும். கருப்பு விதைகளையும் நீக்கி விடுங்கள். ஏனெனில் அதுவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. விதைகளை நீக்கி அதன் சாற்றை சமையலுக்கு பயன்படுத்தலாம்.

MOST READ: அட! முகத்துக்கு எதுவுமே தடவ வேண்டாம்... ஐஸ் கட்டி மட்டும் போதும்... மாற்றத்தை நீங்களே பாருங்க

விஷத்தன்மையின் அறிகுறிகள்

விஷத்தன்மையின் அறிகுறிகள்

இந்த பழத்தை பழுக்காத நிலையில் சாப்பிட்டால்

வாந்தி

ஹைப்போதெர்மியா

அதிக தூக்கம் போன்றவை ஏற்படும்.

சில நேரங்களில் கோமா அல்லது இறப்பை கூட ஏற்படுத்தக் கூடும். எனவே பழுக்காத பழத்தை நீங்கள் சாப்பிட்டு விட்டால் உடனே மருத்துவரை காண விரையுங்கள். அவர் வாந்தியை கட்டுப்படுத்த சிகிச்சை அளிப்பார். செயலாக்கப்பட்ட கரித்தூளை பயன்படுத்தி உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்க உதவி செய்வார். வேண்டும் என்றால் பென்ஸோடையாஸ்பைன்ஸ் மருந்தை பயன்படுத்தி சரி செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ackee: Benefits, Nutritional Value & Healthy Recipes

ackee tree (evergreen) which is used not just for its fruits but also for making medicines, perfumes, furniture & tools.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more